Wednesday, March 23, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 2




நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 2

11 – துமீஸ் திகொ தினொ து3ங்கோ3ஸ்; மீ ஹுடி
த3மீஸ் ஜீகின் த3மயந்திக் – நமிஸ்
ஸங்கி3 து3ம்ரெ ப்ரேவு சமசார் களடூஸ் மெனி
துங்கி3 நிக்ளிஸ் ஹம்ஸு துரித்

12 – அத்தொ ஜீ செல்லிரா:ய்கீ அஸ்கி விஷயுன் ஸங்கி3தி
அவ்டரா:ய்கி மெனி மொன்னு ஆங்கு3 ஆஸெம் துங்கெ3தி
காய்கெரத்தக் முஸய் கமுடு பாணொ குஸ்கயெ
கு3ள்ளெ வேதனாம் நளுடு குர்த்து களானா ஸிங்கெ3தி

13 – நாவ் ஸங்கி3 பொவ்லேத் நசிலேத் அவெ ஹம்ஸுகு3
ஆவ் மெனிஸ் த3மயந்தி அலக்3கொ3 – “ஓவ்
மாய்-பெய்ன் ஸோன் அமி, மருமுன் நொக்கொவா
காய் விஷயு? க்ஷணும் களாட்”

14 – த3மயந்தி தி3யெய த3னிம்பொழ்ழொ க2ய்லேத்
ஸமர்துக ஹம்ஸு ஸங்கி3ஸி – “ரமணீ!
நித்தெ தொர் கொறம்முநிஷத3 தே3ஷுரஜொ
ஹத்தெ லக3ள்ளி ஸே ஹட்விலி”

15 – ஸொம்பு லஜ்ஜொ இத்யாதி3 ஸுந்து3ரும் த3மயந்தி பு4டிஸ்
அம்பொ4 ஜோள் ஸங்கு3னாத்தக் ஆங்கு3 ஹுஜாள் பொடிஸ்
லம்பொ4 உஸாலுன் ஸொடி3ஸ், லகு3னிம் சிவ்கிஸ், ஸஹேலின்
ஸம்ராட் ஜோள் ஸங்க்யாஸ் ஸமாசார், சிந்தனொ ஸொடி3ஸ்

16 – பீ3மஸேன மஹரஜொ பெ3டி ஸ்யம்வர ஸந்தே3ஷ்
ஸீமுனும் பூராக் ஸெங்க3டெஸ் – க்ஷேமுக
நிஷத3 தே3ஷுக் ஹம்ஸுக் நிளடிஸ் த3மயந்தி, யோக்
பஷுது லிகிதம் தீ பாஞ்யிம்

17 – ஸந்தேஷ் அவத்திக்காம் ஸாரதிக் பொவி நளுடு
ஸந்தோஷ் பொரிகின் ஸங்கேஸ் – “ஹிந்தோ3ஸ்
தயார் கேர் ரெத்து, தமஸ் நொக்கொ, ஸெந்த
வியார் கொ4டா3ன்கி3ன் வீருன்”

ஹம்ஸ தூது ஸர்கு முஸேஸ்



1. ஹம்ஸ தூது ஸர்கு - அன்னம் விடு தூது படலம்

1 – வேத3வ்யாஸ மஹரிஷி விஸ்தார்க யுதிஷ்டிருக்
ஆதி3ம் ஸங்கெ3ய கெ2தொ3 அய்குவொ- கீ3தும்
வாணிதி3யெ ஸிங்கா3ர் வத்தான் கப3டய் த3ண்ட
பாணிகு த3தொ3 அவி பல்சொ

கடவுள் வாழ்த்தாக அமையப்பெற்ற் இவ்வெண்பா!
பகவான் வேதவியாசர் மஹாபரதக்கதை சொல்லிகொண்டிருக்கும் போது இடையே கிளைகதையாக இதை பாண்டவர்களில் மூத்தவரான தருமராஜனுக்கு சமாதானம் சொல்லும் விதமாகவும், உனக்கும் கீழே வாழ்பவர் கோடி என்பதை உணர்த்தும் விதமாகவும் சொல்ல பட்ட நளனின் கதை சொல்ல வாணியான கலைமகள் இந்சொற்கள் தந்து காப்பாள் எனவும், தண்டபாணியின் அண்ணனான விநாயகர் காத்தருள்வான் என்று கடவுளை நாமும் வழிபடுவோம்.

2 – நளத3மயந்தி பொடெ3 நரஜெலுமு கெஷ்டமுன்
ஒளதிளொயா? கயி நீ: உராவ்! – களஸெனி
கல்லொ ஜவட3ய், பிர் காலு செக்குர் பிவ்ரி
ஹொல்லொ அவட3ய் ஹுப்பி


நளனும் தமயந்தியும் அடைந்த துன்பம் - கொஞ்சமா நஞ்சமா? எல்லாவற்றையுமல்லவா அந்த மந்தன் செய்து காட்டினான். சக்கரமாய் சுழற்றி கிழே இறக்கி பின் மீண்டும் மேலே உயர்த்தும் சனீஸ்வரன் மகிமையையும், எவ்வாறு நிகழ்ந்தது என்று சொல்ல தொடர்ந்து படியுங்கள்!

3 – பூ3க்நீ: துர்ப3ள் நீ:, கயி பொ3ண்ணம் விர்தாக் கெர்னார் நீ:
சூக் ஸங்கி3 ஜெடொ கவ்லி ஸொன்னார் நீ:, நீஷத3 தே3ஷும்
தா4க் நீ:. விரோதி3ன் நீ:, த3ர்மு, ஜாது3 மெனத்தெ பே3து3
ரோக் நீ: தம்பதி3னு ம:த்3தி3ம் ரூஸ் நீ: துகா2ள் கய் நீ:னா


நிடத நாட்டில் - பசியில்லை, ஏழ்மையில்லை, எப்பொருளையும் வீணாக்குவோர் இல்லை, புறம் பேச்சு பேசி பொழுதை கழிப்பாரில்லை, பயமில்லை, எதிரிகள் இல்லை, ஜாதி - வர்ணம் என்ற பேதம் சொல்லி பார்பவருமில்லை, நோயில்லை, தம்பதியர் நடுவில் வீன் குழப்பமில்லை, சோகம் என்பதே துளி கூட இல்லை


4 – நெத்3தி3, தொங்க3ர் அங்கு3ன் நிஷத3 தே3ஷு ஜெனுலுக்
புத்தி தே3வு க்ருபொ போ3ர்ஸே – அத்3தி3கு
மாவிந்த3புரிம் ஸவ்ர மஹான்னு ஜொவள் ஞான்
ராலெந்தும் பொந்தெ3 நள ரஜொ

ஆறு, மலை என அனைத்திணைக்கும், நிடத நாட்டிற்க்கும் திருவருள் நிறைந்துள்ளது! எல்லாம் மாவிந்த புரியான நிடதநாட்டில் வாழும் எல்லா மஹான் களிடத்தும் பெற்ற அறிவுரையினால் நள மன்னனுக்கு இது சாத்தியமாயிற்று,

5 – வஸந்தகாலும் யோக்தி வனுக் உலாஸுக் ஜியெஸி
ஸுகந்து பொ3ரெ த்யெ தோபும் – பஸந்துஹொயெ
பள்ளான் காத்தக் ஹம்ஸபக்ஷி ஒண்டெ அவெஸி, எனொ
பு2ள்ளாம் நீ:ஸ்த அதெஸ்ம் பொடெஸ்

ஒரு வசந்த கால நாளில், வன அழகை ரசித்தபடி தோட்டத்தை வலம் வந்து கொண்டிருந்தான் நளன். நிறைந்துள்ள பழங்களை அள்ளி உண்ண அன்ன பறவைகளின் படை அங்கே அணிவகுத்து நின்றிருந்தது! இதுவரை இல்லாத ஒன்றாய் இவருக்கு வியப்பாய் இருந்தது

6 – நமஸ்கார் மெனெஸ் ஹம்ஸு நளுடுக் ஸீதி த4க்கிலேத்
து3தூ3ர் ஹொதாஸ் ஸொவ்கல்னு தொ3ளான் பிர்ஸொ மிஸ்கிலேத்
தூ3து3 ஸெந்தூரும் ஆங்கு3 து3வெயெ ஸொக3ன் ஸிங்கா3ரு
ரெக்கென் விஸர்கலி ஹம்ஸு ரி:யெஸி சொரான் வெக்கிலேத்

இரை தேடியபடியே இங்கும் அங்குன் வந்த அன்னபறவைகள் பார்க்க பாற்கடலில் நிராடி வந்தவை போல், வெண்மையாக நடந்து, நளனை வணங்கி நின்றது. பொதுவாக அன்னநடை என்பர், அழகாக தன் சிறகுகளை விறித்து நடைபயிலும் அன்னம் என்றால் கேட்கவா வேண்டும். அது தேட வேண்டிய வேலையே இல்லை மன்னனின் கவனத்தை தன்பால் ஈர்க்க செய்த மாயச்செயல். என்பது கவிஞரின் கவித்திறன்.

7 – ஹம்ஸு ஸேத்தாம் லெக்தொ ஹள்ளு ஜீகின் நளுடு
கம்சி புஸெஸ் திகா காம்தா4ம் – வம்ஸும்
ஸர்வஸ்ரேஷ்ட விதர்ப ஸம்ராடு பெடி3 த3மயந்திக்
தெ3ர்ஸுஸகி மெனிஸ் தினொ

அன்னத்தின் அருகில் வந்த மன்னன், அதனிடம் விசாரிக்க ஆரம்பித்தான், விதர்ப மன்னனின் மகள் தமயந்தியின் தோழி நான் என்றது.

8 – த3மயந்தி மெனத்திக்காம் த3ரணி ஜெகிஞ்செ நளுடு
ஸமரந்தி தின்னாளு ஸாகு3ம் – த3மயந்திக்
ஸாத்தக் ஜியெய கெ2னி ஸங்கி3லேத் பக்ஷிக் தி3யெஸ்
கா2த்தக் பொழ்ழம்பொ கடி

தரணி வென்ற மன்னன் தமயந்தி என்ற பெயரை கேட்டதும் மெய்சிலிர்த்து முன்னொரு நாளில் அவளை திருவிழா சமயத்தில் தான் அவளை கண்ட விஷயத்தை சம்பவத்தை எல்லாம் அன்னத்திடம் சொல்லி கொண்டே ஒரு மாம்பழத்தை அளித்தான் நளன்.

9 – ஹோடுன் பொன்னீஸு பொழ்ழொ ஹுடரிய ஒண்டுன் தொளான்
கேடுர் பொல்லமு, ஈதொ3 கெரிகின் க2ளத்தெ தளான்
ஜாடுரு ஸவ்னல் கோனக் ஜவ்ணிகு3 ஹேமுர் அவெஸ்கி
பாடுர் பங்கி3ரெ ஜொடொ பஷுது சபொகீ களான்

அவள் இதழ்கள் எண்ணி வைத்த பலா சுளை, பறக்கும் வண்டுகள் அவளது கண்கள், இடையில் வரும் மடிப்பு, மரத்து புடைப்புக்கள் இவளுக்கு எவ்வாறு கிடைத்ததோ, கழுத்திலிருந்து தொங்கும் இவள் பின்னல் ஒரு பட்டு சரமோ என எண்ண வைக்கிறதாம்.

10 – ஹத்3தெ3 பொடுங்க3ன், து3ம்ரெ ஹட்வன் க2ளெய்யொ மொகொ3
பெ3த்3தெ3 பெ3ட்கி நா: பிஸி நா: நித்தெ
தினொ மெள்ளி ஹோங்கு3 தெள்செத் புரெ, துர்ஜோள்
ஜெனொ மெனய் ஜீவ் ஸொடி

இவ்வாறாக சொன்ன அன்னம், மேலும் அவளின் நிலையை குறித்து சொல்ல ஆரம்பித்தது, பதறி எழுகிறாள், உங்கள் நினைவாய் இருக்கிறாள், புத்தி பேதலித்த பேதையல்ல, நித்தம் அவள் துயில் எழும் சமயம், தங்களிடம் செல்ல வேண்டுமென (அடம் பிடிப்பாள்)உயிர்விடுவாள்!

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 2

11 – துமீஸ் திகொ தினொ து3ங்கோ3ஸ்; மீ ஹுடி
த3மீஸ் ஜீகின் த3மயந்திக் – நமிஸ்
ஸங்கி3 து3ம்ரெ ப்ரேவு சமசார் களடூஸ் மெனி
துங்கி3 நிக்ளிஸ் ஹம்ஸு துரித்

தங்களுக்கென அவளும், அவளுக்கென தாமும் என; நான் சென்று அவளிடம் சொல்கிறேன் என வணங்கி பறந்தது அன்னப்பறவை.

12 – அத்தொ ஜீ செல்லிரா:ய்கீ அஸ்கி விஷயுன் ஸங்கி3தி
அவ்டரா:ய்கி மெனி மொன்னு ஆங்கு3 ஆஸெம் துங்கெ3தி
காய்கெரத்தக் முஸய் கமுடு பாணொ குஸ்கயெ
கு3ள்ளெ வேதனாம் நளுடு குர்த்து களானா ஸிங்கெ3தி

இப்போது தான் சென்றிருக்குமோ! சேதி சொல்லி திரும்பிவந்திருக்குமோ என மனம் மகிழ்ச்சி பெருக்கில் ஓடிக்கொண்டிருந்தாள் தமயந்தி.

13 – நாவ் ஸங்கி3 பொவ்லேத் நசிலேத் அவெ ஹம்ஸுகு3
ஆவ் மெனிஸ் த3மயந்தி அலக்3கொ3 – “ஓவ்
மாய்-பெய்ன் ஸோன் அமி, மருமுன் நொக்கொவா
காய் விஷயு? க்ஷணும் களாட்”

தமயந்தி என்று பெயர்சொல்லி அழைத்துக்கொண்டே, நடனமாடியபடி வந்த அன்னத்தை வாரி அணைக்காத குறையாக முகமலர்ந்து வரவேற்றாள் தனியாக "சகோதரிகளாய் இருக்கிறோம், எந்த கேலியும் இல்லாமல் சொல்லுவாய், என்ன சேதி, இக்கணத்திலே தெரிவிப்பாய் என்றாள் கெஞ்சலாக!

14 – த3மயந்தி தி3யெய த3னிம்பொழ்ழொ க2ய்லேத்
ஸமர்துக ஹம்ஸு ஸங்கி3ஸி – “ரமணீ!
நித்தெ தொர் கொறம்முநிஷத3 தே3ஷுரஜொ
ஹத்தெ லக3ள்ளி ஸே ஹட்விலி”

தமயந்தி தந்த மாதுளை பழ முத்துக்களை நல்ல பிள்ளையாக சொல்ல ஆரம்பித்தது. "ரமணீ! நிடத மன்னன் உன் நினைவால் இருந்து வருகிறார் என்றபடி ஆடியது அன்னம்.

15 – ஸொம்பு லஜ்ஜொ இத்யாதி3 ஸுந்து3ரும் த3மயந்தி பு4டிஸ்
அம்பொ4 ஜோள் ஸங்கு3னாத்தக் ஆங்கு3 ஹுஜாள் பொடிஸ்
லம்பொ4 உஸாலுன் ஸொடி3ஸ், லகு3னிம் சிவ்கிஸ், ஸஹேலின்
ஸம்ராட் ஜோள் ஸங்க்யாஸ் ஸமாசார், சிந்தனொ ஸொடி3ஸ்

திருப்தி, வெட்கம் என்ற கடலில் தமயந்தி மூழ்கி எழுந்து மகிழ்ந்தாள், இதை தன் அன்னையிடம் சொல்லாமல் வெளிரினாள், நீண்ட பெருமூச்சு விட்டு, உடல் வருத்தினாள், அவள் செல்ல தோழிகள் அவளது தந்தையிடம் இதை தெரிவிக்க இவள் சிந்தை விட்டாள்.

16 – பீ3மஸேன மஹரஜொ பெ3டி ஸ்யம்வர ஸந்தே3ஷ்
ஸீமுனும் பூராக் ஸெங்க3டெஸ் – க்ஷேமுக
நிஷத3 தே3ஷுக் ஹம்ஸுக் நிளடிஸ் த3மயந்தி, யோக்
பஷுது லிகிதம் தீ பாஞ்யிம்

வீம சேன மன்னன் தன் மகள் சுயம்வரத்தின் ஓலையை, கடல் கடந்து எல்லா நாட்டிற்க்கும் அனுப்பினான், தன் காதலனுக்கும் அன்னத்தின் வாயிலாக அனுப்பினாள் தமயந்தி.

17 – ஸந்தேஷ் அவத்திக்காம் ஸாரதிக் பொவி நளுடு
ஸந்தோஷ் பொரிகின் ஸங்கேஸ் – “ஹிந்தோ3ஸ்
தயார் கேர் ரெத்து, தமஸ் நொக்கொ, ஸெந்த
வியார் கொ4டா3ன்கி3ன் வீருன்”

சேதி வந்தவுடன் தன் சாரதியை அழைத்து தன் ரதத்தை தயார் செய்ய சொல்ல, தாமதம் வேண்டாம் இன்றே பதினோறு குதிரை வீரர்களுடன் செல்ல பிரயத்தனமானான் நிடத மன்னன் நளன்.

ஹம்ஸ தூது ஸர்கு முஸேஸ் - அன்னம் விடு தூது சுபம்.



No comments: