Monday, April 17, 2006

86: ஆண்டியும் அரசனும் ...

குமரன் அவர்களின் பங்குனி உத்திரம் - 3 பதிவை கண்டு மிகவும் மகிழ்ந்திருந்த வேளையில், ஒரு இனம் புரியாத சிந்தனை தூண்டியது. ஆனால் எதுவும் பிடிபடவில்லை.

சாதாரனமாக வாரத்தில் 2-3 முறை 'மலை மந்திர்' என்றழைக்கபடும் பொன்னேரகபதியான உத்தர சுவாமி மலையோனை கண்டு தரிசிப்பது வழக்கம். அன்று மாலை அவரை தரிசிக்க 92 படிகளுடைய அந்த மலையேரும் பொழுது அந்த இனம் புரியாத சிந்தனையின் பொருள் கிடைத்தது.

"பழனி ஆண்டவனை ஆண்டி கோலத்தில் தரிசித்தவர்கள் 'ராஜ அலங்காரத்தில்' கண்ட பிறகே தங்களது திருஆவினங்குடி பயணத்தை முடிப்பர்".

நாம் ராஜ அலங்காரத்தை வலையில் பார்க்க வில்லையே என்று எண்ணியபடி உள்ளே சென்று பார்த்த போது. அங்கே அந்த சுவாமிநாதன் "யாரங்கே சிவமுருகனின் சிந்தனையை பூர்த்திசெய்" என்பது போல் வேல், வாள், தண்டம் முதலிய 'அஸ்திரம்' ஏந்தி, மகுடம், பட்டு, பீதாம்பரம் தரித்து, சந்தனம்,ஜவ்வாது, பன்னீர், விபூதி பூசி, ரோஜா, மல்லி என்று மலர் பல சூடி ராஜ அலங்காரத்தில் நின்றருளினார். என்னால் பேச முடியவில்லை, பாட முடியவில்லை, குறைந்தது கந்த சஷ்டி கவசத்திலிருந்து "காக்க காக்க கனகவேல் காக்க" என்று வரும் 4 அடிகளை சொல்வதும் அன்றய தினம் முடியவில்லை.

இதைதான் "உன்னை பார்த்தெந்தன் தாய் மொழி மறந்தேன்" என்பதோ?

மணதில் உள்ளதை தாயறிவாள், கண்ணில் உள்ளதை மனைவி அறிவாள், தூரத்தில் உள்ளதை மக்களறிவர். இப்படி எல்லோருக்கும் அறிவிக்கும் முருகா எனக்கும் அப்படிதான் அறிவித்தாயோ?

இதோ முருகனின் ராஜ அலங்காரம்.

5 comments:

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். இந்தப் பதிவை இன்னும் எழுதி முடிக்கவில்லையா? அரைகுறையாக நிற்கிறதே?

சிவமுருகன் said...

save செய்ய publish ஆகி விட்டது என்று நினைக்கிறேன். இன்று எழுதுகிறேன்.

rnatesan said...

நன்றி சிவமுருகன்,
பரவாயில்லை பார்ட் 2 வை வெளியிடுங்கள்!!

rnatesan said...

நன்றி சிவமுருகன்,
பரவாயில்லை பார்ட் 2 வை வெளியிடுங்கள்!!

சிவமுருகன் said...

நடேசன் சார்,

இது பார்ட்-1 அல்ல, குமரன் சார் பார்த்த போது இந்த பதிவு இரு வரியில் இருந்தது அதற்க்காகத்தான் இன்று (௧௯19-04-2006) எழுதுவதாக சொன்னேன். அன்றே(௧௯19-04-2006) எழுதிமுடித்தாகி விட்டது.