மார்ச் மாத வேலை பளுபற்றி நான் சொல்ல வேண்டியதில்லை அப்பளுவின் காரணமாக வலை பதிவிலும், வலை சுற்றுதலும் சற்று தடைபட்டது. அதனாலேயே தினமும் அதிகபட்சமாக ஒரு பதிவை மட்டுமே பதியமுடிந்தது, மேலும் செய்திகளில் முதல் பக்கசெய்திகளை மட்டும் படித்து விட்டு அலுவலில் மூள்கியிருந்தேன்.
இன்று காலை எல்லா அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, சற்று க(இ)ளைபாற மின்னஞ்சலையும், சில செய்திகளையும் பார்க்க ஆரம்பித்தேன்.
அதில் நன்பர் பிரதீப்-ன் மகளீர் தின பதிவில் நானிட்ட பின்னூட்டத்திர்க்கு எதாவது பதிலுள்ளதா? என்று பார்க்க சென்றேன். பிரதீப் சுவாரசியமான விஷயங்களை நகைசுவையாகவும், தினம் தம் அனுபவத்தை நையாண்டியாகவும் அழகாகவும் சொல்வதில் வல்லவர். முகமலர சிரிக்க அங்கே சென்றேன். அங்கே தாம் செய்த மாடரேட்டிங் செட்டிங்கினால் எந்த பின்னூட்டமும் தாமக பதியவில்லை என்றும், எல்லாம் ப்ளாகர் பிள்ளை அடக்கமாய் எடுத்து வைத்துக் கொண்டு தான் எப்போது வந்து அதை ஆமோதித்து பதியப் போகிறேன் என்று காத்துக் கொண்டிருக்கிறதாக சொல்லியிருந்தார்.
அதில் அனுசுயா என்ற அவரது வாசகி ஒருவர் “உங்கள் வலைப்பதிவு சென்ற வாரம் தினமலரில் வந்திருந்தது வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தியிருந்தார். தற்போதைய தமது பதிவில் பிரதீப் “சென்ற வாரம் என் பதிவு தினமலரில், வந்ததாம். இது எனக்கே தெரியாத விஷயம். இது உண்மை தானா? அப்படி என்றால் தயவு செய்து யாராவது எனக்கு அந்த சுட்டியைத் தந்தால் தன்னியனாவேன்!” என்று கூறியிருந்தார்.
சரி இவரை தண்ணியாக்கலாம் சாரி சாரி தன்னியனாக்கலாம், அப்படியே தினமலரின் மற்ற அனைத்து பக்கங்களையும் பார்த்து ரொம்ப நாளாச்சு (சிலநாட்களாக வெறும் முதல் பக்க செய்திகளை மட்டும் படிப்பதை வழக்கமாக கொன்டிருந்தேன்), என்று ஒரே கல்லில் இரன்டு மாங்காய் அடிக்கலாம் என்று எண்ணி உள்ளே சென்றேன்.
சும்மா சொல்லகூடாது மொபைலில்(s.m.s.) ராசி பலன், ஈ-பேப்பர் என்று கலக்கி வரும் தினமலரல்லவா. அப்படியே மூழ்கினேன். சில நிமிடத்தில் எனக்கு கிடைக்கப் போகும் சந்தோஷத்தை பற்றி தெரியாமல்.
ஒவ்வொரு நாளாக எல்லா செய்திகளையும் படித்து, படங்களை பார்த்து, மதுரைகாரனல்லவா மதுரை மாவட்ட செய்தியையும் படித்து, பிந்தய நாளைய செய்திகளை படிக்க சென்றேன். மார்ச் 13, 2006 நாளேட்டில் அறிவியல் ஆயிரத்தில், தமிழில் படிக்க கிடைக்கும் பகுதியில் பிரதீப்பை தேடிய எனக்கு, மீனாட்சி அம்மனின் அருளால் எமது மனற்கேணி பற்றி பிரசூரித்து இருந்ததை கண்டு நம்பவும் முடியாமல், நம்பாமலும் இருக்க முடியாமல் ஒரு கணநேரம் நின்றிருந்தேன்.
கடமையை செய்த எனக்கு, கிடைத்த பலனை அங்கயர்கன்னியின் பாதத்தில் கணிக்கையாக்குகிறேன். மேலும், எம்பதிவை வெளியிட்ட தினமலருக்கும், அதை பார்த்து தெரிவித்த அனுசுயா அவர்களுக்கும், எமிருவருக்கும் பாலமாக இருந்த பிரதீப் அவர்களுக்கும், எமது பதிவை தினமும் வந்து பார்வையிட்டு, பின்னூட்டமிடும் திரு. குமரன், திரு. நடேசன், ஐயா. ஞானவெட்டியான், திரு. தருமி, திரு. தி.ரா.ச., திரு. இரத்தினவேலு, திரு. இராஜன், அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி, நன்றி, என்று கோடிமுறை கூறினாலும் குறைவே.
எனக்கும் சிலநாளாக பார்வையிட்டோர் எண்ணிக்கையில் திடீர் உயர்வை கண்டு எனக்கே சற்று சந்தே(தோச)கமாக தானிருந்தது. இப்போது தானந்த ஐயம்தீர்ந்தது மகிழ்ச்சி நிலைபெற்றது.
Saturday, March 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
sivamurugan,
vazhthukkal! aana neengal innum danniyan aagavillai enbathai ninaivu paduthi vidugiren. ungal blog kidaitha santhoshathil appadiye vitturratha? en blog kedaikkave illaya? :(
வருகைக்கு நன்றி பிரதீப். உங்களால் தான் நானே தன்யானானேன், தேடுதல் தொடர்கிறது. கிடைத்தவுடன் தன்யானாக்குறேன். இரண்டு வார தினமலரை உங்களுக்காக தான் தட்டினேன்.
விரைவில் உங்களது பதிவும் வரும்.
என் பதிவிற்க்கு முன்னரே உங்கள் பதிவு வந்துவிட்டது சுட்டவும்
அய்யா ஞான்வெட்டியானை நாளை சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் சந்தித்து உரையாட்ப் போகிறேன்!! ஏதாவது சொல்லவேண்டுமா!!
அன்புள்ள திரு. நடேசன்,
சந்தோஷத்தில் உலகமே மறந்துவிட்டது. என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவிக்கவும்.
தகவல் சொன்ன உங்களுக்கு நன்றி.
சிவமுருகன்.
இப்பொழுதுதான் தங்களின் இந்த பதிவை பார்த்தேன் இதில் என்னையும் குறிப்பிட்டு கூறியிருக்கிறீர்கள் நான் இன்றுதான் கண்டேன். நன்றி !
//இப்பொழுதுதான் தங்களின் இந்த பதிவை பார்த்தேன் இதில் என்னையும் குறிப்பிட்டு கூறியிருக்கிறீர்கள் நான் இன்றுதான் கண்டேன். நன்றி ! //
வாங்க அனுசுயா மேடம்,
இப்பதான் வந்தீங்களா?
ரொம்ப சந்தோஷம், அடிக்கடி வாங்க.
நானும் இந்தப் பதிவை இப்பத்தான் பார்க்கிறேன்.
வாழ்த்து(க்)கள்.
கொஞ்சம் தாமதமாப் போச்சு:-)))
அம்மா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் சிவபாலன்.
வாங்க கார்த்திக்வேலு,
மொத தடவை வந்திருக்கீங்க,
ரொம்ப நன்றி.
என் பெயர் சிவமுருகன், அங்க பாருங்க சிவபாலன் முறைகிறார்!
Post a Comment