Saturday, May 26, 2007

என்னவளே!

என்னவளே!

காலையும் மாலையும்

இரவும் பகலும்

மனமும் நினைவும்

ஊணும் உறக்கமும்

காட்சியும் பொருளும்

பிழையும் பேழையும்

எல்லாமும் இல்லாமும்

நீதான் எனக்கு நீதான்!

Friday, May 25, 2007

ஏனடி என்னவளே!

ஏனடி என்னவளே!

உன்னிடம் தோற்றால்

ஏனடி

என்னிடம் கோபிக்கிறேன்?

_______________________________________

நீ தோற்ற போது நான் அழுதேன்!

நான் தோற்ற போதோ நீ சிரித்தாயே?

ஏனடி?
________________________________________

Thursday, May 24, 2007

என்னவளே!

மாயம் செய்யாத
மாயவள்
துர்குணமற்ற
தூயவள்
என்றும் நீ
என்னவள்

Wednesday, May 02, 2007

வாராரு வாராரு அழகர் வாராரு ...

பச்சை பட்டு உடுத்தி, கள்ளழகர் கோலத்தில் இன்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்கிய அழகர்.


யாம் பெற்ற இன்பம் உங்களுக்கும்.

படம் : நன்றி தினமலர்.

Monday, April 30, 2007

சித்திரை திருவிழா:

சித்திரை திருவிழா

கடந்த வருடம் மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழாவை தினந்தோறும் பதிவில் பதித்து வந்தேன். மிக கடினமான அலுவல் காரணமாக என்னால் இவ்வருடம் தொகுக்க முடியாமல் போனது.

ஒவ்வொரு நாளும் அம்மையும் அப்பனும் பல பல வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தனர். ஆறாம் நாள் காலையில் பிக்ஷாடனார் கோலத்தில் வலம் வந்து தன் திருமணத்திற்க்கு நிதி சேர்த்த வைபவமும். நேற்று காலை திருமணமும், இரவு புஷ்ப்ப பல்லாக்கும், இன்று காலை தேர்திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது.


துல்லியமான படங்கள் தினமலரில், சுட்டி இதோ சித்திரை திருவிழா:

Tuesday, April 17, 2007

அஃறிணை அழகுகளும் மறந்து விட்ட படிப்பினைகளும்

முதல் முதலில் ஒரு பதிவரின் குரலை கேட்டது என்றால் அது நம்ம கண்ணபிரான் இரவிசங்கர் தான். அப்பேற்பட்டவர், பதிவு பதிக்க அழைக்கிறார் அதுவும் அழகு பற்றிய தொடராக.

யாராவது பதிவு பதிக்க கூப்பிட்டா சட்டுன்னு சரின்னு சொல்லாம இப்படி பதிக்கவா? அப்படி பதிக்கவா? ன்னு கருத்து கணிப்பும், செல்லாத ஓட்டு போடக்கூடாதுன்னு திஸ்கி வேற. கடைசியா சரியான மாதிரி நான் மாட்ட இதோ ஒரு பதிவு மாட்டிகிச்சு.

அஃறிணை அழகுகளும் மறந்து விட்ட படிப்பினைகளும்.

ஆவினங்கள்
தன் கன்றோடு தன் எஜமானன் குழந்தைகளையும் காக்கும் ஆவினங்கள் அழகு.
மனித(ம்)ன் மறந்தது: பிரதியுபகாரம் காணாமல் செய்யும் நன்றி.

ஆலமர விதை
சிவப்பாய் - சிறியதாய் பிறந்த ஆலமர பழத்தினுள்ளே இருக்கும் ஆலவிதை அழகு
மனித(ம்)ன் மறந்தது: சிறிதாய் பிறப்பது குற்றமல்ல, சிறிதாய் மரிப்பது.

ஆலமர விழுது
ஏன்றோ வளர ஆரம்பித்து ஏன்றோ தரையை தொட ஊஞ்சலாடும் ஆல விழுது அழகு
மனித(ம்)ன் மறந்தது: பொருமையோடு வளர்ச்சியும் இருக்க வேண்டியதன் அவசியம்

தலையாட்டி பொம்மை
சிரிக்க வைத்து கவனத்தை ஈர்க்கும் தலையாட்டி பொம்மை அழகு
மனித(ம்)ன் மறந்தது:எல்லாவற்றையும் ஏற்க்கும் மனதும், சமநோக்கையும்

மெழுவர்த்தி
தன்னையே கரைத்து வேலையை செய்யும் மெழுவர்த்தி அழகு.
மனித(ம்)ன் மறந்தது:இருளை துடைக்க ஒண்டியாய் போராடும் மனப்பாண்மை

மரப்பெட்டி
தன்னுள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து தேவைப்படும் போது தரும் மரப்பெட்டி அழகு
மனித(ம்)ன் மறந்தது: தேவையில் தரும் சேவை.
நான் அழைப்பது : ஒன்னு இல்ல ரெண்டு பிரதீப். ("மழை" பிரதீப்பும், "காற்றில் பறக்கும் காகிதம்" பிரதீப்பும்).

Monday, March 26, 2007

ஆண்மையும்! பெண்மையும்!

ஆணின் ஆண்மை


தோள் அளவை கொண்டு எடை போடாதே ஆண்மையை
அவன் அரவணைக்கும் கரங்கள் சொல்லிவிடும்


அவன் வார்த்தைகளால் அளக்க முடியாது ஆண்மையை
அவனுடைய கண்ணியமிக்க வார்ததைகளில் சொல்லும்



அவன் நட்பு வட்டத்தை கொண்டு அளவிட முடியாது
அவனுடைய குழந்தையோடிருக்கும் நன்பர்களை கொண்டு காணலாம்


பணியிடத்தில் அவனுக்கு கிடைக்கும் மரியாதையல்ல அவன் சுயமரியாதை
அவன் இல்லத்தில் கிடைக்கும் மரியாதை தான் சுயமரியாதை



அவனுடைய கடின மோதலல்ல அவன் ஆண்மை
அவனுடைய இதமான வருடலே அவன் ஆண்மை



மார்பிலிருக்கும் முடியின் அளவல்ல ஆண்மை
அந்த மார்புக்குள்ளிருக்கும் இதயத்தின் அளவு ஆண்மை



எத்தனை பெண்களால் விரும்பப் படுகிறான் என்பத்தல்ல ஆண்மை
எத்துனை உண்மையாக ஒரு பெண்ணிடம் நடக்கிறான் என்பதே ஆண்மை


அவன் தூக்கும் பளுவை கொண்டதல்ல ஆண்மை
இன்னல்களிலும் தன்னுடைய புரிதலை காட்டுவது ஆண்மை.



பெண்ணின் பெண்மை


பெண்மை அவளுடுத்தும் உடையல்ல,
அவள் தோற்றமல்ல
அவள் பிண்ணும் பிண்ணல்ல.
பெண்மை அன்பின் இருப்பிடமான இதயத்தின்
வாசல்லிருந்து(கண்கள்) உணரக்கூடியது



அவளது முகச்சாயத்தால்
அளவிடமுடியாதது பெண்மை
அவள் ஆண்மாவில் உறைந்துள்ளது
அவள் உண்மை அழகான பெண்மை


அவள் காட்டும் அக்கறை
உணர்த்துவது பெண்மை
பெண்மையின் அழகு அவள்
வயது கூட கூட அதுவும் கூடும்


மனைவியின் முதல் காதலை பெற்றவன் அதிர்ஷ்டசாலி
கணவனின் கடைசி காதலை பெற்றவள் அதனினும் அதிர்ஷ்டசாலி
முதலும் கடைசியும்மாக காதலை பெற்ற தம்பதிகள்

ஆதர்ஷ தம்பதிகள்!

Friday, February 16, 2007

சிவராத்திரி

முக்கண்ணன், அபிஷேக பிரியனுக்கு இன்று ஒரு நாள் அவன் மக்களுக்கு மோக்ஷதிற்க்கு வழிகாட்டும் நாள்.

இதை செய்! அதை செய்! என்ற பகாவன் தன்னை வணங்கு என்று ஒரு போதும் சொல்வதில்லை, சாதாரணமாக அப்படி ஒரு முதலாளி தன் வேலைக்காரனை வணங்கு என்று சொல்லாமல், வேலையே வாங்குவது போல், அதே போல் மேலும் நன்பனிடத்தில் மரியாதை இருந்தாலும் அவனை வணங்காமல் எப்படி நாமும் நம்மை பற்றி சொல்லிக்கொள்வது போல் பகவானும் அதையே செய்கிறார்.

அப்பேற்பட்ட மோக்ஷத்தை அள்ளி தர அழைக்கிறார் வாருங்கள் நாமும் செல்வோம் ஈசனின் சன்னிதி நோக்கி.

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித ஷொபித லிங்கம்
ஜன்ம ஜதுக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவ முனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணகார லிங்கம்
ராவண தர்ப வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகன்தி ஸுலெபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

கனக மஹாமனி பூஷீத லிங்கம்
பனிபதி வேஷ்டித சொபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ வினாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லெபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசொபித லிங்கம்
ஸன்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தெவகணார்சித ஸெவித லிங்கம்
பாவையர் பக்திபிரெவ ச லிங்கம்
தினகர கோடி பிரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வெஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யஹ படெத் சிவ சந்நிதௌ
சிவலொகம் ஆவாப்னொதி
சிவேன ஸஹ மோததே

என்று சுந்தரேஸ்வரரை வணங்கி

(மூலவரும், ஆருத்ரா தரிசனிதின் போது உலாவரும் உற்சவரரும்)
(பாரம்பரிய தோற்றம்)


வெள்ளியம்பல நடராஜர் சன்னிதி முழுவதும் வெள்ளியால்வேயப்பட்ட பின்

"வெள்ளியம்பல நடராஜருக்கு சந்தன அலங்காரமிட்டு ஆரத்தி"

கணிவு கொடுக்கும் கண்ணதாசன் பாடல்.

ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என் ஐந்தானவன்,

இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்

பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்

காற்றானவன்...ஒளியானவன்...
நீரானவன்... நெருப்பானவன்...
நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்... அன்பின்
ஒளியாகி நின்றானவன்!”

நம பார்வதே பதயே!
ஹர ஹர மஹா தேவா!

தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!