Saturday, December 26, 2009

சோளக்காட்டு பொம்மை

நான்: ஆசையாய் சிறகடித்து வரும் பறவையை
துறத்துகிறாயே? இது நியாயமா?

சோளக்காட்டு பொம்மையின் பதில் அடுத்த பதிவில் ...

Monday, November 02, 2009

சௌராஷ்ட்ரர் - 3 - சௌரஷ்ட்ர தேசம்

சௌராஷ்ட்ர தேசம்

நூறு தேசத்தின் தலைநகராம் இந்த சௌராஷ்ட்ர தேசத்தில் எல்லோரும் ஓர் குலமாய் வாழ்கின்றனர்!

கண்ணன் புகழ் பாடியும் அவனளித்த தொழிலான நெசவு செய்தும் வருகின்றனர் சௌராஷ்ட்ர தேச மக்கள்.

நகரா காண்டத்தில் சொல்லபட்டுள்ளதாவது!

கோபத்திற்க்கு பேர் போன முனிவரான துர்வாச முனிவர் ஸௌராஷ்ட்ர தேசத்தில் வசிக்கும் ப்ராமணர்களிடத்தில் தனக்கு ஒரு கோவில் கட்டிக்கொள்ளும் பொருட்டு கொஞ்சம் இடம் அளிக்கும்படி கேட்டார். அதற்க்கு சரியான பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாயிருந்ததால் முனிவர் கோபம் கொண்டு உங்கள் வம்சம் க்ஷீனஸ்திதி அடையும் என துர்வாசனத்தை விடுத்தார்.

பிறிதொரு சமயம் மஹாவிஷ்ணுவின் அனுமதியினால், இந்திரன் பிதுர்காரியங்களாக செய்யப்படும் ஏகோதிஷ்டம் செய்து அதன் தானத்தை இந்த சௌராஷ்ட்ர ப்ராமணர்களுக்கு ஏகோதிஷ்டம் என்னும் தானத்தை கொடுக்கும் வேளையில், தாம் மறுபிறப்பற்றவர்கள் எனக்கூறி அந்த தானத்தை வாங்க மறுத்தனால் கோபம் கொண்ட இந்திரன் நீவீர் வறுமையில் இருக்க கடவீர் எனச் சபித்தார்.

இவ்வாறாக துர்வாச முனிவரால் சபிக்க பெற்றும், தேவராஜனால் கோபிக்க பெற்ற தேசமக்களை நோக்கி அங்கே பரசுராமர் வந்து சேர்ந்தார்!

தாம் க்ஷத்திரியர்களை ஸம்ஹாரஞ் செய்ததின் பிறகு சௌராஷ்ட்ர தேசத்தில் திரிகோத்திரபுரத்தில் பிதுர் சிராத்தம் செய்யவேண்டி சௌராஷ்ட்ர பிராமணர்களை அழைத்தார். அதற்க்கும் அவர்கள் தாம் கண்ணன் கையால் தொழில் பெற்றவர்கள் என்றும், தங்களது பாவம் இத்தலத்தில் பிதுர்காரியம் செய்வதால் தீரப்போவதில்லை எனக்கூறி அவரோட ஒத்து போக மறுத்தனர்!

ஜோதிடத்தில் தேர்ந்தவரன் மாறனத்துவர் என்பவர், பரசுராமரை உடனே தமது தேசத்தை விட்டு வெளியேறுமாறும், தென்கோடியில் இருக்கும் கண்ணனின் குழந்தை பருவக்கோவிலில் துலாபாரம் தந்தால் க்ஷத்திரியர்களை ஸம்ஹாரம் செய்த பாவம் தீரும் என்று கண்ணன் அருளால் திருவாய் மலர்ந்தார்.

தமக்கே பாப விமோக்ஷன மார்க்க தரிசனம் தர யாரிவர்கள் என்று கோபம் கொண்ட சிரஞ்சீவி பரசுராமர், எவ்வாறு எம்மை இத்தேசதை விட்டு வெளியேற சொன்னீர்களோ அவறே நீங்களும் தேசம் இழந்து கடவீர்கள் என சாபம் கொடுத்தார்.

இவ்வாறாக சாபம் பெற்றவர்கள், சதாரணமானவர்களா?

ஆம் கண்ணன் கையால் தொழில் பெற்றவர்கள்!

என்ன செய்தனர்?...

Friday, October 30, 2009

சௌராஷ்ட்ரர் - 2 - பரசுராமர்

பாகம் - 2


பரசுராமர்


உலகம் பல பாவங்களை சுமக்க போகிறது, அவற்றை அடக்கி ஒடுக்கி ஆளவேண்டுமெனில் அதற்கு ஒரு மாபெரும் சக்தி எங்கும் வியாபித்து இருக்க வேண்டும். அப்பேற்பட்ட சக்தியை உலகில் நிலைபெற செய்ய வேண்டுமெனில் அதற்கும் ஒருவர் வேண்டும், அதை செய்யும் துணிவும், மணப்பக்குவமும் நிறைந்து இருக்க வேண்டும். அப்பேற்பட்டவர் உருவாக எவ்வளவு காலமாகும் என்று தேவர்கள் பகவானை நோக்கி கேட்கின்றனர். அதற்கு பகவான் சொல்கிறார்! அப்பேற்பட்டவர் உருவாக கால நேரம் கூடினாலே போதும் எல்லாம் தாமாக நடக்கும் என்கிறார்.

மஹேசனே பகவான் ஜமதக்னியாகவும், அன்னை பார்வதி ஸ்ரீ ரேணுகா தேவியாகவும் பிறப்பெடுத்து ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுக்கின்றனர். இவன் அந்த சாரங்கனின் திருஅவதாரம் என்றும், தன்னுடைய ஆணையின் பேரில், இவன் தன் தாயையே சிரசேதம் செய்யகூட தயங்க மாட்டான் என்பதை தன் ஞானத்தால் உணர்ந்த பகவான் இவருக்கு ‘பரசுராமன்’ என நாமகரனம் செய்தார்.

ஏழு சிரஞ்ஜீவிகளில் (பலி, வியாஸர், ஹநுமான், விபீணஷனர், கிருபர், பரசுராமர், அச்வத்தாமா) ஒருவரான பரசுராமர், ஐயப்பனுக்காக நான்கு முக்கிய கோயில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் சொல்கின்றன. குழத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன் கோவில் மற்றும் சபரிமலை. இந்த நான்குமே கேரள மாநிலத்தில் அதுவும், ஒரே மலைத்தொடரில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு விஷயமாகும்.

மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக நம் சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. இந்த ஐந்து பருவங்களையும் விளக்கும் வகையில் ஐயப்பனின் அவதாரங்கள் இருந்திருக்கின்றன.


1. பிறந்தது முதல் பதினெட்டு வயது வரை ‘பால்ய பருவம்’. இந்தப் பருவத்தை விளக்கும் அவதாரத் தலம் - குழத்துப்புழா.


2. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயதுவரை உள்ளது ‘யெளவன (யவ்வனம்) பருவம்’. இதை விளக்கும் தலம் - ஆரியங்காவு.


3. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயது வரை ‘கிரஹஸ்த பருவம்’ - இதுதான் அச்சன்கோவில்.


4. ஐம்பத்தாறு முதல் எண்பத்தைந்து வயது வரை ‘வானப்பிரஸ்தம்’ - சபரிமலை.


5. எண்பத்தாறு வயது முதல் ‘ஏகாந்த’ நிலை - காந்தமலை.


இப்படி மனித வாழ்வோடு தொடர்புடைய நிலைகளில் ஸ்வாமி ஐயப்பன் எழுந்தருளினார்.


இவ்வாறாக பரத கண்டத்தில் பல நற்காரியங்களை செய்து வந்தவர். சௌராஷ்ட்ர தேசத்தை அடைந்து தாம் கண்ணனாக வந்து கொடுத்த தொழிலை சரியாக செய்கின்றனரா? என காணவந்தார் போலும்! ப்ரோஹிதர்களை சோதிக்க வந்தார் போலும்!


சோதனை, சாதனையானதா? வேதனையானதா!?!?!?


தொடரும்...

சௌராஷ்ட்ரர்-1 - கண்ணன் கையால் தொழில்

பாகம் - 1
கண்ணன் கையால் தொழில்

எத்தனையோ இழிபிறவிகள் எடுத்து, எத்தனையோ உருவம் எடுத்து கடைசியாக பெறுவது இந்த மனித பிறவி. இந்த பிறவி காணக்கிடைக்காதது, அடைவது என்பது பல ஜன்மங்களின் தவம் என்றே எல்லா வேதங்களும் சாஸ்த்திரங்களும் சொல்கின்றன. அப்பேற்பட்ட மனித குலத்தில் எத்தனை வித தெய்வங்கள், எத்தனை வித வழிபாடு என்று பட்டியலிட்டால், பட்டியல் நீள்கிறது. அப்பேற்பட்ட ஒரு காலகட்டம் தான், சாஸ்திர - சரித்திரகாலம். அக்காலத்தில் மூன்று தலைமுறையாக வழிபாடு நடத்தி காணக்கிடைக்காதா அந்த கண்ணனின் லீலைகளை தன் கண்முன்னால் கண்ட மாந்தர்கள், அவரிடமே சில அறிவுரைகளையும், தொழிலையும் பெற்றனர்.

கண்ணன் கர்பக மரத்திலிருந்து பஞ்சை எடுத்து அம்மக்களிடம் கொடுத்து 4 தொழில்களை தருகிறான்.

1 நெசவு.
2 ப்ரோஹிதம்.
3 கணிதம்.
4 (மக்கள் மற்றும் மஹேசன்) சேவை.

அவ்வாறு பெற்றவர்கள், தங்கள் தொழில் செய்ய நூறுதேசங்களின் தலைமை இடமான சௌராஷ்ட்ர தேசத்தில் பிறப்பெடுக்கிறார்கள். இதோ! அவர்கள் நெசவு செய்யும் ஓசையானது, அந்த கீதை சொன்ன கண்ணனை என்பதைவிட தங்களுக்கு தொழில் தந்த கண்ணன் என்றே பாடி ஆடி பரவசப்படுவது வெளிப்படுகிறது.

ப்ரோஹிதம் செய்பவர்கள் கணிதம் செய்பவர்களிடம் நிதி பெற்றனர், கணிதம் செய்பவர்கள் நெசவு மற்றும் சேவை செய்பவகளிடம் பலன் பெற்றனர். இப்படியாக இருந்த அக்குடிக்கு ஒரு பங்கம், அங்கமே போனாலும் அந்த சாரங்கன் இருக்கிறான் என்று வாழ்தவர்கள்!

தன் தங்கை திரௌபதிக்கே கொடுமைசெய்ய தூண்டிய கர்ணனை கூட தன் விஸ்வரூபம் காட்டி மோக்ஷமளித்தவன் கண்ணன். அப்பேற்பட்ட கண்ணன் கையால் தொழில் பெற்றவர்கள் என்ற பெருமையில் இருந்தவர்கள், கலியின் பிடியில் சிக்கினர்.

சிக்கியவர்கள் பல தொழில்கள் செய்ய வேண்டியதாயிற்று.கூடவே தங்கள் உடல் பாழாவதை அறிந்தனர். மேட்டுக் குடியில் இருந்த நெசவாளிகள் தமக்கு செவை செய்யும் மக்கள் மீது சற்றே நிறைய (வேலை) பளுவை தினித்தனர்! பூபாரம் தீர்க்க வந்தவன் தன் அடியவர் பாராம் தாங்குவானா? சற்றே சினந்தான்! இதோ சிக்கியவர்கள் சின்னாபின்னமானார்கள்.

யாதவர்கள் சப்தரிஷிகளுக்கு செய்த துர்நடத்தை காரணமாக குலமே நாசமானது! இதை கண்ட பிறகாவது யோசித்து நிதானித்து முடிவெடுக்க வேண்டியவர்கள்! சொல் மாறினர்! நிலை தடுமாறினர்!நிலை மாறும் உலகில் இவர்களது நிலை மாறியது!

மாறிய நிலை என்னவானது?

தொடரும்...

Thursday, April 23, 2009

கற்றதனால் ஆன...பயன்…

கற்றதனால் ஆன...பயன்…


எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்திர்கள்

கலாச்சாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிக்கைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்கள் சம்பாத்யத்தின்
பெரும் பகுதியை வரிஎனப் புடுங்கினீர்கள்
நங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில் பாலங்கள் கட்டினீர்கள்
"இந்திய ஒளிர்கிறது"
என விளம்பரம் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோசம் தானா சகோதரர்களே ?
உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்…
"கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?"
குறிப்பு : ஒரு க‌ணினி காத‌ல‌னின் க‌ண்ணீர்