Tuesday, June 27, 2006

173: ஆறு பதிவு

ஆறு பதிவை பதிக்க என்னை முதலில் அழைத்த மணியன் அவர்களுக்கும், அதை வழிமொழிந்த அண்ணன் குமரன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. பிடித்தது பிடிக்காதது என்றில்லாமல் ஆறில் உள்ள சிலவற்றை பார்க்கலாம்.

1. தேவ சேணையின் அதிபதிக்கு சிரங்கள் - ஆறு

2. மதுரையின் சின்னங்களாகவும், எல்லைகளாகவும் உள்ள சிவன் கோவில்கள் - ஆறு
1. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
2. இம்மையில் நன்மை தருவார் கோவில்
3. பழைய சொக்கநாதர் கோவில்
4. ஏடக நாதர் கோவில்
5. தென்திருவாலய கோவில்
6. முக்தீஸ்வரர் கோவில்

3. உலகில் வரும் பருவங்கள் - ஆறு
1. வஸந்தம்
2. மழை
3. இளவேணில்
4. கோடை
5. குளிர்
6. இலைஉதிர் காலம்

4. பூஜை நடக்கும் காலங்கள் - ஆறு
1. முதல் காலம் - அதிகாலை
2. இரண்டாம் காலம் - காலை
3. மூண்றாம் காலம் - உச்சி காலம்
4. நான்காம் காலம் - மாலை
5. ஐந்தாம் காலம் - இரவு
6. ஆறாம் காலம் - ஜாம காலம்

5. தேவர்களுக்கு பகல் பொழுது - ஆறு மாதங்கள்
1. மார்கழி
2. தை
3. மாசி
4. பங்குனி
5. சித்திரை
6. வைகாசி

6. தேவர்களுக்கு இரவு பொழுது - ஆறு மாதங்கள்
1. ஆனி
2. ஆடி
3. ஆவணி
4. புரட்டாசி
5. ஐப்பசி
6. கார்த்திகை

நான் அழைக்கும் ஆறு பேர்.

1. கதையோ, கவிதையோ, விமர்சனமோ, அனுபவமோ, தன் கடந்த காலமோ, எந்த ஒரு படைப்பானாலும் தன் நகைசுவை ‘மழை’யில் இணைய மக்களை நனைத்து, மகிழ்வித்து மணம்பரப்பி வரும் ‘மழை’ பிரதீப் (E.S.பிரதீப்)
2. தன் கவிதைகளாலும், கதைகளாலும் சிரிக்க, சிந்திக்க வைக்கும் ‘தூரல்கள்’ கார்த்திக் (E.S.கார்த்திக்)
3. தன் ஆன்மீக கேள்வி பதில்களால் ஒரு பெரிய வாசகர் வட்டமுள்ள அன்புள்ள சகோதரி ப்ரியா.
4. அரசியலாக இருந்தாலும், வேறு எந்த தலைப்பாக இருந்தாலும் தன் எழுத்துக்களால் பூத கண்ணாடி போட்டு அலசி சிந்திக்க வைக்கும் ‘வஜ்ரா’ ஷங்கர்.
5. தன் எழுத்துக்களால் ஒரு ரசிகர்கள் கூட்டத்தை இணையத்திலும், முத்தமிழ் குழுமத்திலும் பெற்றுள்ள ‘உலகின் புதிய கடவுள்’ செல்வன்
6. தன் அனுபவங்களை சமயம் கிடைக்கும் போதெல்லாம் (முத்திரை) பதித்து வரும் K.T.பிரதீப்.

Sunday, June 18, 2006

இன்று தந்தையர் தினம்

தரணி எங்கும் வாழ்கின்ற தங்கமான தந்தையர்களே! அனைவருக்கும் தந்தையர் தின வாழ்க்த்துக்கள்

அன்புடன்
சிவமுருகன்

Monday, June 12, 2006

எனக்கு பரிட்சை


எனக்கு பரிட்சை நடந்து வருவதாலும் நான் விழாமல் இருக்க விழுந்து விழுந்து படிப்பதாலும் பதிவிடுவதை சற்றே குறைத்துள்ளேன். பின்னூட்டமிடுவதை நீங்கள் சற்றும் குறைக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.27ம் தேதிக்கு பிறகு பதிவிற்க்கு வருகிறேன்.

சிபி சார் உங்களுக்கு பதில் சொல்லாததற்க்கும் இது தான் காரணம்.

அன்புடன்,
சிவமுருகன்.

Tuesday, June 06, 2006

161: ஆறு மணமே ஆறு...


ஆறு மணமே ஆறு.

இன்று இந்நூறாண்டின் ஆறாம் வருடம்,
இவ்வருடத்தின் ஆறாம் மாதம்,
இம்மாதத்தின் ஆறாம் நாள்,
இந்நாளில் மாலை ஆறாம் மணி,
இம்மணியில் ஆறாம் நிமிடம்,
இந்நிமிடத்தின் ஆறாம் வினாடி.
(இப்படி ஆறும் சேர்ந்த ஒரு சமயத்தில் இப்பதிவு)

இதுக்குமேல இருக்குற ஆறு(6) பத்தி சொல்லிகிட்டே போகலாம். ஆனா அதுவல்ல நான் சொல்ல வருவது, இதை போன்றதொரு நடப்புகள், நிகழ்வுகள் மிகக்அரிதாக வரும். கடந்த ஆண்டில் மே மாதம் இதே போல் வந்தது அதில் மேலும் ஒரு சிறப்பு இருந்தது அதை நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்.

Saturday, June 03, 2006

158: இந்தியா அன்று

இன்று காலை நன்பர் ஒருவரின் மின்னஞ்சல் என்னை வெகுவாக கவர்ந்தது.
அதை இங்கு பதித்துள்ளேன்.

ஒரு இந்திய நாட்டின் இளவரசி தன் தந்தையின் வீரசெயலோடு ஒன்றியிருந்து தாம் வேட்டையாடிய போது, 1920களில். இப்படமும் மேலும் சில படங்களும் "ரோலி புக்ஸ் நிறுவனத்தின்" பதிப்பான "வீர் சங்கவி" மற்றும் "ருத்ரான்ஷு முகர்ஜி" அவர்கள் எழுதிய 'India Then and Now' (இந்தியா அன்றும் இன்றும்), என்ற ஒரு புத்தகத்திலிருந்து. (முறத்தால் புலியை விரட்டிய தமிழச்சி ஞாபகத்தில் வருகிறதா?)

ஆங்கிலேய ஏகதிபத்யம்: இந்தியர்கள் ஒரு ஆங்கிலேயருக்கு சேவகம் செய்கின்றனர்.

இந்தியாவில் ஷேர் ஷா ஸூரி(Sher Shah Suri)யால் உருவாக்கப்பட்ட, கல்கத்தாவிற்க்கும் காபூலுக்கும் இடையே இருந்த முக்கிய சாலை தி கிரான்ட் ட்ரன்க் ரோட் (The Grand Trunk Road), படத்திலிருப்பது அம்பாலாவிலிருந்து தில்லிக்கு செல்லும் வழியில்.


தங்களின் உயர்ந்த வகை நகைகளாலும், உடைவகைகளாலும் புகழ்பெற்ற நாடிய குழுவினர். அரச சபைகளிலும், கோவில்களிலும் ஆடிய நாட்டிய தாரகைகள் 1830களில்.



ஏட்வின் லுதின் மற்றும் ஹெபெர்ட் பேக்கரால் வடிவமைக்க பட்ட தில்லி பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகையின் ஒரு கழுகு பார்வை.

1910ல் மும்பையில் நடைபெற்ற பெண்கள் மாநாடு, பெண்களும் சமூக அக்கரை மற்றும் அரசியல் ஆர்வம் கொண்டாவர் என்பதை விளக்கும் படமாக கருதப்படுகிறது.


வைஷ்ணவ குழு: ஹிந்து சனாதனத்தின் ஒரு குழு. இவர்களின் அடியவர்களை தான் கோஸ்வாமி - மஹராஜ்(Gosvami-maharajahs) என்பர்.இவர்களின் மேற்பார்வை பல கோவில் இருந்தன.


முஹலாய சக்ரவர்த்தி சாஜஹானால் 1650-1658களில் கட்டபட்ட தில்லி ஜாமா மசூதியின் ஒரு கழுகு பார்வை.

இந்தியா - இங்கிலாந்து இடையே பறந்த, தி இம்பீரியல் ஏர்வேஸ்(The Imperial Airways). ஷார்ஜாவில் எரிபொருள் நிரப்பிய போது.

அன்புடன்,

சிவமுருகன்.

Thursday, June 01, 2006

156: கணித்திருவிளையாடல்.

இது வரை நான் நகைசுவைபதிவை பதித்தில்லை முதல் முறையாக ஒரு நகைச்சுவை பதிவு தொடர்.
கணித்திருவிழையாடல்.
(சிரிப்பதற்க்கு மட்டும்)

காட்சி : 1
இடம்: மக்கள் கூடும் சந்தை

முரசு அறிவிப்பவன் யானை மீதிருந்து முரசு அறிவிக்கிறான்...

டும்... டும்... டும்...

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!!!!!!!

நமது பாண்டிய மன்னருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்ககூடிய C program கொண்டு வரும் ப்ரோகிராமருக்கு 1000 அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்படும்

டும்... டும்... டும்...
தருமி கூட்டத்தை விலக்கி கொண்டு முன் வருகிறான்
தருமி: (முரசு அறிவிப்பவனை பார்த்து) எவ்ளோ? 1000 அமெரிக்க டாலரா?
முரசு அறிவிப்பவன் : ஆமாம்.... ஆயிரம் அமெரிக்க டாலர்கள்
தருமி ஆவலை கட்டுபடுத்த முடியாமல், தனக்கு தானே பேச ஆரம்பிக்கிறான் ஆய்யோ ஒன்னா ரெண்டா ஆயிரம் டாலராச்சே, ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நான் என்ன பண்ணுவேன்.இப்போன்னு பார்த்து program எழுத வரலை ... அப்பா சொக்கா!!!! சிவன் தருமியின் முன் தோன்றுகிறார். அவரை பார்த்தால் system programmer போல் இருக்கிறார்.
சிவன்:புரோகிரமரே...
தருமி: யாரது?
சிவன்: அழைத்தது நான் தான்.
தருமி: அப்படியா? ஏன் அழைச்சீங்க?
சிவன்:மன்னரின் அய்யப்பாட்டை நீக்கும் உனக்கு கிடைத்தால் பரிசு அத்தனையும் உனக்கே கிடைத்துவிடுமல்லவா?
தருமி: ஆமாம், ஆமாம்
சிவன்: நான் அந்த ப்ரோகிராமை தருகிறேன்
தருமி: யாரு யாரு ... நீ
சிவன்: ஆம்
தருமி: அத கொண்டு போய் என் ப்ரோகிராம்னு சொல்லவா. எதோ Y2K BUG எல்லாம் solve மன்னிகிட்டு இருக்கேன், ப்ரோகிராம்ன்னு ஒத்துகிட்டு இருக்காங்க, அதையும் கெடுக்கலாமுன்னு பாக்கிறியா?
சிவன்: பரவாயில்லை எடுத்துச் செல்.
தருமி: அப்ப திருடலாம்ன்னு சொல்றியா?
சிவன்: ஹா ஹா ஹா ஹா
தருமி: தெய்வீக சிரிப்பையா உங்களுக்கு,
சிவன்: என் திறமைமீது சந்தேகமிருந்தால், நீ வேண்டுமானால் என்னை பரிசோதித்து பாரேன்... உனக்கு திறமை இருந்தால்
தருமி: தருமிக்கு கோபம் வருகிறது. யாரு... ஏங் எங்கிட்டேவா, எங்கிட்டேவா, மோத பாக்கிறியா, நான் ஆளு பார்க்க தான் சுமாரா இருப்பேன். ஆனா என் ப்ரோகிறாமை பற்றி உனக்கு தெரியாது... தயாரா.... இரு....
சிவன்: அப்படியே. கேள்விகளை நீகேட்கிறாயா நான் கேட்கட்டுமா?
தருமி: (நடுக்கத்துடன்) ஆ.. நானே கேட்கிறேன். எனக்கு கேட்க தான் தெரியும்...
தருமி: பிரிக்க முடியாதது என்னவோ
சிவன்: body shopping-ம், கமிஷனும்
தருமி: சேர்ந்தே இருப்பது?
சிவன்: விண்டோசும் BUGம்
தருமி: சொல்லகூடாதது?
சிவன்: client இடம் உண்மை
தருமி: சொல்லகூடியது?
சிவன்: seminarல் பொய்
தருமி: codeக்கு அழகு?
சிவன்: comment-உடனிருப்பது.
தருமி: comment எனப்படுவது?
சிவன்: புரியாதிருப்பது
தருமி: OS-க்கு?
சிவன்: UNIX
தருமி: Language-க்கு?
சிவன்: C
தருமி: off shoreக்கு?
சிவன்: நீ.
தருமி: On siteக்கு?
சிவன்: நான்.
தருமி: ஐயா ஆளைவிடு...
தருமி சிவனின் திருவடியில் விழுகிறார்.
தருமி : ஐயா நீர் ப்ரோகிராமர்.
சிவன்: அப்போது நீ.
தருமி: இல்லை நான் ப்ரோகிராமர் இல்லை. எங்கே அந்த ப்ரோகிராமை கொடுங்கள். மன்னர் என்ன கொடுக்கிறாரோ அதை அப்படியே உங்களிடம் கொடுத்து விடுகிறேன். நீர் பார்த்து ஏதாவது செய்யும்.

சிவன் ஒரு floppy disk-ஐ தருகிறார்..

சிவன்: பரிசு அத்தனையும் நீயே வைத்துக்கொள்.
தருமி: 1000 டாலரையா?
சிவன்: ஆம் சென்றுவா!!!
தருமி floppy உடன் புறப்படுகிறான்.. .. ஒருநிமிடம் தயங்கி சிவனை நோக்கி வருகிறான்..........
தருமி: பரிசு கிடைத்தால் நான் வைத்துக்கொள்கிறேன் வேறு ஏதாவது கிடைத்தால்
சிவன்: என்னிடம் வா நான் பார்த்துக் கொள்கிறேன்.
தருமி: எங்கேங்கே வீங்கி இருக்குன்னா?
சிவன்: ஹா... ஹா... ஹா...
தருமி: இதுக்கும் சிரிப்பு தானா
சிவன்: வெற்றி உனக்கே.. போய்வா
தருமி: நான் மறுமுறை எங்கே பார்க்கலாம்
சிவன்: எங்கும் பார்க்கலாம்
தருமி: ஒஹோ body shopper பொல இருக்கு
சிவன்: இந்த ஊரிலேயே பெரிய வீடு
சிவன், கோவிலைகாட்டுகிறார்




காட்சி 2:
இடம் : பாண்டியனின் மென்பொருள் திருச்சபை......

அங்கே நிறைய ப்ரோகிராமர்கள், சிஸ்டம் அனலிஸ்ட்டுகள், மட்யுல் லீடர்கள் எல்லோரும் தத்தமது லாப்டாபில் அமைதியாக உட்கார்ந்துள்ளனர்.
தருமி உள்ளே நுழைந்து குழம்பி போகிறான்.. .. ..
(முதலில் உள்ளவ ப்ரோகிராமரை நோக்கி)
தருமி: மன்னா!!!
அவரோ மன்னனரை நோக்கி கைகாட்டுகிறார், ஆனால் தருமி 2ம்வனை பார்த்து
¾ÕÁ¢: அரசே!!!!
(இப்படியே, இப்படியே, ஒவ்வொரு ப்ரோகிராமரை வணங்கி கடைசியில் அரசனை அடைந்து
தருமி: பார் வேந்தே, என்னை பார் வேந்தே!!! ப்ரோகிராமுடன் வந்திருக்கும் தருமியின் வணக்கம்
பாண்டியன்: எங்கே உமது சோர்ஸ் கோடை கொடும்.
தருமி கொண்டு வந்த ப்லாப்பி டிஸ்கை ஒப்படைக்கிறான். மன்னர் அதை பெற்று கீழே உட்கார்ந்திருக்கும் டேட்டா எந்ட்ரி ஆப்ரேட்டரிடம் தந்து சி ஃபைல் எடிட்டரில் திறக்க செய்கிறார்.

#include
void main()
{
a=13*3;
printf(“%d\n”,a);
}
பாண்டியனுக்கு புல்லரிக்கிறது.
பாண்டியன்: ஆஹா.. அற்புதமான சிண்டாக்ஸ், ஆழமான லாஜிக்... தீர்ந்தது சந்தேகம்.
தருமி: மன்னா பரிசு.
பாண்டியன் யாரங்கே... 1000 அமேரிக்க டாலரை கொண்டு வாருங்கள்......
தருமி: (தனக்கு தானே) மொதல்ல கம்ப்யூடர் கடனை அடைக்கனும்.
பரிசு வருகிறது.
பாண்டியன்: (தம் ஆஸ்தான ப்ரோகிராமர்களை கடைக்கண்ணால் பார்த்தபடி) ஸாப்ட்வேர் சங்கம் தீர்க்க முடியாத என் சந்தேகத்தை தனி ஒரு ப்ரோகிராமராக தீர்த்து வைத்த தருமிக்கு இந்த பரிசை அளிக்கிறேன்.

சபையின் மறுபக்கத்திலிருந்து ஒரு குரல் வருகிறது.

இது நக்கீரன் குரல் அவர் தன் பாண்டியனின் ராஜியத்தில் சீனியர் சிஸ்டம் அனலிஸ்ட்.
நக்கீரருக்கும் தருமிக்கு விவாதம் நடக்கிறது.
நக்கீரர்: மன்னா.. சற்று பொருங்கள் ப்ரோகிராமரே சற்றி இப்படி வருகிறீர்களா?
தருமி: முடியாது. பரிசை வாங்கி கொண்டு பிறகு வருகிறேன். மன்னா டாலரை போடு....
நக்கீரர்: அதில் தான் பிரச்சனை.
தருமி: வந்தேன். (நக்கீரரிடம் போகிறார்) என்னையா பிரச்சனை?
நக்கீரர்: இந்த ப்ரோகிராமை எழுதினது நீர்தானா?
தருமி: நான்... நான்... நானே தான் எழுதினேன். பின்ன என்ன இன்டர்நெட்ல இருந்து டவுன் லோட் பண்ணிட்டா வந்தேன்? என்னுடையது தான் என்னுடையதே தான்.
நக்கீரர்: அப்படி என்றால் ப்ரோகிராமை கம்பயில் செய்துவிட்டு பரிசை பெற்று செல்லலாமே.
தருமி: மன்னருக்கு விளங்கி விட்டது இடையில் நீர் என்ன. மன்னா!!! நான் ரொம்ப கஷ்டப்படுகிறென். இவர் வேறு கம்பயில் பண்ண சொல்கிறார்.
இதற்கிடையில் நக்கீரர் ப்ரோகிராமை கம்பயில் செய்கிறார். தவறு என்று தகவல் பெட்டி வருகிறது. Error - a not defiend
நக்கீரர்: சரியான ஒரு ப்ரோகிராமுக்கு எம் மன்னவர் பரிசளித்தால் அதை கண்டு மகிழும் முதல் மனிதன் நான், அதே சமயம் Ken Thompson-ம் Dennis Richieம் கட்டி காத்த இந்த மென்பொருள் திருச்சபையில் BUG உள்ள ப்ரோகிராமுக்கு பாண்டியன் பரிசளித்தால் அதை கண்டு வருந்தும் முதல் ஆளும் நானே.
தருமி: ஓஹோ! இங்கு எல்லாம் நீர்தானோ! கோட் எழுதி பேயர் வாங்கும் ப்ரோகிராமர்கள் இருக்கிறார்கள், BUG கண்டுபிடித்து பெயர் வாங்கும் ப்ரோகிராமர்களும் இருக்கிறார்கள்.
நக்கீரர்: ஹி..ஹி..
தருமி: சிரிக்காதீர், இதில் நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரியுமென்று எண்ணுகிறேன். ஒன்று மட்டு நிச்சயமைய்யா, உம்மை போல் இருவர், வேண்டாம் நீர் ஒருவரே போதும் இந்த மென்பொருள் துறை உருப்படும், முடிந்தால் மன்னரிடம் சொல்லுங்கள். எனக்கு பரிசு வேண்டாம்.

காட்சி 3:
இடம் : கோவில்
ஆற்றாமையில் புலம்புகிறான்
தருமி: எனக்கு வேனும்! எனக்கு வேனும்! ஆசை... ஆசை...என்னோட மானம் போச்சே.. இனிமே சொந்தமா ப்ரோகிராம் எழுதுனா கூட “ஏம்பா! நீஎழுதுனது தானா?” ன்னு கேட்பார்களே. நான் என்ன பண்ணுவேன்.
அங்கே உள்ள தூணில் தொற்றிக்கொள்கிறான்.
தருமி: யாரோ துரத்தி துரத்தி வந்து அடிக்கிற மாதிரி இருக்குதே.. சொக்கா சொக்கா அவனை நம்பி லாஜிக் போச்சு, இப்போ கத்தி கத்தி குரலும் போக போகுது, இல்ல அவனை கூப்பிட கூடாது கூடாது அவனில்லை நம்பாதே நம்பாதே.
சிவன் அங்கே தோன்றுகிறார்
தருமி: வாய்யா வா,
சிவன்: தருமியே பரிசு கிடைத்ததா?
தருமி: எல்லாம் கிடைச்சது உதை மட்டும் தான் பாக்கி. கொஞ்சம் இருந்திருந்தா அதை வாங்கிட்டு வந்திருப்பேன்.
சிவன்: (கோபத்துடன்) தருமி! நடந்ததை கூறு......
தருமி: பேசும் போது நல்லா பேசு ... ப்ரோகிராம் எழுதும் போது கோட்ட விட்டுரு. சபைல உன் கோடில் பக் இருக்குன்னு சொல்லிட்டாங்க.
சிவன்: என் கோடில் பக்க? எவம் சொன்னது
தருமி: அங்கே ஒருத்தன் இருக்கானே உங்க பாட்டன், சீனியர் சிஸ்டம் அனலிஸ்ட் அவன்தானையா சொன்னா.
சிவன்: வா என்னுடன்

(தருமியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சபைக்கு வருகிறான்...)

காட்சி 4:
இடம்: மென்பொருள் திருச்சபை.
சிவன்: தருமி கொண்டு வந்த கோடில் பக் என்று சொன்னவன் எவன்?
பாண்டியன்:அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்... அவை அடக்கத்துடன் கேட்டால் தக்க பதில் தரப்படும்.
சிவன்: அப்படியானால் மன்னரை விட மற்றவருக்கு மரியாதை அதிகமோ?
பாண்டியன்: இது அரச சபையல்ல மென்பொருள் திருச்சபை. இங்கு அனைவரும் சமம்.
சிவன்: அதனால் தருமி கொண்டு வந்த கோடில் குறை கூறினீரோ?
நக்கீரர்: பிழையான ப்ரோகிராம் என்பதால் பரிசுக்கு அருகதை இல்லை.
சிவன்: ஓ கீரனோ எந்த பக் கண்டீர்?
நக்கீரர்: முதலில் ப்ரோகிராம் எழுதிய நீர் வராமல் கோடை இவரிடம் கொடுத்தனுப்பியதன் காரணம்?
சிவன்: அது நடந்து முடிந்த கதை தொடங்கிய பிரச்சனைக்கு வாரும்....
நக்கீரர்: டிசைனருக்கு முதலில் பொய்யுரை தேவையில்லை என்பது தெரிந்திருக்கும்...
சிவன்: தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது, பிறந்தது, பிறவாது அனைத்தும் யாம் அறிவோம் அது பற்றி உமது விளக்கம் தேவையில்லை..
நக்கீரர்: எல்லம் தெரிந்தவர் என்றால் எழுதும் ப்ரோகிராமில் பக் இருக்காது என்ற அர்த்தமா? அதை யாம் எடுத்துக்கூறக்கூடாதா?
சிவன்: கூறும்... கூறி பாரும் ஹா... ஹா...
பாண்டியன்: ரிவியுவில் சரி செய்ய வரலாம், ஆனால் அது சண்டையா மாறி விடக்கூடாது.
சிவன்: சண்டையும் சச்சரவும் ப்ரோகிராமர்களில் பரம்பரை சொத்து, அதை மாற்ற யாராலும் முடியாது. (நக்கீரரை பார்த்து) எங்கு குற்றம் கண்டீர்? சின்டாக்ஸிலா? லாஜிக்கிலா?
நக்கீரர்: லாஜிக்கில் தவறு இருந்திருந்தாலும் அது கம்பயில் ஆகிவிடும், சின்டாக்ஸில் தான் பக் உள்ளது.
சிவன்: என்ன பக்?
நக்கீரர்: எங்கே, உம் ப்ரோகிராமை கூறும்....
சிவன்: #include
void main()
{
a=13*3;
printf(“%d\n”,a);
}
நக்கீரர்: இதன் பொருள்?
சிவன்: 13ம் 3ம் பெருக்கி a என்ற வேரியபள்லில் வத்து, பின் அதை பதிக்கிறேன்.
நக்கீரர்: இதன் மூலம் தாங்கள் மன்னருக்கு சொல்ல விரும்புவது?
சிவன்: ஹா. ஹா. புரியவில்லையா? int a; என்னும் declaration தேவையில்லை என்பது என்னுடைய முடிவு
நக்கீரர்:ஒருக்காலும் இருக்க முதியாது, முதலில் டிக்ளேர் செய்தால் மட்டுமே ஒரு வேரியபிளை பயன் படுத்த முடியுமே தவிர, டிக்ளேர் பண்ணாமல் வேரியபிளை பயன்படுத்த முடியாது.
சிவன்: C++லும் அப்படி தானோ?
நக்கீரர்:ஆம்
சிவன்: ஜாவாவில்?
நக்கீரர்: ஜாவா என்ன எல்லா ஹைலெவல் லாங்க்வேஜ்லும் அப்படி தான். ஒரு வேரியபிளை டிக்ளேர் செய்த பிறகே பயன்படுத்தமுடியும்.
சிவன்: உமது ப்ராஜெட் மேலாளருக்கும் அப்படி தானோ?
நக்கீரர்: ப்ராஜெட் மேலாளர் என்ன, நான் அன்றாடம் ப்ரவுஸ் செய்யும் kernigamமிற்க்கு இடப்பாகம் அமர்ந்திருக்கும், Ritchie, அவனுக்கும் அதே விதிப்படி தான்.
சிவன்:நிச்சயமாக?
நக்கீரர்: நிச்சயமாக...
சிவன்: உமது மென்பொருள் திறமையின் மீது ஆணையாக?
நக்கீரர்: எனது மென்பொருள் ஆலோசக்த்தின் மீது ஆணையாக
சிவன்: அல்லும் பகலும் வன்பொருளில் வேலை செய்து Y2K பக்கை சீராக்கும் கீரனோ, என் C-ப்ரோகிராமை ஆராய்யத்தக்கவன்.
நக்கீரன்: Y2K solve செய்வது எங்கள் வேலை, நாமும் COBOL-ஐ எழுதுகிறோம், ஆனால் உன்போல் சின்டாக்ஸில் தவறு செய்வதில்லை...
சிவன்: நக்கீரா.. நன்றாக என்னை பார்.. (நெற்றிகண்ணை திறந்து காட்டுகிறார் அங்கே அவருடைய ASNI-Certificate தெரிகிறது) .
நக்கீரன்: நீரே ANSI standard-ம் ஆகுக, வேரியபிளை டிக்ளேர் செய்யாதது குற்றமே, சான்றிதழ் காட்டிய பின்பும் குற்றம் குற்றமே.
சிவன் தமது ப்ரோகிரமால் நக்கீரரது கணினியில் உள்ள வன்தகடை(ஹார்ட் டிஸ்க்) எரிக்கிறார்.
பாண்டியன்: இறைவா... பிழையை பொருத்தருள வேண்டும்... சீனியர் சிஸ்டம் அனலிஸ்ட் நக்கீரனின் வன்தகடை மீட்க வேண்டும்
சிவன் விஸ்வரூபம் எடுக்கிறார்...
சிவன்: பாண்டியமன்னா! நக்கீரனின் வன்தகடு இப்போதே மீட்கப்படும் எம்ப்ரோகிராமால் ஏற்ப்பட்ட வைரஸை நீக்க Aptech-ல் இருந்து மீண்டு வருவான், நான் உங்களின் மென்பொருள் திறமையை சோதிக்கவே இத்திருவிளையாடலை புரிந்தோம். எமது கணிதிருவிளையாடல்களில் ஒன்று.நக்கீரன்: இறைவா!!! UNIXம் நீயே WINDOWS-ம் நீயே C-ம் நீயே, ஜாவாவும் நீயே, வேரியபிளும் நீயே, கான்ஸ்டன்ட்டும் நீயே...