Monday, February 27, 2006

சத்குருவின் சந்நிதியில் ...

என்னுள் இருக்கும் இறைவனை இவ்வுலகுக்கு அறிமுக படுத்திய என் சத்குருவிற்க்கு இப்படைப்பை காணிக்கையாக்குகிறேன்.

ஸத் குரு ஜக்கி வாசுதேவ்வை பற்றி நான் சொல்வதை விட நீங்களே சுட்டி மூலம் தெரிந்து கொள்ளலாம். அத்துனை எளிமையானவர் இப்பிரமாண்டத்தின் ரகசியத்தை, பேரின்பத்தை, நீங்களே அறியாமல் உங்களுக்கு உனரவைப்பவர், யோகப்பியாச்த்தை விஞ்ஞான பூர்வமாக நிறுபித்தவர், அதற்க்கான உதாரணம், தியான லிங்கம்.

இவரை வழிபடுபவரை விட இவர் சொன்ன வழியில் செல்பவரே ஏராளம். அத்தனை எளிமையானவர், அத்தனை உணர்வு பூர்வமானவர்.

சத்குரு அவர்கள் கடந்த 2000ம் ஆண்டில் தியானலிங்கத்தை பிராண பிரதிஷ்டை செய்தும், சர்வமத ஸ்தூபியையும், தியான மண்டபமொன்றையும் நிறுவினார். அன்றுமுதல் கோவையில் உள்ள ஆஸ்ரமத்தில் சிவராத்திரி மிககோலாகலமாக நடைபெறுகிறது. அதை ஆஸ்தா அலைவரிசையில் உலகம் முழூவதிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சத்குரு தம்மிடம் பயின்ற அனைவருக்கும் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புவார்.

லௌகீகத்தில் இருந்தவாரு துறவறத்தை மேற்கொள்ள இவர் காட்டும்வழி மிக அற்புதம். இவரது வகுப்புகள் (work shop) உலகெங்கிலும் நடந்துவருகிறது. வகுப்புகளின் அறிவிப்புகள் மேற்கூறிய இனையத்தில் கிடைக்கும்.

மேலும் இவரது எல்லையில்லா பேரானந்தத்தில் திளைக்க கடந்த சிவராத்திரியில் கலந்து கொண்டோர் மட்டும் ஐந்தரை லட்சம். கோவையே திரண்டுவந்து கலந்து கொண்டது இல்லை இல்லை இவ்வையகமே திரண்டுவந்து கலந்து கொண்டது.

2 comments:

குமரன் (Kumaran) said...

இரண்டு வருடங்களுக்கு முன் கோவைக்குச் சென்றிருந்த போது தியான லிங்கத்தை தரிசனம் செய்து திருமுன்பு சிறிது நேரம் அமைதியாய் உட்கார்ந்திருக்க வாய்ப்பு கிட்டியது. உங்கள் பதிவைப் பார்த்தபோது அது தான் நினைவிற்கு வந்தது.

சிவமுருகன் said...

சரியாக சொன்னீர்கள். நான் இது நாள் வரை ஆசிரமம் சென்றதில்லை.