Friday, March 17, 2006

மலையும் மாங்காயும்

13-03-2006, திங்கள் காலையில் ‘சடகோபன் ராஜன்’ என்ற பெயரிட்ட ஒரு மின்னஞ்சல் எனக்கு கிடைத்தது. மீனாட்சி அம்மன் கோவிலை தாமும் எம் பதிவில் மூலம் வலம்வந்து, மகிழ்ச்சியடைந்ததாக எழுதி இருந்தார். மேலும் தமது பயணகட்டுரையை பார்வை இடும்படியும் சுட்டிகளை தந்து கேட்டுக்கொண்டிருந்தார். சுட்டியை தட்டிய எனக்கு ஒரு வித வியப்புகலந்த, படபடப்பு.

காரணம் http://www.maraththadi.com/ListArticle.asp?TypeId=117 என்ற அந்த சுட்டி 'ராஜன்' அவர்களுடைய பல பயண தகவல்களின் சுட்டிகளை கொண்டிருந்தது. ஒவ்வொரு சுட்டிகளாக போய்ப் பார்த்த எனக்கு பிரம்மிப்பூட்டும் பல இடங்களின் படங்களை, தமக்குரிய நகைச்சுவை நடையில் சொல்லியிருந்தார், காட்டியும் இருந்தார்.

இதோடு என் பதிவை என்னால் ஒப்பிட்டு பார்க்க கூட முடியவில்லை. இது(என் பதிவு) சிறுபுல்லாகவும், அது பெரிய ஆலமரமாகவும், அது மலையாகவும் இது மாங்காயாகவும் தோன்றியது.

சமணர் மலைகள் பற்றி எனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது. ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய வாரம் மதுரையில் உள்ள ஜடாமுனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள சமணமத கோவிலில் ஒரு புதிய பெண்துறவியை அறிமுகம் செய்வர். அதை நான் பார்த்துள்ளேன். ஆனால் சமண படுகைகள், சமண மலை போன்ற இடங்களை பற்றி நான் நிறைய கேள்விபட்டதில்லை. இப்படிபட்ட எனக்கே அவ்விடத்தை பார்க்க ஆவல் பிறந்தது. ஒருமுறை நீங்களும் தான் சுட்டிகளை பாருங்களேன்.

இதே காரணத்தால் தான் ஓரிரு நாட்களாக புதிய பதிவுகளை பதிய மனமில்லாமல் இருந்தது. மீண்டும் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு என் நிலையை கூறியதற்க்கு மலையென்றோ, மாங்காயென்றோ எதுவும் கிடையாது, நாம் செய்வது ஒரு சிறிய சமய, சமுக பணி அவ்வளவே. அதை என்னையும் தொடர சொல்லி பதில் சொன்ன பிறகே, புதுத்தெம்புடன் இன்று மூன்றாவது பதிவை பதிக்கிறேன்.

1 comment:

குமரன் (Kumaran) said...

நானும் படித்துப் பார்க்கிறேன்.