Monday, April 21, 2008

அடம் பிடித்து, பிடித்த வடம்

சித்திரை திருவிழாவிற்க்கு என்னாலும் செல்ல முடியுமா? என்று இப்போது நினைத்தாலும் கொஞ்சம் சந்தேகமாக தான் சொல்வேன் ஆனால் எப்படியோ அடம் பிடித்து இந்த வருடம் வடம்பிடித்து, அதுவும் நாலு மாசிவீதிகளையும் வலம் வந்து விட்டேன். பதிவு பதிக்க ஆரம்பித்த பிறகு இந்த வருடம் தான் முதல் முறை சித்திரை திருவிழா கண்டு எழுதுகிறேன். சித்திரை திருவிழாவில் நான் செய்த ஒரே செயல் தேர் வடம் பிடித்து இழுத்தது தான், ஏனையவற்றை எல்லாம் சற்று தள்ளி நின்றே வேடிக்கை பார்த்தேன் அவ்வள்வே!.

இந்த வருடம் வெயிலும், இல்லாமல், எந்தவித பெரிய அளவு தடையும் இல்லாமல் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது என்னை போன்ற பலரை மிகவும் கவர்ந்திருக்கும்। முதல் தேர் நிலைக்கு வந்து கிட்டதட்ட 30 நிமிடம் வரை நேரம் எடுக்க வேண்டிய தூரம் வெறும் 5 நிமிடத்தில் வந்தது என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது, கைதட்டி ஆரவரம் செய்து வீடு . வழியெங்கும் மக்கள் கூட்டம் . இது மாசி வீதியா, மக்கள் வீதியா என்ற அளவிற்க்கு அதிக அளவு கூட்டம் தெரிந்தது.

இந்தவருடம் சித்திரை திருவிழாவிற்க்கு செல்கிறேன் என்றவுடன் நிறைய படம் பிடித்து கொண்டு வாங்க என்று பலர்(!) . எல்லோரிடமும் நான் வடம் பிடிக்க போறேன், படம் எல்லாம் கிடையாது என்றவுடம் ஏமாற்றம் அடைந்தனர். இதோ பலர் கேட்ட அந்த சித்திரை திருவிழா படங்கள், கொடியேற்றம் ஆரம்பித்து அழகர் ஆற்றில் இறங்கிய காட்சி வரை. மதுரை மண்ணின் தகவல் தொடர்பு சாதனங்களின் ஒன்றான மீடீயா தொலைகாட்சி இணையத்திலும் 400+ படங்களை வலையேற்றியுள்ளது கண்டுகளிக்க சுட்டி இதோ இங்கே. மதுரையை சார்ந்த அனைத்து தொலைகாட்சி நிலையங்களும் நேரடி ஒளிபரப்பு செய்தது மேலும் குறிப்பிடத்தக்கது।


குறிப்பு : குமரன்அண்ணா கேட்ட சொக்கரும் பிரியாவிடை அம்மனும் யானை வாகனத்தில் வரும் படம் இதில் உள்ளது, ஆனால் மௌலிஅண்ணா கேட்ட சப்தவர்ண சப்பர படம் இல்லை :(.

Wednesday, April 16, 2008

சித்திரை திருவிழாவிற்க்கு போகலாம் வர்ரீங்களா?

மக்களே! நன்பர்களே!

சித்திரை திருவிழாவை கடந்த ஐந்தாண்டுகளாக காணமுடியது இருந்தேன்! இவ்வருடம் அவள்(ன்) சித்தம் என்னை அழைக்கிறாள்(ன்)! உங்களையும் அழைப்பு விடுக்க வைத்து விட்டாள்(ன்).

அனைவரும் வருக॥ இறையருள் பெருக॥

திருக்கல்யாணத்தை http://www.maduraimeenakshi.org/ என்ற தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடாகியுள்ளது। நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் வீட்டிற்க்கு இந்த இணைய தளம் மூலம் வந்து காட்சியளிக்க உள்ளனர் அம்மையும் அப்பனும்.


Monday, April 14, 2008

டீ கோடிங்
இந்த படத்தை பார்த்தவுடன் என்ன தோண்றுகிறது।
அறியாதவர்கள் கீழே செல்லவும்।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மேற்க்கு மாம்பலம்.

(அப்பாட ஒரு மொக்கை பதிவு போட்டாச்சு.)

Thursday, April 10, 2008

சித்திரை திருவிழா அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்। நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் அழைப்பிதழ் நேற்று கண்ணில் பட்டது।

யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவகம்।

அனைவரும் வருக !
அருளாசி பெருக !
திருக்கல்யாணத்தை http://www.maduraimeenakshi.org/ என்ற தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடாகியுள்ளது। நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் வீட்டிற்க்கு இந்த இணைய தளம் மூலம் வந்து காட்சியளிக்க உள்ளனர் அம்மையும் அப்பனும்.

Monday, April 07, 2008

ஹலோ ஹலோ... ஹலோ!

நான் கே.ஆர்.எஸ்ஸை அவரது வீட்டு போனில் அழைக்கிறேன் (கற்பனை உரையாடல்)
நான் : ஹலோ! ஹலோ!
(எதிர் முனையில் ஒரு குழந்தை தன் காற்று குரலில் பேசுகிறது)
குழந்தை: ஹலோ!
நான்: (புரிந்து கொண்டு,) அப்பா இருகிறாரா?
குழ: இருக்கார், கொஞ்சம் வேலையா இருக்கார்.
நான்: அம்மா இருகிறாரா?
குழ: இருக்கார், கொஞ்சம் வேலையா இருக்கார்.
நான்: வேறயாராவது பெரியவங்க இருகிறாரா?
குழ: ஒரு போலிஸ்காரர் இருக்கார், அவரும் கொஞ்சம் வேலையா இருக்கார்.
நான்: வேறயாராவது பெரியவங்க இருகிறாரா?
குழ: இன்னொரு போலிஸ்காரர் இருக்கார், அவரும் கொஞ்சம் வேலையா இருக்கார்.
நான்: (பொருமையிழந்து) எல்லாரும் என்னாப்பா பண்றாங்க?
குழ: "என்னை தேடுகிறார்கள்" என்றபடி, தொலைபேசி இணைப்பை தூண்டிக்கிறது குழந்தை.

கொஞ்சநாளுக்கு முன்னால் கேட்ட ஒரு தமாஷை தமிழ் படுத்தி, பதிவு படுத்தி கொடுத்தாச்சு.