Friday, May 12, 2006

130: சித்திரை திருவிழா பனிரெண்டாவது நாள்



இன்று(12-05-2006) மாலை தல்லாகுளத்தில் கள்ளழகரை எதிர்சேவை செய்த பக்தர்கள்.

நாளை(13-05-2006) காலை 5.58க்கு மேல் 6.05 க்குள் வைகையில் பக்தர்கள் வெள்ளத்தினிடையே எழுந்தருள்வார்.

6 comments:

பிரதீப் said...

ஆகா ... கண்கொள்ளாக் காட்சி.
தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் இருந்து வரிசையாக ஒவ்வொரு சின்னமாக வரும். நடு ராத்திரியிலும் தல்லாகுளம் பொட்டல் மக்கள் வெள்ளத்தில் மிதக்கும். குடை, விசிறி என்று சின்னங்கள் வர வரப் பரபரப்பு அதிகரிக்கும். மக்கள் என்ன நிறப் பட்டு உடுத்தியிருக்கிறார் அழகர் என்று அறிய ஆவலாக இருப்பார்கள். பச்சைப் பட்டு என்றால் கொண்டாட்டம் மிகுதி.

அழகருக்கு முன் ஆடி வரும் விளக்கு வந்துவிட்டால் ராட்டினங்கள் நின்று விடும். அந்த சமயம் மேல் தொட்டியில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம்.

எப்படி இத்தனை என்று பார்க்கிறீர்களா, எங்கள் வீடு தல்லாகுளத்தில்தான் இருக்கிறது. அழகர் வீட்டுக்கருகில் வந்தவுடன் சின்னப் பிள்ளைகளைத் தாய்மார்கள் எழுப்பிக் கொண்டு ஓடுவார்கள். அழகரைப் பார்க்க கண் கோடி வேண்டும். கருப்பண்ணசாமி கோயில் வரையில் அழகருக்குப் பின்னாலேயே ஓடி அங்கே மண்டபத்தில் எழுந்தருளுபவரைக் கண்குளிரப் பார்த்துவிட்டு வந்து படுத்தால் மகிழ்ச்சியில் தூக்கமே வராது..

சிவா, நீவிர் வாழ்க... !!!

rnatesan said...

இவ்வலப் பதிவின் மூலம் எத்தனை புண்ணியம் பாருங்கள்1

வல்லிசிம்ஹன் said...

நன்றி, சிவமுருகன். மனமெல்லாம் மதுரையெ நிறைந்திருந்தது. டிவியில் வருமா என்று பார்த்துக் கொண்டு இருந்தேன். அழகரை பார்த்ததில் சந்தோஷம்.

சிவமுருகன் said...

பிரதீப்,
பல விஷயங்களை ஞாபக படுத்திவிட்டிர்கள். வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

நன்றி நடேசன் சார்.

சிவமுருகன் said...

நன்றி மனு சார்,
//டிவியில் வருமா என்று பார்த்துக் கொண்டு இருந்தேன்//

ஒருவேளை ராஜ் - டிவி காட்டியதோ என்னவோ. எனக்கு தெரியாது. 2000ல் காட்டினார்கள்.