Wednesday, April 05, 2006

54: இராம நவமி சிறப்பு பதிவு


வணக்கம்.
இராமரை பற்றி நான் எதுவும் புதிதாக சொல்ல போவதில்லை.

மதுரையில் மகால் 5வது தெருவில் உள்ள அனுமார் கோவில் என்று அழக்கப்படும் 'ஸ்ரீ சீதாராமாஞ்சனேய கொவிலில்' என் குடும்பத்தினர், ஒவ்வொரு ராமநவமிக்கும் அவல் பாயாசம் செய்து வினியோகம் செய்வதை வழக்கமாக் கொண்டுள்ளுனர். அதை இன்றும் தொடர்வதற்க்கு எமக்கு வாய்ப்பளிக்கும் இராமரையும், அவர்தம் படை, பரிவாரத்தையும் வணங்கி மகிழ்கிறேன்.



பலரும் அறிந்த ராமரை பற்றிய ஒரு பாடலை படிக்க நேர்ந்தது, கவிஞர் கண்ணதாசனின் ‘லட்சுமி கல்யாணம்’ திரைபடத்தில் இடம்பெற்ற பாடல். பாட இனிமையாகவும், கருத்துடனும் இருக்கும் என்னை கவர்ந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.


'யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவகம்'.

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி

தாயே என்தெய்வம் என்ற கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெயராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி

வம்சத்திற் கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ச்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்
ராமஜயம் ஸ்ரீராமஜயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜயம் ஸ்ரீராமஜயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!

ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்

மேலும் ஒரு பாடல் சிப்பிக்குள் முத்து திரைப்படத்தில் வந்த பாடல், நான் முதலில் ஒரு பாடலை முழுவதும் பாட கற்ற பாடல் இந்த பாடல்.

ராமன் கதை கேளுங்கள் ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்
அலங்காரச் சீதை அரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்

வசனம்: சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை.....
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க.....
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தி கண்ணெடுத்து பார்க்க மாட்டாரோ...
என்று கவலை கொண்டனர்களாம்....
சீதா தேவியின் செல்லத் தோழிகள்

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
மதயானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்....
தோளிருமலைதனை தூக்கிய வீரர்கள் வந்தார்
இடிகளை கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்...
ஆகா நடந்தாள் சீதை நடந்தாள்....
விழி மலர்ந்தாள் சபை அளந்தாள்.....
வரவு கண்டு அவள் அழகு கண்டு சிவதணுசு
நாணும் வீணை போல அதிர்ந்தது
ராமன் கதை கேளுங்கள்
வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல் அது ஒடிபட விழுந்தார்
சிலர் எழுந்தார்
தொடைதட்டி எழுந்தவர் முட்டி தெறித்துவிட
சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இருகையும் நோக..... தம் தோளது நோகவே அழுதார் சிலர் இடுப்பை பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்....
ஆஹா வீரம் இல்லையா....
வில்லை ஒடிக்க ஆண்கள் யாருமில்லையா.....

ராமாய ராபத்ராய் ராமசந்த்ராய நமஹ

தசரதராமன் தான் தாவி வந்தான்
சிவதனுசை ஒரு கண்ணால் பார்த்திருந்தான்
சீதையை மறுகண்ணால் பார்த்திருந்தார்
மறுநொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தார்....
பட பட பட பட பட பட பட பட ஒலியுடன் முறிந்தது சிவதணுசு
ஒலியுடன் சிரித்தது அவள் மனசு
ஜெய ஜெய ராமா ஜெய ஜெய ராமா....
தசர ராமா ஜனகன் மாமா.....
சீதா கல்யாண வைபோகமே

ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
காணக்கண் அழகாகுமே.....
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே....
ஸ்ரீராமா அதோ பாரப்பா
அழகான சீதை விழி அரசாளும் கோதை
விழி கண்டி குடி கொண்டு மணமாலை தந்த (ராமன்)

9 comments:

ஞானவெட்டியான் said...

அன்பு சிவமுருகன்,
சித்திரங்கள் அருமை.

தி. ரா. ச.(T.R.C.) said...

வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன் என்று திருத்திக் கொள்ளுங்கள்.
ராமாய ஸ்லோகத்தை பற்றி ஒரு பார்வை.
ராமய---- பக்தர்கள் ராமா என்பார்கள்
ராமபத்ரா--- தசரத மன்னர் அப்படி அழைப்பார்
ராமசந்தரா--- தாய் கொளசல்யா அழைப்பது
வேதஸே--- முனிவர்கள் அழைப்பது
ரகுநாதன் -- - மந்திரி பிராதனிகள் மற்றும் அயோத்தியில் மக்கள் அழைப்பது
நாதா-- அன்னை சீதப்பிராட்டி அழைப்பது
சீதாபதி-- மிதிலையில் ஜனங்கள் அழைப்பது
இப்படி வேறுவேறு பெயர்களல் அழைக்கப்பட்டாலும் ராமன் ஒருவனே.அவனே நமக்கு அருள் செய்வான்
அன்பன் திராச

சிவமுருகன் said...

அன்பு ஐயா,
வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

அன்புள்ள தி.ரா.ச.,
திருத்தி விட்டேன். சுட்டி காட்டியதற்க்கு நன்றி.

ஸ்லோகத்தின் உங்கள் கண்ணோட்டம் அருமை.

rnatesan said...

தாமதத்திற்கு வருந்துகிறேன்!!
இங்கு ஒரு சிறிய தீ விபத்து!!
தங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
மேலும் படைப்புக்களைப் படைக்க ஸ்ரீராமன் அருள் புரிவானாக!!

சிவமுருகன் said...

//தாமதத்திற்கு வருந்துகிறேன்!!//
லேட்டானுலும் லேட்டஸ்ட் நீங்கள் தான்.

//இங்கு ஒரு சிறிய தீ விபத்து!!//
அன்னையின் அருளால் எவர்க்கும் ஒன்றும் இல்லையே?

//தங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!//
தங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

//மேலும் படைப்புக்களைப் படைக்க ஸ்ரீராமன் அருள் புரிவானாக!!//
நன்றி. அவர் அருளால் தான் எல்லாம் நடக்கிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ராமன் கதை கேளுங்கள் ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்//

சிவா, அருமை, அருமை!
அங்கு பின்னூட்டம் கண்டு
இங்கு பின்னூட்ட வந்தேன்.
இந்தப் பதிவு அப்போது கண்ணில் படவில்லை. நாம தான் அப்ப எல்லாம் தமிழ்மணத்தில் கிடையவே கிடையாதே! :-)
இப்ப வந்த கத்துக்குட்டி தானே!

இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் அப்படியே மனம் லேசாகி விடும். நடு நடுவே சிரிப்பலைகளோடு ஒலிப்பதிவு செய்து இருப்பர்!

ராமன் கதையை பழைய கால சினிமா ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே என்று பாடி வைத்தது!
இக்காலச் சினிமா இந்தப் பாடலைப் பாடி வைத்துள்ளது!!
பாருங்கள் நாளைய சினிமாவிலும் ராமன் கதை வரும்!!!

சிவமுருகன் said...

கே.ஆர்.எஸ்.,

ஒரு வருஷம் கழித்து ஒரு பதிவுல, பின்னூட்டம் கிடைப்பது இது தான் முதல் முறை.

இது இராமரின் மற்றொரு வெற்றி.

//இப்ப வந்த கத்துக்குட்டி தானே!//

கத்து குட்டிஎன்றாலும் சிங்க குட்டி நீங்கள். சிங்கம் சிங்கம் தான் குட்டியாய் இருந்தாலும்.

(சும்மாவா ஆன்மீக சுப்ரீம் ஸ்டார் ஆச்சே!)

//பாருங்கள் நாளைய சினிமாவிலும் ராமன் கதை வரும்!!! //

நிச்சயமாக!

மெளலி (மதுரையம்பதி) said...

இராமருக்கு இன்னுமொரு வெற்றி (இந்த வருஷத்திய பின்னூட்டம் போட்டாச்சு)
:)