Saturday, March 25, 2006

29: தினமலரில் எமது பதிவு

மார்ச் மாத வேலை பளுபற்றி நான் சொல்ல வேண்டியதில்லை அப்பளுவின் காரணமாக வலை பதிவிலும், வலை சுற்றுதலும் சற்று தடைபட்டது. அதனாலேயே தினமும் அதிகபட்சமாக ஒரு பதிவை மட்டுமே பதியமுடிந்தது, மேலும் செய்திகளில் முதல் பக்கசெய்திகளை மட்டும் படித்து விட்டு அலுவலில் மூள்கியிருந்தேன்.

இன்று காலை எல்லா அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, சற்று க(இ)ளைபாற மின்னஞ்சலையும், சில செய்திகளையும் பார்க்க ஆரம்பித்தேன்.

அதில் நன்பர் பிரதீப்-ன் மகளீர் தின பதிவில் நானிட்ட பின்னூட்டத்திர்க்கு எதாவது பதிலுள்ளதா? என்று பார்க்க சென்றேன். பிரதீப் சுவாரசியமான விஷயங்களை நகைசுவையாகவும், தினம் தம் அனுபவத்தை நையாண்டியாகவும் அழகாகவும் சொல்வதில் வல்லவர். முகமலர சிரிக்க அங்கே சென்றேன். அங்கே தாம் செய்த மாடரேட்டிங் செட்டிங்கினால் எந்த பின்னூட்டமும் தாமக பதியவில்லை என்றும், எல்லாம் ப்ளாகர் பிள்ளை அடக்கமாய் எடுத்து வைத்துக் கொண்டு தான் எப்போது வந்து அதை ஆமோதித்து பதியப் போகிறேன் என்று காத்துக் கொண்டிருக்கிறதாக சொல்லியிருந்தார்.

அதில் அனுசுயா என்ற அவரது வாசகி ஒருவர் “உங்கள் வலைப்பதிவு சென்ற வாரம் தினமலரில் வந்திருந்தது வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தியிருந்தார். தற்போதைய தமது பதிவில் பிரதீப் “சென்ற வாரம் என் பதிவு தினமலரில், வந்ததாம். இது எனக்கே தெரியாத விஷயம். இது உண்மை தானா? அப்படி என்றால் தயவு செய்து யாராவது எனக்கு அந்த சுட்டியைத் தந்தால் தன்னியனாவேன்!” என்று கூறியிருந்தார்.

சரி இவரை தண்ணியாக்கலாம் சாரி சாரி தன்னியனாக்கலாம், அப்படியே தினமலரின் மற்ற அனைத்து பக்கங்களையும் பார்த்து ரொம்ப நாளாச்சு (சிலநாட்களாக வெறும் முதல் பக்க செய்திகளை மட்டும் படிப்பதை வழக்கமாக கொன்டிருந்தேன்), என்று ஒரே கல்லில் இரன்டு மாங்காய் அடிக்கலாம் என்று எண்ணி உள்ளே சென்றேன்.

சும்மா சொல்லகூடாது மொபைலில்(s.m.s.) ராசி பலன், ஈ-பேப்பர் என்று கலக்கி வரும் தினமலரல்லவா. அப்படியே மூழ்கினேன். சில நிமிடத்தில் எனக்கு கிடைக்கப் போகும் சந்தோஷத்தை பற்றி தெரியாமல்.

ஒவ்வொரு நாளாக எல்லா செய்திகளையும் படித்து, படங்களை பார்த்து, மதுரைகாரனல்லவா மதுரை மாவட்ட செய்தியையும் படித்து, பிந்தய நாளைய செய்திகளை படிக்க சென்றேன். மார்ச் 13, 2006 நாளேட்டில் அறிவியல் ஆயிரத்தில், தமிழில் படிக்க கிடைக்கும் பகுதியில் பிரதீப்பை தேடிய எனக்கு, மீனாட்சி அம்மனின் அருளால் எமது மனற்கேணி பற்றி பிரசூரித்து இருந்ததை கண்டு நம்பவும் முடியாமல், நம்பாமலும் இருக்க முடியாமல் ஒரு கணநேரம் நின்றிருந்தேன்.

கடமையை செய்த எனக்கு, கிடைத்த பலனை அங்கயர்கன்னியின் பாதத்தில் கணிக்கையாக்குகிறேன். மேலும், எம்பதிவை வெளியிட்ட தினமலருக்கும், அதை பார்த்து தெரிவித்த அனுசுயா அவர்களுக்கும், எமிருவருக்கும் பாலமாக இருந்த பிரதீப் அவர்களுக்கும், எமது பதிவை தினமும் வந்து பார்வையிட்டு, பின்னூட்டமிடும் திரு. குமரன், திரு. நடேசன், ஐயா. ஞானவெட்டியான், திரு. தருமி, திரு. தி.ரா.ச., திரு. இரத்தினவேலு, திரு. இராஜன், அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி, நன்றி, என்று கோடிமுறை கூறினாலும் குறைவே.

எனக்கும் சிலநாளாக பார்வையிட்டோர் எண்ணிக்கையில் திடீர் உயர்வை கண்டு எனக்கே சற்று சந்தே(தோச)கமாக தானிருந்தது. இப்போது தானந்த ஐயம்தீர்ந்தது மகிழ்ச்சி நிலைபெற்றது.

Monday, March 20, 2006

24: கருமுத்து கண்ணன் அவர்களின் மின்மடல்

நன்பர்களே,

இன்று என் வாழ்வில் ஒரு நன்நாள், இனிய பொன்நாள்.

இன்று மதியம் 1.30 மணியளவில் திரு 'கருமுத்து கண்ணன்' அவர்கள் எனக்கு எழுதிய மின்னஞ்சல் கிடைக்க பெற்றேன்.

உங்களில் பலர் எனது வலை பதிவை (http://www.blogger.com/profile/10745607) பார்த்திருக்க கூடும், அதை பார்வையிட்ட அன்னார் எம்மை வாழ்த்தி மின்னஞ்சல் எழுதியிருந்தார்.

இதொ அவர் எழுதிய மின்னஞ்சல்,

Dear Mr. Sivamurugan,
I was recently told about your blog by yourfriend.

Going through the site I found it interesting,you have taken lot of efforts in collectingall this information and giving it in a very informative format.

On behalf of the Temple, I wish to thank youfor the efforts you are taking to promote A/M Meenakshi Sundareswarar Temple.

Please keep us informed if you have any suggestions or improvements to make in the Temple.

Regards
Karumuttu T. Kannan
Chairman,
Board of Trustees
Arulmigu Meenakshi SundareswararTemple
Madurai.

இப்பாராட்டுக்கு என்னை தகுதியாக்கிய அங்கயர்கன்னிக்கு முதலில் என் வணக்கத்தை சொல்லி, மேலும் என்னை முதலில் இருந்தே ஊக்கமும் உற்சாகமும் தரும் உங்களுக்கும், என்னை அவரிடம் அறிமுகபடுத்தியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,
சிவமுருகன்

Friday, March 17, 2006

மலையும் மாங்காயும்

13-03-2006, திங்கள் காலையில் ‘சடகோபன் ராஜன்’ என்ற பெயரிட்ட ஒரு மின்னஞ்சல் எனக்கு கிடைத்தது. மீனாட்சி அம்மன் கோவிலை தாமும் எம் பதிவில் மூலம் வலம்வந்து, மகிழ்ச்சியடைந்ததாக எழுதி இருந்தார். மேலும் தமது பயணகட்டுரையை பார்வை இடும்படியும் சுட்டிகளை தந்து கேட்டுக்கொண்டிருந்தார். சுட்டியை தட்டிய எனக்கு ஒரு வித வியப்புகலந்த, படபடப்பு.

காரணம் http://www.maraththadi.com/ListArticle.asp?TypeId=117 என்ற அந்த சுட்டி 'ராஜன்' அவர்களுடைய பல பயண தகவல்களின் சுட்டிகளை கொண்டிருந்தது. ஒவ்வொரு சுட்டிகளாக போய்ப் பார்த்த எனக்கு பிரம்மிப்பூட்டும் பல இடங்களின் படங்களை, தமக்குரிய நகைச்சுவை நடையில் சொல்லியிருந்தார், காட்டியும் இருந்தார்.

இதோடு என் பதிவை என்னால் ஒப்பிட்டு பார்க்க கூட முடியவில்லை. இது(என் பதிவு) சிறுபுல்லாகவும், அது பெரிய ஆலமரமாகவும், அது மலையாகவும் இது மாங்காயாகவும் தோன்றியது.

சமணர் மலைகள் பற்றி எனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது. ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய வாரம் மதுரையில் உள்ள ஜடாமுனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள சமணமத கோவிலில் ஒரு புதிய பெண்துறவியை அறிமுகம் செய்வர். அதை நான் பார்த்துள்ளேன். ஆனால் சமண படுகைகள், சமண மலை போன்ற இடங்களை பற்றி நான் நிறைய கேள்விபட்டதில்லை. இப்படிபட்ட எனக்கே அவ்விடத்தை பார்க்க ஆவல் பிறந்தது. ஒருமுறை நீங்களும் தான் சுட்டிகளை பாருங்களேன்.

இதே காரணத்தால் தான் ஓரிரு நாட்களாக புதிய பதிவுகளை பதிய மனமில்லாமல் இருந்தது. மீண்டும் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு என் நிலையை கூறியதற்க்கு மலையென்றோ, மாங்காயென்றோ எதுவும் கிடையாது, நாம் செய்வது ஒரு சிறிய சமய, சமுக பணி அவ்வளவே. அதை என்னையும் தொடர சொல்லி பதில் சொன்ன பிறகே, புதுத்தெம்புடன் இன்று மூன்றாவது பதிவை பதிக்கிறேன்.