Monday, November 15, 2010

என்னவள்! எனை ஆளும் கோள்

என்னவளே!

அறிவாக பட்ஜட் போடுகையில் நீ சூரியன்,
அழகாக உன்னை செதுக்குவதில் நீ திங்கள்,
ஆலோசனை வழங்குவதிலும் ஆளுமையிலும் நீ செவ்வாய்,
அலுவலக் சிக்கலை தீர்ப்பதில் நீ புதன்,
என்றும் என் ஆசான் ஆவதில் நீ குரு,
அன்பை அள்ளி அள்ளி தருவதுலும், அதிர்ஷ்டம் ஆவதிலும் நீ வெள்ளி,
என்றும் காரியங்களை சரியாக செய்ய மிரட்டுவதில் நீ மந்தன்,
செய்வதை அற்பனிப்பாக, செவையாக இருப்பதில் நீ ராகு,
உன்னை மறைத்து என்னை முன்னிலை படுத்துவதில் நீ கேது

Sunday, November 14, 2010

என்னவளே!

என்னவளே!

நீ அழகாய் இருந்தால்

எனக்கேன் கர்வம்?

Tuesday, November 02, 2010

நீயற்ற நாட்கள் !

என்னவளே!

நீயற்ற நாட்கள்

விடுமுறை நாட்களாயின

கல்லூரியில்,

இப்போது நீயற்ற விடுமுறை நாட்களும்

வேலை நாளாகிவிட்டது

வாழ்க்கையில்!

Friday, October 29, 2010

நல்லவை பல்கிட,

அல்லவை இல்லாதாகிட,

என்றும் உலகில் அமைதி ஓங்கிட,

அனைவருக்கும் தீப திருநாள்

இதயம் கணிந்த நல்வாழ்த்துக்கள்!

Wednesday, October 27, 2010

ஆங்கில தேர்வில் தமிழ் எழுத்து

ஆண்டு தேர்வு
பத்தாம் வகுப்பு
ஆங்கிலம் முதல் தாள்
முதல் எழுத்து தமிழ் எழுத்து
""

Sunday, October 24, 2010

அரியது பெரியது கொடியது இனியது

அரியது என்ன?

அரிது அரிது ABAP-er ஆதல் அரிது
அதனிலும் அரிது HR,FICO, consultant ஆதல் அரிது
HR, FICO பெற்ற காலையும் Project-ம் client-ம் நயத்தல் அரிது
Project-ம் client-ம் நயந்த காலையும் knowledge updation promotion -க்கு வழிவகுத்திடுமே

பெரியது என்ன ?

பெரிது பெரிது நெட்வொர்க் பெரிது,
நேட்வொர்கோ cable படைப்பு
cable-லோ twisted-ல் வந்தொன்!
twisted - ஒ coil -ல் அடக்கம்,
coil - ஒ hardware -ல் ஒடுக்கம்
hardware - ஒ assembler-ன் நுனிவிரல் பொம்மை
assembler -ஒ software - ல் ஒடுக்கம்
software - ஒ programmer -ல் ஒடுக்கம்
programmer தம் பெருமையை சொல்லவும் பெரிதே

கொடியது என்ன?

கொடிது கொடிது கொடிங்க்க் கொடிது
அதனினும் கொடிது டி-கொடிங்க்க்
அதனினும் கொடிது கண்ணில் படா bug
அதனினும் கொடிது டிகொடிங்க்க் செய்பவர்
அதனினும் கொடிது அவர்கையல் சம்பளம் பெறுவது தானே


இனியது என்ன?

இனிது இனிது Programming இனிது!
அதனினும் இனிது Onsite-ல் வேலை
அதனினும் இனிது Onsite-ல் விடுமுறை எடுப்பதுதானே !

Friday, June 25, 2010

மதுர 1940களில்

இப்படி தான் இருந்தது நம்ம மதுர 1940களில்




























































































Friday, January 08, 2010

சோளக்காட்டு பொம்மை - 2

முருகா ஏனப்பா உனக்கு என் மீது விரோதமா
அல்லது பறவைகள் மீது பரிதாபமா?

-நானோ விவசாயின் -நண்பன்
புழுவுக்கு அடுத்த படியாய்,

அப்போது தான் அவன் உனக்கு
படியளப்பான் படிப்படியாய்

பறவைகளை உன்னவிடுவதில்லை
என குற்றம் சாட்டுகிறாயே !
அறுவடையான நெல்லை
நான்
காவல் காப்பதில்லையே !
அது உனக்கு விளங்கவில்லையே!

ஆரம்பத்தில் சிதறிகிடப்பதை இந்த
சின்ன சிறகுகள் உண்டுவிட்டால்
கதறிகிடக்கும் அதன் குஞ்சுகளும்
அதனோடு உன் பிஞ்சுகளும் !