Thursday, August 18, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 6

61 – ஸெந்த அவெ ஒக3 ப3வண் ஜோள் “ஸீக்ருக நு:ருனுக் அய்ங்கே4ர் பொ3ல்ஸோட்,
வந்தி3 ஸொஸுராக் ஸமசார் களட்டி வஸிலேத் ரா:” மெனெஸி நளு. தீ3ஸ் பி2ரி
ஸந்தி3 அவத்தெ முல்லோஸ் எல்கெ3 த3டி ஜேடு3ணொ மெல்லி ஹூன் ஸொக3
ரு:ந்தெ3 காம் ஸிலேத்க3னி ஜியெஸி ரொட3ரிய த3மயந்திக் ஸமதா3ன் கெ2ரி

62 – வஞ்சனொ நீ:ஸ்தக், கப3ட் வாகும் நீ:ஸ்தக் ரி:யெதி3னு
அஞ்ஜனநயனீ, நு:ருபா4ள் அவஸ்யம். – கொஞ்ஜி
ஹேமுர் லதெ3தி4னு தூ4த் ஹித3வ்க பெவடத்தெ இன்பு3
ஸோமலோகு3ம் ஜிவத்தெ ஸோன்

63 – போ2ளுன் மீ ஜன்ரெனி, பு3ங்க3வ்க கெ3னம் பொ3ரெ
பா4ளுன் அப்3பெ3 ஸொக3 பா4க்3கி3 – கே2ழு
ஹாத் தயி கவ்லி குஸிரி ஹத்3தா3முத்3து3 க2ய்தி தொ2வெ
பா4த் அமுர்து3 ஹோய் அம்பா3க்

64 – “அமி தீ3 ஜெனு மெள்ளொ அம்கே3ர் ஜேடியென்” மெனெ பெ4ய்லுக்
ஸொமி நளுடு3 ஸங்க3ரேஸ், - ஸொஸுரான் கொ3ம்மா பா4த் பனி
ஜெமி ஆங்கு3 ஹொவ்டி3லி ஜிவத்தெகொ பெடெ மெனன்; ராணுக்
த4மி ஜாத்தேஸ் ஸெர்கொ த4மயந்தி, தா4க் ஸோட் வேள் ஜனி

65 – ஜகத் ராஜ்ஜலெ நளு ஜாரெஸ் சலிகின், ஆங்கு
ரகத் ஹுப்பத்திஸொ ராணு - பொகத்
கொம்புள ஹேம் ஸுக்குத குஸுரயு தமயந்தி ஜீஸி
அம்புலொ ஸங்கெ தானு அய்கிலி

66 – நீடொ வெக்கிலி ரொவ்வ நிம்மள்க பிஸி ரி:யாஸி,
பீடொ ஸொக மோ:ரு பில்லொ – தேடவி
களி தெக்கடெஸி கல்லொ ஹொல்லொ ஹுடி
அளி மொன்னும் ஹொடெஸி ஆஸ்தொ

67 – ஸெனி அவி கெர்ரிய ஸேள் எல்தெ, மாயொ
மெனி ஜன்னாத்தாக்கனு மயங்கி “மோர் தெல்லி
அனி தீடுவொ” மெனிஸ் ஆதிம் ஸீதொ ஸொகன்;
கெனி மர்சன் முஸய்கீ? கெரெங்கொ விதி மெல்லி

68 - தெரத்தக் ஜாய் நளுடு, தெகானா ஹோய் மோ:ரு
துரத்தக் முஸுனாத்தாம் துரயு, - தொரத்தக்
வெக்கடய், லெகுத்தொ அவி வேன் துதூர் ஜீ வெடிக்
தெக்கடய் தமடய் ஸினடி

69 – தொர்ஸவ்லொ ஸொவ்டி தூகின் மீ பில்லிகின்
மொர் வேடும் தெரென் மோ:ரு – பொர்வேகும்
தமி ஆவ் வனராணி தமயந்தி, தொர் ஆஸ்தொ
நிமிஷும் திர்சி தொவு நிஜம்

70 - தெராஸி மோ:ருக் வேடுமு தீ ஜெனு செரி, தாமுக்
பிராஸி, ஹாதும் கள்ளி ப்ரேவ்க களாஸி, கெக்கலி
கெராஸி, கெடி ஸந்தர்பும் கிக்கீ கெல்லேத் மோ:ரு
வராஸும் ஹுடெஸி நளுகெ வஸ்தர் பாஞ்யிம் துக்கிலி

71 – தெகெ ஸியாஸ் பெதிரி, தெனொ ஜிலேத் மெனெஸ்
மொகொ ஜெகிஞ்சன் முஸய்கீ? தொகொ
ஒடடி எல்லெ ராணுக் உட்சிலி அவெ ஸெனி மீ,
புடடி துகாளு ஹீரும் புவ்டு

72 – “அதர்ம வாடும் இஸனி அம்கொ மரத்தெ தொகொ
ஸுதர்மு மெனெத் ஸொந்தோஸ் – குதர்மு
தேவ் கெர்னா, ஜுக்கு திடவ் தெனோஸ் தேய்
பாவ் அஸ்கி ஹிட்டெ பராத்.”:

73 – தொவ்லாம் பனி ஸொடி ம:ழிக் தொவெய ஸொகனு ஒண்டேஸ்
ஸவ்லாம் தீ ஜெனு! ஜாலும் ஸம்டிலியெ பக்ஷின் ஸொகன் – விதி
வெவ்லாம் நள தமயந்தி வேனுகு புடராஸ்
தவ்ராம் ஸேத்தெகொ நொமி தாக்க நிளாஸ் தேட் தொகன்

74 – தல்ல – பெய்ல் ரொடரியொ ஸான் ஸெக்கானா ஸுரித்
ஹொல்ல திஸாம் ஹுங்கத்தக் – கல்லொ
பொடெவேங்கும் ராணும் பூராக் கள ஹந்தார்
ஹொடெவேங்கும் வேன் ஹொடெஸ்

75 - புட்டெ மொண்டபும் கால் பொடி நிஞ்ஜாஸ், ஓ!
துட்டெ ஸொக ஜீவ் துள்ளெஸ்.-மிட்டெ
மகரவீணா பர்திக் மத்திம் கிடான் கவெஸி
சகரமிங்கி பிஸுளொ சவெஸ்

76 – அவெ கிரால் ஹட்வி ஹட்வி அத்திக விசார் பொடராஸ்
துவெ ஸொகன் ஆங்கஸ்கொ தொளொ பனிம் புடராஸ் –கிடான்
சவெஹால் மடிஸெந்தும் சார் தாம் ஸுஜ்ஜியொ. ஹுளொ
புவெ ஸொகன் ஜெளெஸ், தெனு புள்ள போளும் ரொடராஸ்

77 – தில்ல ஸெனி ஸொடய்கீ தின்னு முஸலெந்தும்?
தில்ல ஹட்வன் நளுக் தியெஸ். – பில்லி
ஹொதெ ஸவ்லொ படேத் ஹுடி ஜேடுவாய் மெனி
லொதெ மொன்னும் அவெஸ் லோப்

78 – ஸெத்து நீஸ்தக் பெய்ல் ஸெந்த நிஞ்ஜிர:தோஸ்
ஹத்தும் ஸவ்லொ படேஸ் ஹள்ளு. – யுத்தம்
ஒடெ ஸொகன் தொஸ்கொ ஒங்கிலி குங்கிலி ஒண்டெ
பெடெ ஸொகன் தமெஸ் பிர்ஸொ

கலி தெரெ ஸர்கு முஸேஸ்

உடன் வந்த ஒரு அந்தணனிடம் “குழந்தைகளை பாட்டனார் வீட்டில் விட்டு
என் வணக்கங்களை தெரிவித்து அவ்விடமே வசிப்பாய்” என்றான் நளன் “பொழுது
கழிந்து சந்தியா வருமுன்னரே எல்லையை தாண்டி போய்விடவேண்டும் என
வெயில் போல் விரிந்த நாட்டை பார்த்துகொண்டே, தமயந்தியை சமாதனப்படுத்தினான்

62 – வஞ்சனொ நீ:ஸ்தக், கப3ட் வாகும் நீ:ஸ்தக் ரி:யெதி3னு
அஞ்ஜனநயனீ, நு:ருபா4ள் அவஸ்யம். – கொஞ்ஜி
ஹேமுர் லதெ3தி4னு தூ4த் ஹித3வ்க பெவடத்தெ இன்பு3
ஸோமலோகு3ம் ஜிவத்தெ ஸோன்
கள்ளம் கபடம் அற்ற இந்த பிஞ்சுவார்த்தைகள்
உற்றவளுக்கு நிச்சயம் தேவை – அன்புடன்
அவிதழுவி, மார்பில் முட்டி அரவணைத்து அமுதூட்டும் இன்பம்
அமருலகைல் வாழ்வதற்க்கு ஈடாகும்

63 – போ2ளுன் மீ ஜன்ரெனி, பு3ங்க3வ்க கெ3னம் பொ3ரெ
பா4ளுன் அப்3பெ3 ஸொக3 பா4க்3கி3 – கே2ழு
ஹாத் தயி கவ்லி குஸிரி ஹத்3தா3முத்3து3 க2ய்தி தொ2வெ
பா4த் அமுர்து3 ஹோய் அம்பா3க்

என் மானம் காக்கும் மகவுகளை நான் ஈன்றெடுக்கவில்லை,
அப்பேற்பட்ட பாக்கிய இன்னும் கிட்டவில்லை – கொழுந்து
கரங்களால் அடிசில்லை கலந்தும் தொட்டும் நீட்டியும், உண்டு மீந்த
உணவு அமுதமாகுமே அன்னைக்கு

64 – “அமி தீ3 ஜெனு மெள்ளொ அம்கே3ர் ஜேடியென்” மெனெ பெ4ய்லுக்
ஸொமி நளுடு3 ஸங்க3ரேஸ், - ஸொஸுரான் கொ3ம்மா பா4த் பனி
ஜெமி ஆங்கு3 ஹொவ்டி3லி ஜிவத்தெகொ பெடெ மெனன்; ராணுக்
த4மி ஜாத்தேஸ் ஸெர்கொ த4மயந்தி, தா4க் ஸோட் வேள் ஜனி

நாமிருவரும் எங்கள் வீட்டிற்க்கே செல்லலாம்” என்ற பாரியை
எறிட்ட நளன் சொல்கிறான் “மாமனார் வீட்டு அன்னமும் நீரும்
பெற்று உடல் வளர்ப்பவனை கோழை என்பர்! காட்டிற்க்கு
செல்வதே முறை தமயந்தி “பயம் வேண்டாம் காலமறிந்து”

65 – ஜகத் ராஜ்ஜலெ நளு ஜாரெஸ் சலிகின், ஆங்கு
ரகத் ஹுப்பத்திஸொ ராணு - பொகத்
கொம்புள ஹேம் ஸுக்குத குஸுரயு தமயந்தி ஜீஸி
அம்புலொ ஸங்கெ தானு அய்கிலி

உலகாண்ட நளன் நடக்கலானான், உண்
குதிரம் கொதிக்க வைக்கும் காடு – இளம்
கொங்கைகள் வற்றிம் சுருக்கமேறி தமயந்தி சென்றாள்
அகத்துகாரன் சொன்ன வழியை செவிமடித்து

66 – நீடொ வெக்கிலி ரொவ்வ நிம்மள்க பிஸி ரி:யாஸி,
பீடொ ஸொக மோ:ரு பில்லொ – தேடவி
களி தெக்கடெஸி கல்லொ ஹொல்லொ ஹுடி
அளி மொன்னும் ஹொடெஸி ஆஸ்தொ

நிழல் தேடி தன்ன அசுவாசப்படுத்திக்கொண்டாள்
அழகான மயில் குஞ்சுஒன்று – அங்கே வந்து
ஆடி காட்டியது, மேலும் கீழூமாக
அனங்கின் மனதில் வளர்ந்தது அவா!

67 – ஸெனி அவி கெர்ரிய ஸேள் எல்தெ, மாயொ
மெனி ஜன்னாத்தாக்கனு மயங்கி “மோர் தெல்லி
அனி தீடுவொ” மெனிஸ் ஆதிம் ஸீதொ ஸொகன்;
கெனி மர்சன் முஸய்கீ? கெரெங்கொ விதி மெல்லி

சனி விடாமல் துரத்தும் வினை இது, மாயை
என அறியாமல் அதில் விழுந்தவள், “மயில் வேண்டும்
என கேட்டாள்” ஆதியில் சீதையை போல்
விதி செய்த மாயை மாற்றம் பெறுமோ?

68 - தெரத்தக் ஜாய் நளுடு, தெகானா ஹோய் மோ:ரு
துரத்தக் முஸுனாத்தாம் துரயு, - தொரத்தக்
வெக்கடய், லெகுத்தொ அவி வேன் துதூர் ஜீ வெடிக்
தெக்கடய் தமடய் ஸினடி

கவர்ந்து வர செல்வான் நளன், காணாமல் போகும் மயில்
புகமுடியாத இடத்தில் புகுந்துவிடும் – ஓடி செல்லும்
தேடச்செய்யும், அருகில் வரவழைத்து தூர ஓடும் வேடிக்கை
காட்டும், ஓடவைத்து களைப்படையச் செல்லும்

69 – தொர்ஸவ்லொ ஸொவ்டி தூகின் மீ பில்லிகின்
மொர் வேடும் தெரென் மோ:ரு – பொர்வேகும்
தமி ஆவ் வனராணி தமயந்தி, தொர் ஆஸ்தொ
நிமிஷும் திர்சி தொவு நிஜம்

உன்சேலையை தந்தால், நாமிருவரும் அணிந்து
என் உடுக்கையினாள் மயிலை பிடித்துவிடலாம்
விரைந்து வருவாய் காட்டரசி, உன் விருப்பு
சில விநாடியில் நிறைவேற்றுவேன்

70 - தெராஸி மோ:ருக் வேடுமு தீ ஜெனு செரி, தாமுக்
பிராஸி, ஹாதும் கள்ளி ப்ரேவ்க களாஸி, கெக்கலி
கெராஸி, கெடி ஸந்தர்பும் கிக்கீ கெல்லேத் மோ:ரு
வராஸும் ஹுடெஸி நளுகெ வஸ்தர் பாஞ்யிம் துக்கிலி

இருவரும் சேர்ந்து உடுக்கையில் மயிலை பிடித்தனர்,
தாமிருந்த இடத்திற்க்கு திரும்பினர் மயிலோடு விளையாடினர்
சமயம் பார்த்து, கிடைத்த இடைவெளியில் “கிக்கீ” எனவொலித்தபடி
காற்றில் பறந்தது நளனின் உடுக்கையை பிடித்தபடி

71 – தெகெ ஸியாஸ் பெதிரி, தெனொ ஜிலேத் மெனெஸ்
மொகொ ஜெகிஞ்சன் முஸய்கீ? தொகொ
ஒடடி எல்லெ ராணுக் உட்சிலி அவெ ஸெனி மீ,
புடடி துகாளு ஹீரும் புவ்டு

அதிர்ந்த இருவரும் காண, மயில் சொன்னது சென்றபடி
“என்னை வெல்ல முடியுமோ? – உன்னை
தோற்க்க செய்து இக்காட்டிற்கு இட்டு வந்த சனி நான்
துன்பகிணற்றில் மூழ்கடித்து முடிப்பேன்

72 – “அதர்ம வாடும் இஸனி அம்கொ மரத்தெ தொகொ
ஸுதர்மு மெனெத் ஸொந்தோஸ் – குதர்மு
தேவ் கெர்னா, ஜுக்கு திடவ் தெனோஸ் தேய்
பாவ் அஸ்கி ஹிட்டெ பராத்.”:

தீயவழியில் இவ்வாறு எம்மை தோற்கடிப்பது உனக்கு
நல்வழி யெனில் மகிழ்ச்சி – சூழ்ச்சி
கடவுள் செய்யவதில்லை, அதிக திடமளிப்பவன்
எல்லா பாவங்களையும் போக்குபவன்

73 – தொவ்லாம் பனி ஸொடி ம:ழிக் தொவெய ஸொகனு ஒண்டேஸ்
ஸவ்லாம் தீ ஜெனு! ஜாலும் ஸம்டிலியெ பக்ஷின் ஸொகன் – விதி
வெவ்லாம் நள தமயந்தி வேனுகு புடராஸ்
தவ்ராம் ஸேத்தெகொ நொமி தாக்க நிளாஸ் தேட் தொகன்

குடுவையில் நீர்விட்டு அலங்கார மீனை வைத்த்து போல் ஒரே
சேலையில் இருவர்! வலையில் அகபட்ட பறவைபோல் – விதி
வெள்ளத்தில் நளதமயந்தி அதிகமாகவே நணைகிறேன்
கோவிலில் இருப்பவரை நம்பி தன் வழியில் சென்றனர்

74 – தல்ல – பெய்ல் ரொடரியொ ஸான் ஸெக்கானா ஸுரித்
ஹொல்ல திஸாம் ஹுங்கத்தக் – கல்லொ
பொடெவேங்கும் ராணும் பூராக் கள ஹந்தார்
ஹொடெவேங்கும் வேன் ஹொடெஸ்

தம்பதியர் இருவரின் அழுகையை காணமுடியாத கதிரவன்
மறுதிசையில் உறங்க செல்ல – கதிரவன்
விழுந்தவுடன் வனம் முழுவதும் காரிருள்
பெருகியது அவனடைந்த துன்பம் போல்

75 - புட்டெ மொண்டபும் கால் பொடி நிஞ்ஜாஸ், ஓ!
துட்டெ ஸொக ஜீவ் துள்ளெஸ்.-மிட்டெ
மகரவீணா பர்திக் மத்திம் கிடான் கவெஸி
சகரமிங்கி பிஸுளொ சவெஸ்

பாழடைந்த மண்டபத்தில் தரையில் படுத்தனர், ஓ!
உடைந்த உயிராக உருண்டது – மீட்டிய
மகரயாழிசை இடையில் புழுக்கள் பாடின
பூச்சிகளும் கொசுக்களும் கடித்தன

76 – அவெ கிரால் ஹட்வி ஹட்வி அத்திக விசார் பொடராஸ்
துவெ ஸொகன் ஆங்கஸ்கொ தொளொ பனிம் புடராஸ் –கிடான்
சவெஹால் மடிஸெந்தும் சார் தாம் ஸுஜ்ஜியொ. ஹுளொ
புவெ ஸொகன் ஜெளெஸ், தெனு புள்ள போளும் ரொடராஸ்

வந்த விதி எண்ணி எண்ணி அதிகமாகவே விசனப்பட்டன
கண்ணீரினால் தன் உடலை கழுவினன் மூழ்கினான் – புழுக்கள்
கடித்த இடுக்கில் நான்கு இடங்களில் தடித்தது – நெருப்பு பட்டதை
போல் எரிந்தது, தங்களுக்கு ஏற்பட்ட நிலையால் அழுதனர்

77 – தில்ல ஸெனி ஸொடய்கீ தின்னு முஸலெந்தும்?
தில்ல ஹட்வன் நளுக் தியெஸ். – பில்லி
ஹொதெ ஸவ்லொ படேத் ஹுடி ஜேடுவாய் மெனி
லொதெ மொன்னும் அவெஸ் லோப்

விரைய சனி விடுமோ நாள் முடியும் வரை
விரையஎண்ணம் தந்தது நளன் மனதில் – உடுத்தி
உள்ள சேலையை அறுந்தால் எழுதோடலாம் என
லோபியில் மனதில் வந்தது ஆசை

78 – ஸெத்து நீஸ்தக் பெய்ல் ஸெந்த நிஞ்ஜிர:தோஸ்
ஹத்தும் ஸவ்லொ படேஸ் ஹள்ளு. – யுத்தம்
ஒடெ ஸொகன் தொஸ்கொ ஒங்கிலி குங்கிலி ஒண்டெ
பெடெ ஸொகன் தமெஸ் பிர்ஸொ

சத்தியத்தை கைவிட்டு கைபற்றியவள் நித்திரையின் போது
உடுக்கையின் பாதியை அறுந்தான் மெதுவாக – போரில்
தோற்றவனை போல் தலைகவிழ்ந்து தவழ்ந்து ஒரு
கோழையை போல் ஓடினான் வேகமாக
கலி தெரெ ஸர்கு முஸேஸ்
கலி பிடித்த படலம் முடிந்தது

No comments: