Tuesday, May 02, 2006

106: சித்திரை திருவிழா முதல் நாள்


கடந்த ஞாயிறு (30-04-2006) கொடியேற்றத்துடன் கோலாகலமாக சித்திரை திருவிழா ஆரம்பமானது.

இன்று (01.05.2006) அம்மையும் அப்பனும் வலம் வர இருப்பது அன்னம்-பூத வாகனத்தில்.

அனைவருக்கும் வணக்கம்,

என்னடா இவன் தீடீர்னு வணக்கம் எல்லாம் போடுகிறான் என்று என்ன வேண்டாம். எல்லாம் தேர்தல் சமயத்தின் பிரதிபலிப்பு. இப்போது வணக்கமிட்டது வாக்குறுதி அளிக்கவே.

அடுத்தசில தினங்களுக்கு எம் பதிவில் நிறைய விஷயமிருக்காது. அன்னையை தரிசிக்க வலையில் சுற்றி வருவேன். நீங்களும் அங்கயர்கண்ணியின் திருவீதி உலாவை கண்டு பேராணந்த்ததில் திளைக்கவும்.

இப்படி எல்லாம் நான் தட்டி பதிவேற்ற இருந்த சமயத்தில் ஈ-பேப்பரில் (கடந்த 30 ஏப்ரல், மதுரை பதிப்பு, முதல் பக்கம்) செய்தியை கண்டு இதை எல்லோர்க்கும் தெரிவிக்க வேண்டுமென்று என் பணியை தொடர்கிறேன்.

என்கோப்பிலிருக்கும் சில படங்களை இதில் ஒரு தொடராக தருகிறேன்.



நாள் தேதி விபரம்
முதல் நாள் 30/04/2006 கொடியேற்றம்
இரண்டாவது நாள் 1/05/2006 அன்னம், பூத வாகனம்
மூன்றாவது நாள் 2/05/2006 காமதேனு, கைலாசம்
நான்கவது நாள் 3/05/2006 பல்லாக்கில் பகற்காய் மண்டபத்தில் மண்டகபடி
ஐந்தாவது நாள் 4/05/2006 குதிரை வாகனம்
ஆறாவது நாள் 5/05/2006 ரிஷப (காளை) வாகனம்
ஏழாவது நாள் 6/05/2006 யாளி, நந்தி வாகனம்
எட்டாவது நாள் 7/05/2006 பட்டாபிஷேகம்
ஒன்பதாவது நாள் 8/05/2006 இந்திர விமானத்தில் திக்விஜயம்
பத்தாவது நாள் 9/05/2006 திருமணம்,திருமணம்,திருமணம்,புஷ்ப பல்லக்கு, யானை வாகனம்
11வது நாள் 10/05/2006 தேரோட்டம்,இந்திர விமானத்தில் பவனி
12வது நாள் 11/05/2006 அழகர் புறப்பாடு
12வது நாள் 11/05/2006 எதிர் சேவை
13வது நாள் 13/05/2006 அழகர் ஆற்றில் இருங்குதல்
14வது நாள் 14/05/2006 சேஷ வாகனத்திலும், கருட வாகனத்திலும் காட்சி
14வது நாள் 14/05/2006 மான்டூக மகரிஷிக்கு மோட்சம்,

15வது நாள் 15/05/2006 தசாவதாரக் காட்சி
16வது நாள் 15/05/2006 புஷ்ப்ப பல்லாக்கு
17வது நாள் 16/05/2006 மூன்று மாவடியிலிருந்து மலைக்கு திரும்புதல்
18வது நாள் 17/05/2006 அதிகாலை கோவிலை அடைதல்

Wednesday, April 26, 2006

105: பிறந்த நாளில் திகைக்க வைததவர்களுக்கு

சரி ஒரு பேச்சுக்கு பிறந்தநாளை நம் பதிவில் போடுவோம் என்று நினைத்து பதித்தால். எங்கெங்கோ இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்தது. என் கூகிள் மின்னஞ்சல் பெட்டியில் இருபத்தைந்து அஞ்சல் வந்தது இதுவே முதல் முறை.

வாழ்த்தின் உச்சம், யாரோ ஒரு ப்ரேம் என்ற நன்பர் ஒருவர் தான்சானிய நாட்டிலுருந்து வாழ்த்து SMS அனுப்பியதும், உடன் அலுவலர் ஒருவர் வேலைபாடு மிகுந்த ஒரு Cotton Shirt பரிசளித்தது.

ஆக வாழ்தியவர்களுக்கும், வாழ்த்துபவர்களுக்கும், வாழ்த்த இருப்பவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி.

Saturday, April 22, 2006

100: நூறாவது பதிவும் மற்றும் நாலு பதிவும்

‘நாலு’ பதிவை நானும் பதிய வேண்டும் என்று பல நாட்கள் நினைத்து தகவல்களை இன்று பதிக்கிறேன்.

I. நான் அனைவரையும் வணங்கினாலும் ஒவ்வொரு குறிப்பிட்ட சமயத்தில் (கிழமையோ, திதியோ, தினமோ) வணங்கும் கலியுகத்தில் பிறந்து பல சாதனைகளை செய்த-செய்து வருகிற ஆன்மீக பெரியவர்கள் நால்வர்.

1. ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள்





2. ஸ்ரீ ராகவேந்திரர்




3. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா



4. சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ்

II. என் கண்ணியில் உள்ள நான்கு தொடுப்புகள்
1. தினமலர்
2. தமிழ்மணம்
3. சைவம்.ஆர்க்
4. கூகிள் தேடல்

III. பிடித்த நான்கு பறவைகள்
1. புறா
2. கிளி
3. சிட்டுக்குருவி
4. ராஜாளி

IV. பிடித்த நான்கு வீட்டு விலங்குகள்
1. பசு
2. நாய்
3. பூனை
4. காளை

V. பிடித்த நான்கு வலை தளங்கள்
1. ஈ-பேப்பர்-தினமலர்
2. சைவம் வினாவிடை
3. தேசிகன் வீடு
4. துளசிதளம்

VI. நெஞ்சில் நிற்க்கும் நான்கு பதிவாளர்கள்
1. குமரன்
2. ஞானவெட்டியான்
3. பிரதீப்
4. தருமி

VII. சமீபத்தில் கவர்ந்த பதிவாளர்கள்
1. ச.திருமலை
2. மோகன்தாஸ்
3. சிபி
4. இராகவன்


VIII. மனம் (அக)மகிழ்ந்த நாலு தருணங்கள்
1. தில்லி வந்த நாள், (04-06-2002).
2. வேலை மாற்றிய நாள் (30-06-2003).
3. கருமுத்து கண்ணன் அவர்களின் மின்மடல் கண்ட நாள்..
4. தினமலரில் என் பதிவை கண்ட நாள் (27-3-2006).

IX. பேசக் கற்ற நான்கு மொழிகள்
1. சௌராஷ்ட்ரா
2. தமிழ்
3. ஆங்கிலம்
4. ஹிந்தி

X. எழுத கற்ற நான்கு மொழிகள்
1. சௌராஷ்ட்ரா
2. தமிழ்
3. ஆங்கிலம்
4. மலையாளம்

XI. புரிகின்ற நான்கு மொழிகள்
1. சௌராஷ்ட்ரா
2. தமிழ்
3. ஆங்கிலம்
4. புன்னகை

XII. இந்தியாவில் சுற்றுலா செல்ல விரும்பும் நான்கு இடங்கள்.
1. உதகையும், கொடைக்கானல்
2. பெங்களூர்
3. ஹைதரபாத்
4. நைனித்தால்

XIII. பார்த்து அதிசயித்த நான்கு இடங்கள்.
1. மீனாட்சி அம்மன் கோவில் - மதுரை
2. அமேர் மகால் - ஜெய்பூர்
3. சத்தர்பூர் மந்திர் - தில்லி
4. இந்தியா கேட்- தில்லி

XIV. நான் என்னுள் தேடும் நான்கு கேள்விகளின் பதில்கள்!
1. நான் யார்?
2. நான் எங்கிருந்து வந்தேன்?
3. நான் எதற்க்காக பிறந்தேன்?
4. நான் எத்தனை நாட்கள் இருப்பேன்?

XV. மறக்க முடியாத நான்கு தினங்கள்
1. ஜூன், 7 - என் அம்மாவின் பிறந்தநாள்.
2. டிசம்பர், 11 - என் அப்பாவின் பிறந்தநாள்.
(பார்தீர்களா ஒற்றுமையை. 7/6ம், 11/12ம்.)
3. பிப்ரவரி 12 - நான் யோகா கற்றுணர்ந்த நாள்.
4. ஏப்ரல் - 23 - என்னுடைய பிறந்த நாள். (அட நாளைக்கா? மறக்க முடியுமா?)

Friday, April 21, 2006

87: சிவமுருகன்

"சிவமுருகன்" என்ற என் பெயரை புதிதாக சிலமொழிகளில் எழுத கற்றேன். அதையே ஒர் பதிவாக போட்டால் என்ன என்று யோசித்தேன். அதன் விளைவு இதோ

1. Tamil - சிவமுருகன்
2. English - Sivamurugan
3. Sourashtra - Mvb cgjgiZB
3. Hindi - शिवमुरुगन
4. Sanskrit - शिवमुरुगन्
5. Kanada - ಶಿವಮುರುಗನ್
6. Telugu - శివమురుగన్
7. Oriya - ଶିବ ମୁରୁଗନ
8. Gujarati - શિવ મુરુગન
9. malayalam - ശിവമുരുഗന്
10.Punjabi - ਸ਼ਿਵਮੁਰੁਗਨ
11. Bengali - সিৱমুরুগন

குறிப்பு: சௌரஷ்ட்ர மொழியில் பெயரை காண font தேவை font இங்கே உள்ளது.

Monday, April 17, 2006

86: ஆண்டியும் அரசனும் ...

குமரன் அவர்களின் பங்குனி உத்திரம் - 3 பதிவை கண்டு மிகவும் மகிழ்ந்திருந்த வேளையில், ஒரு இனம் புரியாத சிந்தனை தூண்டியது. ஆனால் எதுவும் பிடிபடவில்லை.

சாதாரனமாக வாரத்தில் 2-3 முறை 'மலை மந்திர்' என்றழைக்கபடும் பொன்னேரகபதியான உத்தர சுவாமி மலையோனை கண்டு தரிசிப்பது வழக்கம். அன்று மாலை அவரை தரிசிக்க 92 படிகளுடைய அந்த மலையேரும் பொழுது அந்த இனம் புரியாத சிந்தனையின் பொருள் கிடைத்தது.

"பழனி ஆண்டவனை ஆண்டி கோலத்தில் தரிசித்தவர்கள் 'ராஜ அலங்காரத்தில்' கண்ட பிறகே தங்களது திருஆவினங்குடி பயணத்தை முடிப்பர்".

நாம் ராஜ அலங்காரத்தை வலையில் பார்க்க வில்லையே என்று எண்ணியபடி உள்ளே சென்று பார்த்த போது. அங்கே அந்த சுவாமிநாதன் "யாரங்கே சிவமுருகனின் சிந்தனையை பூர்த்திசெய்" என்பது போல் வேல், வாள், தண்டம் முதலிய 'அஸ்திரம்' ஏந்தி, மகுடம், பட்டு, பீதாம்பரம் தரித்து, சந்தனம்,ஜவ்வாது, பன்னீர், விபூதி பூசி, ரோஜா, மல்லி என்று மலர் பல சூடி ராஜ அலங்காரத்தில் நின்றருளினார். என்னால் பேச முடியவில்லை, பாட முடியவில்லை, குறைந்தது கந்த சஷ்டி கவசத்திலிருந்து "காக்க காக்க கனகவேல் காக்க" என்று வரும் 4 அடிகளை சொல்வதும் அன்றய தினம் முடியவில்லை.

இதைதான் "உன்னை பார்த்தெந்தன் தாய் மொழி மறந்தேன்" என்பதோ?

மணதில் உள்ளதை தாயறிவாள், கண்ணில் உள்ளதை மனைவி அறிவாள், தூரத்தில் உள்ளதை மக்களறிவர். இப்படி எல்லோருக்கும் அறிவிக்கும் முருகா எனக்கும் அப்படிதான் அறிவித்தாயோ?

இதோ முருகனின் ராஜ அலங்காரம்.

Wednesday, April 05, 2006

54: இராம நவமி சிறப்பு பதிவு


வணக்கம்.
இராமரை பற்றி நான் எதுவும் புதிதாக சொல்ல போவதில்லை.

மதுரையில் மகால் 5வது தெருவில் உள்ள அனுமார் கோவில் என்று அழக்கப்படும் 'ஸ்ரீ சீதாராமாஞ்சனேய கொவிலில்' என் குடும்பத்தினர், ஒவ்வொரு ராமநவமிக்கும் அவல் பாயாசம் செய்து வினியோகம் செய்வதை வழக்கமாக் கொண்டுள்ளுனர். அதை இன்றும் தொடர்வதற்க்கு எமக்கு வாய்ப்பளிக்கும் இராமரையும், அவர்தம் படை, பரிவாரத்தையும் வணங்கி மகிழ்கிறேன்.



பலரும் அறிந்த ராமரை பற்றிய ஒரு பாடலை படிக்க நேர்ந்தது, கவிஞர் கண்ணதாசனின் ‘லட்சுமி கல்யாணம்’ திரைபடத்தில் இடம்பெற்ற பாடல். பாட இனிமையாகவும், கருத்துடனும் இருக்கும் என்னை கவர்ந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.


'யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவகம்'.

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி

தாயே என்தெய்வம் என்ற கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெயராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி

வம்சத்திற் கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ச்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்
ராமஜயம் ஸ்ரீராமஜயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜயம் ஸ்ரீராமஜயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!

ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்

மேலும் ஒரு பாடல் சிப்பிக்குள் முத்து திரைப்படத்தில் வந்த பாடல், நான் முதலில் ஒரு பாடலை முழுவதும் பாட கற்ற பாடல் இந்த பாடல்.

ராமன் கதை கேளுங்கள் ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்
அலங்காரச் சீதை அரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்

வசனம்: சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை.....
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க.....
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தி கண்ணெடுத்து பார்க்க மாட்டாரோ...
என்று கவலை கொண்டனர்களாம்....
சீதா தேவியின் செல்லத் தோழிகள்

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
மதயானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்....
தோளிருமலைதனை தூக்கிய வீரர்கள் வந்தார்
இடிகளை கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்...
ஆகா நடந்தாள் சீதை நடந்தாள்....
விழி மலர்ந்தாள் சபை அளந்தாள்.....
வரவு கண்டு அவள் அழகு கண்டு சிவதணுசு
நாணும் வீணை போல அதிர்ந்தது
ராமன் கதை கேளுங்கள்
வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல் அது ஒடிபட விழுந்தார்
சிலர் எழுந்தார்
தொடைதட்டி எழுந்தவர் முட்டி தெறித்துவிட
சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இருகையும் நோக..... தம் தோளது நோகவே அழுதார் சிலர் இடுப்பை பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்....
ஆஹா வீரம் இல்லையா....
வில்லை ஒடிக்க ஆண்கள் யாருமில்லையா.....

ராமாய ராபத்ராய் ராமசந்த்ராய நமஹ

தசரதராமன் தான் தாவி வந்தான்
சிவதனுசை ஒரு கண்ணால் பார்த்திருந்தான்
சீதையை மறுகண்ணால் பார்த்திருந்தார்
மறுநொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தார்....
பட பட பட பட பட பட பட பட ஒலியுடன் முறிந்தது சிவதணுசு
ஒலியுடன் சிரித்தது அவள் மனசு
ஜெய ஜெய ராமா ஜெய ஜெய ராமா....
தசர ராமா ஜனகன் மாமா.....
சீதா கல்யாண வைபோகமே

ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
காணக்கண் அழகாகுமே.....
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே....
ஸ்ரீராமா அதோ பாரப்பா
அழகான சீதை விழி அரசாளும் கோதை
விழி கண்டி குடி கொண்டு மணமாலை தந்த (ராமன்)

Saturday, March 25, 2006

29: தினமலரில் எமது பதிவு

மார்ச் மாத வேலை பளுபற்றி நான் சொல்ல வேண்டியதில்லை அப்பளுவின் காரணமாக வலை பதிவிலும், வலை சுற்றுதலும் சற்று தடைபட்டது. அதனாலேயே தினமும் அதிகபட்சமாக ஒரு பதிவை மட்டுமே பதியமுடிந்தது, மேலும் செய்திகளில் முதல் பக்கசெய்திகளை மட்டும் படித்து விட்டு அலுவலில் மூள்கியிருந்தேன்.

இன்று காலை எல்லா அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, சற்று க(இ)ளைபாற மின்னஞ்சலையும், சில செய்திகளையும் பார்க்க ஆரம்பித்தேன்.

அதில் நன்பர் பிரதீப்-ன் மகளீர் தின பதிவில் நானிட்ட பின்னூட்டத்திர்க்கு எதாவது பதிலுள்ளதா? என்று பார்க்க சென்றேன். பிரதீப் சுவாரசியமான விஷயங்களை நகைசுவையாகவும், தினம் தம் அனுபவத்தை நையாண்டியாகவும் அழகாகவும் சொல்வதில் வல்லவர். முகமலர சிரிக்க அங்கே சென்றேன். அங்கே தாம் செய்த மாடரேட்டிங் செட்டிங்கினால் எந்த பின்னூட்டமும் தாமக பதியவில்லை என்றும், எல்லாம் ப்ளாகர் பிள்ளை அடக்கமாய் எடுத்து வைத்துக் கொண்டு தான் எப்போது வந்து அதை ஆமோதித்து பதியப் போகிறேன் என்று காத்துக் கொண்டிருக்கிறதாக சொல்லியிருந்தார்.

அதில் அனுசுயா என்ற அவரது வாசகி ஒருவர் “உங்கள் வலைப்பதிவு சென்ற வாரம் தினமலரில் வந்திருந்தது வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தியிருந்தார். தற்போதைய தமது பதிவில் பிரதீப் “சென்ற வாரம் என் பதிவு தினமலரில், வந்ததாம். இது எனக்கே தெரியாத விஷயம். இது உண்மை தானா? அப்படி என்றால் தயவு செய்து யாராவது எனக்கு அந்த சுட்டியைத் தந்தால் தன்னியனாவேன்!” என்று கூறியிருந்தார்.

சரி இவரை தண்ணியாக்கலாம் சாரி சாரி தன்னியனாக்கலாம், அப்படியே தினமலரின் மற்ற அனைத்து பக்கங்களையும் பார்த்து ரொம்ப நாளாச்சு (சிலநாட்களாக வெறும் முதல் பக்க செய்திகளை மட்டும் படிப்பதை வழக்கமாக கொன்டிருந்தேன்), என்று ஒரே கல்லில் இரன்டு மாங்காய் அடிக்கலாம் என்று எண்ணி உள்ளே சென்றேன்.

சும்மா சொல்லகூடாது மொபைலில்(s.m.s.) ராசி பலன், ஈ-பேப்பர் என்று கலக்கி வரும் தினமலரல்லவா. அப்படியே மூழ்கினேன். சில நிமிடத்தில் எனக்கு கிடைக்கப் போகும் சந்தோஷத்தை பற்றி தெரியாமல்.

ஒவ்வொரு நாளாக எல்லா செய்திகளையும் படித்து, படங்களை பார்த்து, மதுரைகாரனல்லவா மதுரை மாவட்ட செய்தியையும் படித்து, பிந்தய நாளைய செய்திகளை படிக்க சென்றேன். மார்ச் 13, 2006 நாளேட்டில் அறிவியல் ஆயிரத்தில், தமிழில் படிக்க கிடைக்கும் பகுதியில் பிரதீப்பை தேடிய எனக்கு, மீனாட்சி அம்மனின் அருளால் எமது மனற்கேணி பற்றி பிரசூரித்து இருந்ததை கண்டு நம்பவும் முடியாமல், நம்பாமலும் இருக்க முடியாமல் ஒரு கணநேரம் நின்றிருந்தேன்.

கடமையை செய்த எனக்கு, கிடைத்த பலனை அங்கயர்கன்னியின் பாதத்தில் கணிக்கையாக்குகிறேன். மேலும், எம்பதிவை வெளியிட்ட தினமலருக்கும், அதை பார்த்து தெரிவித்த அனுசுயா அவர்களுக்கும், எமிருவருக்கும் பாலமாக இருந்த பிரதீப் அவர்களுக்கும், எமது பதிவை தினமும் வந்து பார்வையிட்டு, பின்னூட்டமிடும் திரு. குமரன், திரு. நடேசன், ஐயா. ஞானவெட்டியான், திரு. தருமி, திரு. தி.ரா.ச., திரு. இரத்தினவேலு, திரு. இராஜன், அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி, நன்றி, என்று கோடிமுறை கூறினாலும் குறைவே.

எனக்கும் சிலநாளாக பார்வையிட்டோர் எண்ணிக்கையில் திடீர் உயர்வை கண்டு எனக்கே சற்று சந்தே(தோச)கமாக தானிருந்தது. இப்போது தானந்த ஐயம்தீர்ந்தது மகிழ்ச்சி நிலைபெற்றது.

Monday, March 20, 2006

24: கருமுத்து கண்ணன் அவர்களின் மின்மடல்

நன்பர்களே,

இன்று என் வாழ்வில் ஒரு நன்நாள், இனிய பொன்நாள்.

இன்று மதியம் 1.30 மணியளவில் திரு 'கருமுத்து கண்ணன்' அவர்கள் எனக்கு எழுதிய மின்னஞ்சல் கிடைக்க பெற்றேன்.

உங்களில் பலர் எனது வலை பதிவை (http://www.blogger.com/profile/10745607) பார்த்திருக்க கூடும், அதை பார்வையிட்ட அன்னார் எம்மை வாழ்த்தி மின்னஞ்சல் எழுதியிருந்தார்.

இதொ அவர் எழுதிய மின்னஞ்சல்,

Dear Mr. Sivamurugan,
I was recently told about your blog by yourfriend.

Going through the site I found it interesting,you have taken lot of efforts in collectingall this information and giving it in a very informative format.

On behalf of the Temple, I wish to thank youfor the efforts you are taking to promote A/M Meenakshi Sundareswarar Temple.

Please keep us informed if you have any suggestions or improvements to make in the Temple.

Regards
Karumuttu T. Kannan
Chairman,
Board of Trustees
Arulmigu Meenakshi SundareswararTemple
Madurai.

இப்பாராட்டுக்கு என்னை தகுதியாக்கிய அங்கயர்கன்னிக்கு முதலில் என் வணக்கத்தை சொல்லி, மேலும் என்னை முதலில் இருந்தே ஊக்கமும் உற்சாகமும் தரும் உங்களுக்கும், என்னை அவரிடம் அறிமுகபடுத்தியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,
சிவமுருகன்

Friday, March 17, 2006

மலையும் மாங்காயும்

13-03-2006, திங்கள் காலையில் ‘சடகோபன் ராஜன்’ என்ற பெயரிட்ட ஒரு மின்னஞ்சல் எனக்கு கிடைத்தது. மீனாட்சி அம்மன் கோவிலை தாமும் எம் பதிவில் மூலம் வலம்வந்து, மகிழ்ச்சியடைந்ததாக எழுதி இருந்தார். மேலும் தமது பயணகட்டுரையை பார்வை இடும்படியும் சுட்டிகளை தந்து கேட்டுக்கொண்டிருந்தார். சுட்டியை தட்டிய எனக்கு ஒரு வித வியப்புகலந்த, படபடப்பு.

காரணம் http://www.maraththadi.com/ListArticle.asp?TypeId=117 என்ற அந்த சுட்டி 'ராஜன்' அவர்களுடைய பல பயண தகவல்களின் சுட்டிகளை கொண்டிருந்தது. ஒவ்வொரு சுட்டிகளாக போய்ப் பார்த்த எனக்கு பிரம்மிப்பூட்டும் பல இடங்களின் படங்களை, தமக்குரிய நகைச்சுவை நடையில் சொல்லியிருந்தார், காட்டியும் இருந்தார்.

இதோடு என் பதிவை என்னால் ஒப்பிட்டு பார்க்க கூட முடியவில்லை. இது(என் பதிவு) சிறுபுல்லாகவும், அது பெரிய ஆலமரமாகவும், அது மலையாகவும் இது மாங்காயாகவும் தோன்றியது.

சமணர் மலைகள் பற்றி எனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது. ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய வாரம் மதுரையில் உள்ள ஜடாமுனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள சமணமத கோவிலில் ஒரு புதிய பெண்துறவியை அறிமுகம் செய்வர். அதை நான் பார்த்துள்ளேன். ஆனால் சமண படுகைகள், சமண மலை போன்ற இடங்களை பற்றி நான் நிறைய கேள்விபட்டதில்லை. இப்படிபட்ட எனக்கே அவ்விடத்தை பார்க்க ஆவல் பிறந்தது. ஒருமுறை நீங்களும் தான் சுட்டிகளை பாருங்களேன்.

இதே காரணத்தால் தான் ஓரிரு நாட்களாக புதிய பதிவுகளை பதிய மனமில்லாமல் இருந்தது. மீண்டும் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு என் நிலையை கூறியதற்க்கு மலையென்றோ, மாங்காயென்றோ எதுவும் கிடையாது, நாம் செய்வது ஒரு சிறிய சமய, சமுக பணி அவ்வளவே. அதை என்னையும் தொடர சொல்லி பதில் சொன்ன பிறகே, புதுத்தெம்புடன் இன்று மூன்றாவது பதிவை பதிக்கிறேன்.

Monday, February 27, 2006

சத்குருவின் சந்நிதியில் ...

என்னுள் இருக்கும் இறைவனை இவ்வுலகுக்கு அறிமுக படுத்திய என் சத்குருவிற்க்கு இப்படைப்பை காணிக்கையாக்குகிறேன்.

ஸத் குரு ஜக்கி வாசுதேவ்வை பற்றி நான் சொல்வதை விட நீங்களே சுட்டி மூலம் தெரிந்து கொள்ளலாம். அத்துனை எளிமையானவர் இப்பிரமாண்டத்தின் ரகசியத்தை, பேரின்பத்தை, நீங்களே அறியாமல் உங்களுக்கு உனரவைப்பவர், யோகப்பியாச்த்தை விஞ்ஞான பூர்வமாக நிறுபித்தவர், அதற்க்கான உதாரணம், தியான லிங்கம்.

இவரை வழிபடுபவரை விட இவர் சொன்ன வழியில் செல்பவரே ஏராளம். அத்தனை எளிமையானவர், அத்தனை உணர்வு பூர்வமானவர்.

சத்குரு அவர்கள் கடந்த 2000ம் ஆண்டில் தியானலிங்கத்தை பிராண பிரதிஷ்டை செய்தும், சர்வமத ஸ்தூபியையும், தியான மண்டபமொன்றையும் நிறுவினார். அன்றுமுதல் கோவையில் உள்ள ஆஸ்ரமத்தில் சிவராத்திரி மிககோலாகலமாக நடைபெறுகிறது. அதை ஆஸ்தா அலைவரிசையில் உலகம் முழூவதிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சத்குரு தம்மிடம் பயின்ற அனைவருக்கும் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புவார்.

லௌகீகத்தில் இருந்தவாரு துறவறத்தை மேற்கொள்ள இவர் காட்டும்வழி மிக அற்புதம். இவரது வகுப்புகள் (work shop) உலகெங்கிலும் நடந்துவருகிறது. வகுப்புகளின் அறிவிப்புகள் மேற்கூறிய இனையத்தில் கிடைக்கும்.

மேலும் இவரது எல்லையில்லா பேரானந்தத்தில் திளைக்க கடந்த சிவராத்திரியில் கலந்து கொண்டோர் மட்டும் ஐந்தரை லட்சம். கோவையே திரண்டுவந்து கலந்து கொண்டது இல்லை இல்லை இவ்வையகமே திரண்டுவந்து கலந்து கொண்டது.