Sunday, March 27, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 4

3. ஸாந்தி முஹூர்த ஸர்கு3

38 – மொ:ட்டான் நிச்சயு கெரெ முஹூர்தும் ஸாந்தி
கொ:ட்டாம் துராஸ் குஷாலும் – தெட்டாம்
பொ4ண்ணமுன் பொழ்ழான் போ3ர் ரி:யெதினு ஆங்கு3
பொ4ண்ணமுன் ஸீலியாஸ் போ3ர்

39 – நிளா ஸவ்லொ கேடு3ர் நிள்சத்தக் ஒட்3டி3யாணம்
கெ3ளாம் நவரத்ன கெ2ஜ்ஜல் – தொ3ளாம்
லாஸ் மிஞ்செ ஆஸ்தாம் லாவண்யு களெ த3மயந்திக்
தா3ஸ் ஹொய்யெஸ் நளரஜொ த3ன்யு

40 – ஹாது3 மிவ்ளி மொயுலு பூ2லு ஹாரம் கெரிகி3னு பதி3 தே3வு
பாத3முக் க3லிஸி த3மயந்தி பட பட கெரி ஆங்கு3 போ3ர்
நாத3ம் பொ3ரி நொவ்வக3னு நளுடு3க் குலுகுலயெஸ் தெவள்
ஹேது3க ஸிரஸ் நி:ளடி3 ஹுட்3டி3 ஹெதொ3 திர்னாத்தக் ஸியெஸ்

41 – ஸொம்முன் ஹெடி தொவ்தி ஸுந்தரிக் அண்செத் ஹேமு
கொம்முன் மெத்தன்க குஸ்காஸ் – உம்முன்
தொரரேஸ் ஹோடு3ஹோரு, தோணு பொழ்ழொ ரெஸ்ஸு
உரரேஸ் பொடரெனி உன்னொ

42 – பஷுது3 கேஸு மேகு3ம் பரிபூரண செ3ந்தாம் அவி
நிஷத3 ரஜொ ஆங்கு3 நி:ளடிஸ் – இஸதொ3
தெ3ரி ஸியெத் வீணொ! தே3ஹ ஸுக3ம்மு திஸதொ3
பி2ரி ஸியெத் ரெத்து பிள்டி2

43 – காய் கெர்னொ மெனி களயெதினு கா2ய் கெரராத்தெ, களாரனி!
பாஞ்ய் பூ4ஞ்யிர் நிள்சரெனி, ப2ராது3 ஹட்வனுஸ் தெ3க்கானி
ஸாய் ஸொகன் நா:ன் பஷுது ஸவ்லொ வெக்ள ஹொயெஸி, நளுடு3
ஹாய் எல்லேஸ் பஜெ மெல்லேத் ஹள்ளு தெரி க2ளத்தக் நிளெஸ்

44 – ஆங்கு3ன் செரி க2ள்தொ ஆஸ்தொ தெரி பிள்தொ
ஹோங்கு3ம் தீ3ஸ்-ராத் ஹோட்தொ – போ3ங்கும்
அட்டி நீ:த்தக் தீ3 தெனு ஆட் தின்னு பொந்த்யாஸ்
ஸுட்டுனாத்தக் தா3ம்பத்யு ஸொம்பு

45 – அஸ்வகந்தாதி3 லெ:யம், அம்பு3ளா லெ:யம், அபுரஞ்சி
பஸ்பம், தூ3ப், தூ3த், பாத் – தி3ஸ்வந்தி
ஜொமன் முஸள்ளி அஸ்கின் ஜொவள் புஸிலி நிளாஸ்
நமன் கெர்லி த3மயந்தி நளு

46 – ரெத்தும் ஹிங்க்யாஸ் தீ3 தெனு ரேவதி அஸ்வபதி கொ3டா3ன்
சித்தும் ஹட்வனுன் ஸொக3ன் செரிகி3ன் தமாஸி; பாடாம்
ஹத்3து3ம் தெ3க்கயெ காக்ஷினும் ஹஸாஸ், ஹவ்ளார் தமரிய
நெத்3தி3ம் ஹுதிராஸ், க2ளாஸ் நீடா3ம் ஸல்லாப3க நிஞ்ஜ்யாஸ்

47 – ஸிங்கா3ரிபுரி ஸொக3ன் ஸே மாவிந்த3ம், ஜெனுலுக்
ஹங்கா3ர் மெனெத்தெ ஹடுனாத்தெ – லெங்கால்!
வித3ர்ப ராஜகுமாரிக் விஷேஸ் ஸ்வாக௩த் கெராஸ்
ஸுக3ர்ப ஆஸீர்வாத் ஸோவு

48 – பா3ர் ஒர்ஸு ஸுக3முன் ப2ரிதுக அனுப3விஞ்சி
சார்காலும் ஜிவ்னம் சல்வ்யாஸ் – தோ3ர்
தொ3ரத்தக் வா ஹொயெஸ், சூருமூஸ் த3மயந்தி
ஜிக3த்தக் தீ3 நுஹுன்னு ஜெனிஸ்

49 – வீள் ஹொயி பாஞ்ய் து3வத்தக் விஸுரயி ஸந்தி3யா கெரெ நளுடு3
போ2ள் பஸ்கட் பி2ல்லிடி3யோ. பு2ள்ளா போட்ஜாள் திரள்ளத்தக்
வேள் அப்3ப3ரெனினா மெனி வெகு3ஞ்சிலி ஹொதெ3 களஸெனி
தீள்திக்க தா2ம்மு துல்லியெஸ் தெக3 கா ஹர்ம்ப3ம் கெ2ல்லியெஸ்

ஸாந்தி முஹூர்த ஸர்கு3 முஸேஸ்

3. ஸாந்தி முஹூர்த ஸர்கு3 - சாந்தி முஹர்த்த படலம்

38 – மொ:ட்டான் நிச்சயு கெரெ முஹூர்தும் ஸாந்தி
கொ:ட்டாம் துராஸ் குஷாலும் – தெட்டாம்
பொ4ண்ணமுன் பொழ்ழான் போ3ர் ரி:யெதினு ஆங்கு3
பொ4ண்ணமுன் ஸீலியாஸ் போ3ர்

பெரியோர் நிர்னயித்த நன்நேரத்தில் சாந்தி
மண்டபத்தில் புகுந்தனர் மகிழ்ச்சியாய் - தட்டில்
பண்டங்கள், பழங்கள் நிறம்பி இருந்தும் உடல்
பாகங்களை கண்டு நிறம்பினர்

39 – நிளா ஸவ்லொ கேடு3ர் நிள்சத்தக் ஒட்3டி3யாணம்
கெ3ளாம் நவரத்ன கெ2ஜ்ஜல் – தொ3ளாம்
லாஸ் மிஞ்செ ஆஸ்தாம் லாவண்யு க2ளெ த3மயந்திக்
தா3ஸ் ஹொய்யெஸ் நளரஜொ த3ன்யு

நீல சேலைஇடுப்பில் நிற்க ஒட்டியாணம்
கழுத்தில் நவரத்தின மாலை - கண்களில்
வெட்கத்தை விஞ்சும் ஆசையுடன் விளையாடிய தமயந்தி
தொண்டன் ஆனான் நளராஜன்

40 – ஹாது3 மிவ்ளி மொயுலு பூ2லு ஹாரம் கெரிகி3னு பதி3 தே3வு
பாத3முக் க3லிஸி த3மயந்தி பட பட கெரி ஆங்கு3 போ3ர்
நாத3ம் பொ3ரி நொவ்வக3னு நளுடு3க் குலுகுலயெஸ் தெவள்
ஹேது3க ஸிரஸ் நி:ளடி3 ஹுட்3டி3 ஹெதொ3 திர்னாத்தக் ஸியெஸ்

கையில் கலந்திருக்கும் மெல்லிய மலர்சரம் தொடுத்து கணவனின்
பாதத்திற்க்கு சாற்றி தமயந்தியின் உடல் படபடத்து
நாதம் நிறம்பி புதியதாய் நளன் கிளுகிளுத்தான் அப்போது
தோதாக சிரமும் இவளுக்கு உதவி செய்தது

41 – ஸொம்முன் ஹெடி தொவ்தி ஸுந்தரிக் அண்செத் ஹேமு
கொம்முன் மெத்தன்க குஸ்காஸ் – உம்முன்
தொரரேஸ் ஹோடு3ஹோரு, தோணு பொழ்ழொ ரெஸ்ஸு
உரரேஸ் பொடரெனி உன்னொ

நகைகளை களைந்தான்; சுந்தரியை அணைத்தான் மார்
கொங்கைகள் இலவமாக அழுத்தியது - முத்தமிட்டனர்
இருவரின் உதட்டின் மேல், இதழ்ரசம் ஊர ஊர அருந்தினர்
அது ஊரிகொண்டே சென்றது குறைவில்லை

42 – பஷுது3 கேஸு மேகு3ம் பரிபூரண செ3ந்தாம் அவி
நிஷத3 ரஜொ ஆங்கு3 நி:ளடிஸ் – இஸதொ3
தெ3ரி ஸியெத் வீணொ! தே3ஹ ஸுக3ம்மு திஸதொ3
பி2ரி ஸியெத் ரெத்து பிள்டி2

பட்டு கார்குழலில், பூரண நிலவு முகம் வந்து
நிடத மன்னனுக்கு தன்னை தந்தாள் - இப்படி
தொட்டுப் பார்த்தால் வீணை! தேக சுகத்தில் அப்படி
திருப்பி பார்த்தாள் தேர் பொம்மை

43 – காய் கெர்னொ மெனி களயெதினு கா2ய் கெரராத்தெ, களாரனி!
பாஞ்ய் பூ4ஞ்யிர் நிள்சரெனி, ப2ராது3 ஹட்வனுஸ் தெ3க்கானி
ஸாய் ஸொகன் நா:ன் பஷுது ஸவ்லொ வெக்ள ஹொயெஸி, நளுடு3
ஹாய் எல்லேஸ் பஜெ மெல்லேத் ஹள்ளு தெரி க2ளத்தக் நிளெஸ்

என்ன செய்யவேண்டும் என்று தெரிந்தும்! எவ்வாறு தெரியவில்லை
நிலத்தில் கால்கள் தங்கவில்லை! பிறகு நடந்த எதுவும் நினவில்லை
பாலாடை போல் மெல்லிய சேலை! வெளிரினாள்! நளனும்
ஆம் இதை தான் கேட்டேன் என்றபடி ஆரம்பித்தான் (தொட்டு விளையாட)

44 – ஆங்கு3ன் செரி க2ள்தொ ஆஸ்தொ தெரி பிள்தொ
ஹோங்கு3ம் தீ3ஸ்-ராத் ஹோட்தொ – போ3ங்கும்
அட்டி நீ:த்தக் தீ3 தெனு ஆட் தின்னு பொந்த்யாஸ்
ஸுட்டுனாத்தக் தா3ம்பத்யு ஸொம்பு

உடல் இணைந்து விளையாடும் வேளையில் ஆசை அரைக்க
உறக்கத்தில் இரவு-பகல் நீண்ட - போகத்தில்
இடைவிடாது இருவரும் எட்டுதினம் அடைந்தனர்
இடைவிடாது தாம்பத்ய சுகம்

45 – அஸ்வகந்தாதி3 லெ:யம், அம்பு3ளா லெ:யம், அபுரஞ்சி
பஸ்பம், தூ3ப், தூ3த், பாத் – தி3ஸ்வந்தி
ஜொமன் முஸள்ளி அஸ்கின் ஜொவள் புஸிலி நிளாஸ்
நமன் கெர்லி த3மயந்தி நளு

அஸ்வகந்தாதி, நெல்லி லேக்கியம், தங்க
பஸ்பம், நெய், பால், அன்னம் - என முப்பதாவதுநாள்
விருந்தை முடித்து எல்லோரிடமும் சொல்லிக் கிளம்பினர்
வணக்கம் சொல்லி நளதமயந்தி

46 – ரெத்தும் ஹிங்க்யாஸ் தீ3 தெனு ரேவதி அஸ்வபதி கொ3டா3ன்
சித்தும் ஹட்வனுன் ஸொக3ன் செரிகி3ன் தமாஸி; பாடாம்
ஹத்3து3ம் தெ3க்கயெ காக்ஷினும் ஹஸாஸ், ஹவ்ளார் தமரிய
நெத்3தி3ம் ஹுதிராஸ், க2ளாஸ் நீடா3ம் ஸல்லாப3க நிஞ்ஜ்யாஸ்

இருவரும் தேரிலேரினர் ரேவதி, அஸ்வினி என்ற பரிகளை
தெருவழியாகவும், மனவழியாகவும் சேர்ந்து ஓடினர்; வழி
நெடுகிலும் கண்ட காட்சியில் நகைத்தனர், இலகுவாக ஆடிய
நதிகளில் இறங்கினர்; தருநிழலில் சல்லாபித்தனர், விளையாடினர்

47 – ஸிங்கா3ரிபுரி ஸொக3ன் ஸே மாவிந்த3ம், ஜெனுலுக்
ஹங்கா3ர் மெனெத்தெ ஹடுனாத்தெ – லெங்கால்!
வித3ர்ப ராஜகுமாரிக் விஷேஸ் ஸ்வாக3த் கெராஸ்
ஸுக3ர்ப ஆஸீர்வாத் ஸோவு

அழகியபுரியாகி இருந்தது மாவிந்தபுரி, இழகிய
பழக்கத்தை வழக்கமாகிய மக்களும் - வழியெங்கும்
விதர்ப இளவரசியை உற்ச்சாகமாக வரவேற்றனர்
பல நூறு பல்லாண்டு பாடி

48 – பா3ர் ஒர்ஸு ஸுக3முன் ப2ரிதுக அனுப3விஞ்சி
சார்காலும் ஜிவ்னம் சல்வ்யாஸ் – தோ3ர்
தொ3ரத்தக் வா ஹொயெஸ், சூருமூஸ் த3மயந்தி
ஜிக3த்தக் தீ3 நுஹுன்னு ஜெனிஸ்

பன்னிரு ஆண்டுகள் சுகமான சம்பத்துக்களை அனுபவித்து
நால்வேளை வாழ்க்கை நடத்தினர் - வழிமுறை
தலைமுறை தழைக்கும் வண்ணம், விரைவிலேயே தமயந்தி
இரு மக்களை ஈன்றெடுத்தாள் (பிறவி) பயனைடைந்தாள்

49 – வீள் ஹொயி பாஞ்ய் து3வத்தக் விஸுரயி ஸந்தி3யா கெரெ நளுடு3
போ2ள் பஸ்கட் பி2ல்லிடி3யோ. பு2ள்ளா போட்ஜாள் திரள்ளத்தக்
வேள் அப்3ப3ரெனினா மெனி வெகு3ஞ்சிலி ஹொதெ3 களஸெனி
தீள்திக்க தா2ம்மு துல்லியெஸ் தெக3 காம் ஹர்ம்ப3ம் கெ2ல்லியெஸ்

மாலை நேரத்தில் உடல்சுத்தம் செய்ய மறந்து சந்தி செய்த நளனின்
விதி வலியதாக திரும்பியது, முன்னொரு வஞ்சத்தை (வயிற்றெரிச்சல்) தீர்க்க
கரிய சனி நாள்பார்த்திருந்த சமயம் வர, வெகுண்டு வந்தான்
எள்ளளவு இடத்தில் நுழைந்தான், தன் வேலை துவங்கினான்.

ஸாந்தி முஹூர்த ஸர்கு3 முஸேஸ் - சாந்தி முஹர்த்த படலம் சுபம்

No comments: