Monday, February 27, 2006

சத்குருவின் சந்நிதியில் ...

என்னுள் இருக்கும் இறைவனை இவ்வுலகுக்கு அறிமுக படுத்திய என் சத்குருவிற்க்கு இப்படைப்பை காணிக்கையாக்குகிறேன்.

ஸத் குரு ஜக்கி வாசுதேவ்வை பற்றி நான் சொல்வதை விட நீங்களே சுட்டி மூலம் தெரிந்து கொள்ளலாம். அத்துனை எளிமையானவர் இப்பிரமாண்டத்தின் ரகசியத்தை, பேரின்பத்தை, நீங்களே அறியாமல் உங்களுக்கு உனரவைப்பவர், யோகப்பியாச்த்தை விஞ்ஞான பூர்வமாக நிறுபித்தவர், அதற்க்கான உதாரணம், தியான லிங்கம்.

இவரை வழிபடுபவரை விட இவர் சொன்ன வழியில் செல்பவரே ஏராளம். அத்தனை எளிமையானவர், அத்தனை உணர்வு பூர்வமானவர்.

சத்குரு அவர்கள் கடந்த 2000ம் ஆண்டில் தியானலிங்கத்தை பிராண பிரதிஷ்டை செய்தும், சர்வமத ஸ்தூபியையும், தியான மண்டபமொன்றையும் நிறுவினார். அன்றுமுதல் கோவையில் உள்ள ஆஸ்ரமத்தில் சிவராத்திரி மிககோலாகலமாக நடைபெறுகிறது. அதை ஆஸ்தா அலைவரிசையில் உலகம் முழூவதிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சத்குரு தம்மிடம் பயின்ற அனைவருக்கும் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புவார்.

லௌகீகத்தில் இருந்தவாரு துறவறத்தை மேற்கொள்ள இவர் காட்டும்வழி மிக அற்புதம். இவரது வகுப்புகள் (work shop) உலகெங்கிலும் நடந்துவருகிறது. வகுப்புகளின் அறிவிப்புகள் மேற்கூறிய இனையத்தில் கிடைக்கும்.

மேலும் இவரது எல்லையில்லா பேரானந்தத்தில் திளைக்க கடந்த சிவராத்திரியில் கலந்து கொண்டோர் மட்டும் ஐந்தரை லட்சம். கோவையே திரண்டுவந்து கலந்து கொண்டது இல்லை இல்லை இவ்வையகமே திரண்டுவந்து கலந்து கொண்டது.

Saturday, February 25, 2006

மாலைவேளையில்...

நேற்று ஏனோ உடம்புக்கு ஒன்றுமில்லை, என்றாலும் சீக்கிரமே அலுவலகத்தை விட்டு கிளம்பிவிட்டேன். வெளியில் வந்த எனக்கு சிறிய வாடை வரவேற்றது, நாற்றம் என்று தான் சொல்ல வேண்டும். உடனே இந்த நாற்றத்தை எங்கோ முகர்ந்த அனுபவம், தலையை குடைந்தது. முதலில் நான் எங்கு முகர்ந்தேன், இப்போது எங்கிருந்து வருகிறது என்பதை பிறகு பார்ப்போம்.

நான் இருப்பது புதுதில்லி, தெற்கு பகுதியில், 'நேரு ப்ளேஸ்' என்னும் பகுதியில் வேலை, நம்மூரில் சொல்லும் பட்டி தொட்டிகள் இங்கு ஏராளம். அப்படிபட்ட ஒரு பட்டியில் தான் நான் வசிக்கிறேன். தினமும் இப்பகுதியை கடந்து தான் செல்ல (தீர) வேண்டும்.

கடந்த மூன்றான்டில் இந்த வாடையை இப்பகுதியில் முகர்ந்த அனுபவம் இல்லை. இன்று ஏனோ, வாடை குமட்டியது, முதலில் நான் எங்கு முகர்ந்தேன் என்று நான் என் மனது 'செர்ச் இஞ்சினில்' தேடினேன்,தேடினேன். தேடினேன் வந்தது நான் 'தியாகராஜர் பள்ளியில்' படிக்கும் பொழுது ('கொஞ்சம் அழகி திரைபடத்தையோ, மால்குடி டேஸையொ ஞாபகபடுத்தி கொள்ளவும்') மாலை வேளையில் எல்லா நன்பர்களும் சிறுது நேரம் விளையாடிவிட்டு அனுப்பானடிக்கு சென்று பஸ் பிடித்து வீட்டிற்க்கு செல்வோம். சமயத்தில் தோப்புவழி எனும் குறுக்கு வழியில் செல்வோம், அப்படி செல்லும் வழியில் ஒரு ஐய்யனார் கோவிலும், கிணறும் இருக்கும், அந்த கோவிலுக்கு செல்வதற்க்காகவே இரு தென்னை மரத்தை வெட்டி போட்டிருப்பர், கீழே சாக்கடைஓடும், கர்னம் தப்பினால் மரணம் என்பது போல் கவனமாக கடக்க வேண்டும். அப்போது தான் தொடர்ந்து அனுப்பானடிக்கு செல்ல முடியும். முதன் முதலில் நாம் செல்லும் சமயத்தில் அவ்வளவாக சாக்கடை ஓடவில்லை, மழை காலங்களில் லேசாகவும், கன மழைநேரத்தில் அதிகமாவும் 'வெள்ளம்' போகும் என்று அனுப்பானடியில் வசிக்கும் கைடாக வந்த ஒரு நன்பன் சொன்னது நினைவுக்குவந்தது. அப்போது வந்த வாடை தான் நேற்று நான் முகர்ந்த வாடை, நெடி எல்லாம். நான் செல்ல வேண்டிய சப் வேயின் வாசலில் உள்ள சாக்கடை மூடியிலிருந்து ஏதோ அடைப்பின் காரணமாக கசிந்து கொன்டிருந்தது. இன்று காலை வரை யாரும் கண்டுகொள்ளாதது உபரி தகவல், நான் செல்லவேண்டிய சப் வே தப்பித்தது என் முன்னோர் செய்த புண்ணியம். 20 விணாடி கழித்து சுயநினைவடைந்து வீட்டிற்க்கு செல்ல பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்.