Saturday, September 27, 2008

மதுரைக்கு போனேனடி - 1

கடந்த இருவருடங்களாக மதுரை சென்ற சமயம் செய்ய முடியாத ஒன்று இம்முறை முடிந்தது.

ஒவ்வொருதடவை ஒரு முறையாவது மீனாட்சி அம்மன் கோவில் திருபள்ளியெழுச்சி, மற்றும் பள்ளியறை பூஜையையும் மேலும் கூடல் அழகரின் விஸ்வரூப தரிசனத்தையும் தரிசிக்க வேண்டும் என்று எண்ணுவேன், இந்த முறை அது நடந்தேறியது.

அதிகாலை நான்கு மணிக்கே வீட்டில் ஒவ்வொருவராக எழுந்து விடுவர். காலை, மாலை 4.30-5.00 மணிவரை அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நகரா மண்டபத்தில் நகரா வாத்தியங்கள் வாசிப்பர்.

நாதஸ்வரம், தண்டோரா, இன்னபிற மங்கள வாத்தியங்களை இசைக்க கேட்பதை (அதுவும் வீட்டிலிருந்தே) கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வேன்.

இந்த முறை அந்த இசையையும் கேட்க முடிந்தது.



தொடர்ந்து கோவிலுக்கு சென்று அதிகாலை திருப்பள்ளியெழுச்சி பார்த்து, முதல் தீபாராதனை தரிசித்து கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு நடையை கட்டினேன்.

கோவிலுக்கு செல்பவர்கள் காலணியனியாமல், வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சொல்ல வேண்டும் என்று பலர் சொல்ல கேட்டுள்ளேன். அதுவும் இந்த முறை தான் நடந்தது. செப்டம்பர் 2007 கூடல் அழகரை தரிசித்தேன், அதன் பிறகு ஏதோ தடை தாமதம் செல்ல முடியாத சூழ்நிலையானது.

இப்போது கூடல் அழகர் கோவிலில் அதிகாலை எல்லோரும் ஒரே நோக்கோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத, வரதராஜ பெருமாள் எப்போது காட்சி கொடுப்பார் என்று காத்திருந்தனர். கோவில் பசு வந்துகொண்டிருந்தது. அடடா, இன்னும் சிறிது நேரத்தில் விஸ்வரூப தரிசனம்.

கோவில் குருக்கள் அப்பசுவிற்க்கு அலங்காரம் செய்தார், துளசி மாலை அணிவித்தார். அனைவரது தவிப்பையும் போக்கும் அந்த தாமோதரன் இதோ காட்சியளிக்கின்றார். அழகர்கோவில் தோசை மிகவும் பிரபலம் அதே போல் இக்கோவிலிலும் காலை பிரசாதமாக தரப்படும் தோசை மிகவும் பிரபலம். சஹஸ்ரநாம பாராயணம் ஆராம்பமாகிவிட்டது. இக்கோவிலில் மூன்று குழுக்கள் பாராயாணம் செய்வர். தோசை வினியோகம் நடந்தது. இப்போது 12 சுற்று சுற்றலாம் என்று ஆரம்பித்தேன்.

முதல் சுற்றில் பொற்றாமரை குளக்கரையில் ஒரு காண்ணாடி சட்டம் தெரிந்தது. என்ன அது?....

தொடரும்...

Tuesday, September 23, 2008

ஆரம்பமே இப்பதான்னு நெனைப்போம்

23 வயது இளைஞருக்கு மாரடைப்பு தினமலர் செய்தி - அன்றே சொன்னேன் செல்வன் அவர்களின் பதிவில்.

இந்தியாவை தூவிட்டதா? தூக்கி வாரிவிட்டதா?

ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டதின் முடிவிலே!

Wednesday, September 17, 2008

கண்ணீரும் சாதனையும் சோதனையும்


வாழ்வின் மிகப்பெரிய வேதனை பிறர் கண்களில் கண்ணீர், உங்களால்.
வாழ்வின் மிகப்பெரிய சாதனை பிறர் கண்களில் கண்ணீர், உங்களுக்காக.
ஒரு ஃபார்வர்ட் மெயில், மொழியாக்கம் அடியேன்!