நான் பிறந்தது சித்திரைமாதம், ஆயில்யம் நட்சத்திரம், நவமி திதியில், ராக்ஷஸ கணத்தில். என்னுடைய 19வது வயதிலேயே, நான் எப்படியெல்லாம் இருப்பேன் என்று நானே கணித்துவிட்ட நிலையில் நான் எங்கு எப்படி இருந்தால் யவர்க்கும் எந்த ஒரு நஷ்டமும் இல்லாமல் இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். சித்திரையில் பிறந்தால் அப்பாவிற்க்கு ஆகாது என்பர், நவமியில் பிறந்தால் தனக்காது என்பர், ஆயில்யம் - பயணத்திற்க்கு ஆகாது என்பர், இப்படி எல்லாம் எதுவும் ஆகாத நாளில் நான் ஆனேன் என்று எண்ணுவதுண்டு.
நிற்க. கடந்த நவம்பர் மாதம் என்னுடைய தில்லி அறை நன்பனுக்கு (ரூம் பார்ட்னர்) திருமணமானது, அதை தொடர்ந்து அவரும் மார்ச் மாதவாக்கில் நம்(?) அறையை காலி செய்தார். நானும் புதியவர் ஒருவரை தேடி அலைந்த சமயத்தில் நானிருக்கும் குடியிருப்பிலேயே ஒரு பீகாரை சேர்ந்த ஒரு இளைஞர் தனியாக வசிப்பதாகவும் தம்முடன் என்னை இணைந்து கொள்ளுமாறு கேட்க, வரும் மே மாத முதல் தேதியிலிருந்து வருவதாக வாக்களித்தேன் (எல்லாம் தேர்தல் சமயம் தான்). அவ்வப்போது சந்தித்துக் கொண்டோம். நட்பை பகிர்ந்து கொண்டோம். ஆனால் கடந்த வாரத்தில் எத்தனை முயன்றும் சந்திக்க முடியவில்லை. அவரிருந்த சமயத்தில் நானில்லை, நானிருந்த சமயத்தில் அவரில்லை.
கடைசியாக மே முதல் தேதி காலையிலேயே எழுந்து குளித்து, உணவு தயாரித்து, கடவுளை வணங்கி எப்போதும் வேண்டுவது போல் "எல்லோரும் இன்புற்றுறிக்க வேரொன்றும் அறியேன்! வேண்டேன்!" என்று வணங்கி, பின் 6.50 மணிக்கு அவர் வீட்டு கதவை தட்டினேன். உறக்கம் கலைந்த நிலையில் எழுந்தவர், கதவை திரந்தார். நானோ நீரும், ருத்ராட்சம், சந்தனம் அணிந்து நின்றிருந்ததை பார்த்தவர். வரவேற்று, நலம் விசாரித்தவர், என்னை சந்திக்க அவரும் முயற்ச்சி செய்ததாக கூறினார். அரை மணி நேரத்திற்க்கு பிறகு வந்து பொருட்களை வைத்துக்கொள்ளுமாறு கூறினார். பின் அரை மணி நேரத்தில் எல்லா பொருளும் கட்டியாகி விட்டது, பின் அடுத்த ஒரு மணி 15 நிமிடத்தில் எல்லா சாமானும் இடம் பெயர்ந்தது.
பின் அங்கிருந்து கிளம்பி அலுவலில் மூழ்கினேன் இடையில் வலையில் அன்னையின் தரிசனம், அப்போது ஒரு சின்ன ஞாபகம் இந்த வருடம் என்னோடு இருப்பவர்க்கு சகாயமுண்டு என்று 19வது வயதில் கணித்த கணிப்பு நினைவிற்க்கு வந்தது.
மாலைவேளை, என்னுடன் பணி புரிந்த தில்லி நன்பனொருவனுக்கு திருமணம், தில்லியை அடுத்து ஹரியாணாவில்லுள்ள (தில்லியின் எல்லையிலுள்ள) ஃபரிதாபாத் என்ற மாவட்டத்தில், நிச்சயம் வரவேண்டும் என்று சொன்னது நினைவிற்க்கு வர, நெட்வொர்க்கை ஆரம்பித்தேன். யார்யார் போகிறார்கள் என்று கணிப்பெடுத்து ஒரு வழியாக 6 நன்பர்கள் படைசூழ கிளம்பினோம். வழியில் பரிசுபொருள் ஒன்றை வாங்கி ஒருவழியாக இரவு ஒன்பதரைக்கு மண்டபதிற்க்கு (ஹால்) சென்றடைந்தோம்.
பிறகு மணமக்களை எல்லோரும் சேர்ந்து வாழ்த்தி, பரிசளித்து, உணவருந்திவிட்டு, நகர்ந்தோம். நமக்கு பின் வந்திருந்த என்னுடைய துறை அதிகாரி திரு. ஹிருத்தேஷ் உபாத்யாய் அவர்கள் எங்கள் அறுவரையும் தன்னுடைய காரில் தில்லி எல்லை வரை விட்டு சென்றார்.
அடித்து பிடித்து ஆட்டோவில் பேரம் பேசி மூன்று நன்பர்களும் ஒவ்வொருவராக தத்தமது வீட்டிற்க்கு சென்றோம். நான் காலையில் வீடு மாற்றும் போதே தன்னுடைய ‘ஷூவை’ பாலிஷ் செய்து கொண்டிருந்தார் 'சந்தோஷ்' என்ற என்னுடைய அந்த புது அறை நன்பர். அறையினுள்ளே அவரும் அவருடைய வேரொரு நன்பரும் ஏதோ பேசிக்கொண்டிருதனர். சிறிது நேரத்திற்க்கு பிறகு தமக்கு இன்று காலை வேலை கிடைத்ததாக கூறியதோடு, இன்று காலை இவனுடைய முகத்தில் தான் விழித்தேன் என தன்னுடைய நன்பனிடம் கூறினார். நான் என்னுள் பல முறை நினைத்ததை பிறர் வழியாக கேட்கும் போது சற்று மெய் சிலிர்கிரது, எல்லாம் அவளு(னு)டைய கருணை.
என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகளில் ஒன்று "வரம் நல்லவனுக்கு தான் கிடைக்கவேண்டும். அப்படி கிடைக்கும் வரம் இவ்வுலகையே காக்கும், உலகம் காக்கப்படும் போது நீயும் காக்கப்படுவாய்" என்று சொல்லி இரு உதாரணங்களையும் சொல்வார்.
1. பிரஹலாதன், ஹிரன்யகசிபுவால் மிகவும் துன்புறுத்தப்பட்டார். விஷம் கொடுத்தார்கள், நீரில் எறிந்தார்கள், தீயிலிட்டார்கள், மலையிலிருந்து உருட்டிவிட்டார்கள். துன்பங்களனைத்தையும் மாலவனருளால் வென்று வந்தான் பிரஹலாதன். மலையிலிருந்து உருட்டி விடப்படும் போது மாலவன் ஆணையின் பேரில் பூமாதேவியால் தாங்கப்பட்டு, காக்கப்பட்டார். அப்போது பூமாதேவி வரமருள இசைந்து என்ன வரவேண்டும்? எனக்கேட்க, உடனே பாலகனோ ‘தேவி என் போன்ற சிறு குழந்தைகள் தவறிவிழும் போது அவர்களுக்கும் என் போல் எந்த காயமும் ஏற்படக்கூடாது.’ என்று வரம் கேட்டார். இப்போதும் சிறுகுழந்தைகள் நடக்கும் சமயம் தவறி விழுந்தால் அவர்களுக்கு ஏதும் நேராமல் காக்கிறாள் பூமாதேவி.
2. மன்னன் போஜராஜன் 32 பதுமைகளிடன் விக்ரமாதித்தியனின் கதைகளை கேட்டபடி சிம்மாசனத்தை நோக்கி முன்னேறுகிறான். கடைசி பதுமையிடம் கதை கேட்டு முடிந்தவுடன், அப்பதுமை தங்களது பூர்வீகங்களான அன்னை பார்வதியின் கோபத்திற்க்கு ஆளாகி பதுமைகளாக மாறினோம், என்று சொல்லி, இன்றுவரை தாம் எல்லோரிடமும் கதைகேட்டதால் நம் எல்லோர்க்கும் சாபவிமோசனம் அடைந்தோம். அதற்காக மகிழ்ந்து தங்களக்கு ஒரு வரமும் தரவேண்டும் என்பது தேவியின் கட்டளை, என்று கேட்க, மன்னனும் விக்ரமாதித்தனின் கதைகளை கேட்பவன், சொல்பவன், படிப்பவன், எழுதுபவன் எந்தவொரு குறைவில்லாமல் வாழவேண்டும் என்று கேட்டான்.
இப்படியாக இருப்பதால் இவ்வுதாரணங்களால் கவரப்பட்டு அன்றிலிருந்து நான் இவ்வுலக மக்கள் இன்புற்றுறிருக்க அன்றி வேறொன்றும் வேண்டேன் என்று வாழ்ந்து வருகிறேன். அப்படி அன்றய தின வேண்டுதலே பலித்தது.
சரி அதை ஏன் இன்னக்கி சொல்லனும்? ஒரு வாரம் கழிச்சி, அதுவும் சித்திரை திருவிழா தொடரின் நடுவில்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். முதல் வரி சொன்ன அத்தனை முஹர்த்தங்களும் இன்று தான் வந்தது.
Saturday, May 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
அப்போ எப்படி வாழ்த்தணும்?
happy birthday
கொஞ்சம் குழப்பமா இருக்குது. ஆனாலும் வாழ்த்துக்கள் ..
தருமி சார்,
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவமுருகன்.
நவமி அன்று தான் இராமபிரான் பிறந்தார் என்பதையும் நினைவில் நிறுத்துங்கள். ஆகாத திதியில் தான் கண்ணனும் இராமனும் பிறந்தார்கள். :-)
இந்தப் பதிவைப் படித்தீர்களா?
http://ukumar.blogspot.com/2006/05/blog-post_114669607990041172.html
//நான் பிறந்தது சித்திரைமாதம், ஆயில்யம் நட்சத்திரம், நவமி திதியில்//
வாழ்த்துக்கள்.
இவ்வளவு தெளிவா பிறந்த நாளை வெகு சிலரே ஞாபகம் வைத்திருப்பர்.
குமரன் அண்ணா வரவேண்டும், வரவேண்டும்.
//பிறந்த நாள் வாழ்த்துக்கள் //
நன்றி.
//ஆகாத திதியில் தான் கண்ணனும் இராமனும் பிறந்தார்கள்//
இன்று நான் எப்படி இருப்பேன் என்று முன்னேமே எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதை காட்டும் வரைபடமே ஜாதகமும், சாஸ்திரங்களும், அதற்க்காக அவ்வரை படத்தில் தொலைநோக்கி கொண்டு பார்த்தால் ஒன்னும் தெரியாது.
//நவமி அன்று தான் இராமபிரான் பிறந்தார் என்பதையும் நினைவில் நிறுத்துங்கள். //
எனக்கும் இராமருக்கும் ஒருமாத இடைவெளி என்று வேடிக்கையாக சொல்வதுண்டு.
//http://ukumar.blogspot.com/2006/05/blog-post_114669607990041172.html //
முன்னமே பார்த்துவிட்டேன். நீங்கள் இருப்பதால் நடைபெறும் பணி உங்கள் வாரிசாலோ, புதிதாக வந்த ஒரு நன்பராலோ தடைபடுமா?
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... என்ற கீதாசாரத்தின் அடிப்படையில் நடப்பவை நல்லவையே என்று இருக்கிறேன்.
நன்மணம் வாங்க,வாங்க.
//வாழ்த்துக்கள்.
இவ்வளவு தெளிவா பிறந்த நாளை வெகு சிலரே ஞாபகம் வைத்திருப்பர்.//
வாழ்த்துக்களுக்கு நன்றி. என்ன பண்றது எல்லாம் உப-தொழிலால் வந்தது.
அப்பன் பெயரையும் மகன் பெயரையும் வைத்துள்ளவருக்கு எந்த குறையும் வராது
நன்றி என்னார் சார்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவமுருகன் ...
வாங்க ஜெயஸ்ரீ,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வான் மழை போல பிறரை வாழ்வித்து நீரும் நீடூழி வாழ வாழ்த்தும் நகைச்சுவை பதிவர்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
அன்புள்ள பிரதீப்,
நகைசுவை பதிவரே வருக வருக் உங்கள் வரவு நல் வரவாகுக.
வாழ்த்தை பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி.
மணியன் வாங்க, வாங்க.
வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
உங்களைப் பெற்ற தாய் தந்தையருக்கு முதலில் என் வணக்கங்கள்.
ஈன்ற பொழுதிற்பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல்லெனும் சொல்.
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எதையும் சமன் நோக்கொடு பார்க்கும் உங்கள் பார்வை எனக்கும் கிடைக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்.
அன்புள்ள கீதாம்மா,
//உங்களைப் பெற்ற தாய் தந்தையருக்கு முதலில் என் வணக்கங்கள்.
ஈன்ற பொழுதிற்பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல்லெனும் சொல்.//
அவசியமாக இதை நான் என்னுடைய பெற்றோருக்கு தெரிவிக்கிறேன். கட்டாயம் பெரிதுவக்குவர்.
//மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
//எதையும் சமன் நோக்கொடு பார்க்கும் உங்கள் பார்வை எனக்கும் கிடைக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்.//
"நோக்கம் நமதாய் இருந்தால் எதுவும் சமமாய் தெரியும்." - சத்குரு ஜக்கி வாசுதேவ்
அப்பனே சிவமுருகா,
இனிய பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.
கொடுத்துவச்சவங்கப்பா உங்க பெற்றோர்.
நல்லதே நடக்கும்.
நல்லா இருங்க.
அன்புள்ள தினேஷ்,
//Sivamuragan, iniya pirandha naal vazhthukal! Thangal katturai nanragave irunthathu. Ellorum, Ellorum nanraga irukkavendum enru prarthanai seythal, ivvulagal magilchi than eppoluthum. Inru naanum thangalaippola athaiye prarthikkiren.//
வாழ்த்திற்க்கு நன்றி. ஆம் இதையே பிராத்தனை செய்தால் நமக்கும், பிறர்க்கும் நன்மை பயக்கும்.
//Oru vinnapam, Kadavul nambikkiai irukkalam, mooda nambikkai vendam. Ellorum nallavar! Chithirai matham, Ayilyam natchathiram ethuvum seyyathu. Ellam nallatharkagave nadakkum. //
நான் எண்ணியதுண்டு என்று தான் சொன்னேனே அன்றி 'எண்ணுகிறேன்' என்று சொல்லவில்லை.
அம்மா,
//இனிய பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.
கொடுத்துவச்சவங்கப்பா உங்க பெற்றோர். நல்லதே நடக்கும். நல்லா இருங்க. //
வாழ்த்துக்கு நன்றி.
2003-ல் அவங்களோட ஆசியினால் அடுத்து வந்த ஜூலையிலேயே நான் தில்லிக்கு வந்தேன். அதுவரை என்னுள் ஏதோ தடை இருந்தது. இப்போ பாருங்க அவங்க ஆசியினால் தான் உங்களை போன்ற பெரியவங்க ஆசியும் கிடைக்குது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவமுருகன்.சித்திரை மாதம் பிள்ளைப் பெற்றூ எடுப்பது சிரமமான விடயம்தான்.சித்திரையில் பிறந்தவர்கள் சிநெகிதம் பாராட்டுவார்கள். எங்கலள் மகளும்
நல்ல பெண்மணி. மனு
நன்றி மனு,
//சித்திரையில் பிறந்தவர்கள் சிநெகிதம் பாராட்டுவார்கள்.//
மிக மிகச் சரியாக சொன்னீர்கள்.
//எங்கலள் மகளும்
நல்ல பெண்மணி.//
இது கொஞ்சம் புரியவில்லை. விளக்கமாக சொல்வீர்.
சிவனடியாரை நாள் என் செய்யும் கோளென் செய்யும். சதமானம் பவதி. நோய் நொடியில்லாமல் நூறாண்டுகாலம் வாழ்க. அன்பன் தி. ரா. சா
அன்புள்ள தி.ரா.ச.,
//சிவனடியாரை நாள் என் செய்யும் கோளென் செய்யும்//
நன்மையே செய்யும்.
//சதமானம் பவதி. நோய் நொடியில்லாமல் நூறாண்டுகாலம் வாழ்க. //
வாழ்த்துக்களுக்கு நன்றி.
கொஞ்சம் தாமதமாயிடுச்சு. பிறந்த நாள் வாழ்த்து :-)
நன்றி பாலா.
இருந்தது போக நூறாண்டு வாழ்க. நான் முன்னால் வேலை பார்த்து வந்த ஒட்டன்சத்திரத்தில் இப்படி ஒரு சொல்லாடல் கேள்வி பட்டிருக்கிறேன். அதையே உங்களுக்கும் சொல்கிறேன்.
//குமரன் சார்
அஷ்டமி நவமி ஆகாத திதியில் தான் கண்ணனும் இராமனும் பிறந்தார்கள்
அந்த இரண்டு திதியும் தீயவர்களுக்கு ஆகாது என்பது காலப்போக்கில் மாறியிருக்குமோ//
வாங்க சூப்பர் சுப்ரா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
//குமரன் சார்
அஷ்டமி நவமி ஆகாத திதியில் தான் கண்ணனும் இராமனும் பிறந்தார்கள்
அந்த இரண்டு திதியும் தீயவர்களுக்கு ஆகாது என்பது காலப்போக்கில் மாறியிருக்குமோ//
இதை குமரன் அவர்களுக்கு அனுப்புகிறேன்.
இனிதே வாழ வாழ்த்துக்கள்.
எனக்கு இந்த ஆகிற/ஆகாத நாள்/நேரம்/கோள்/நட்சத்திரம் இன்னபிற.. என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை. கோள்கள் சுற்றுவதையும், நட்சத்திரங்கள் ஒளிர்வதையும் எல்லா நாளிலும் எல்லா நேரமும் ஓடிப்போவதையும் தவிர அவை யாருக்கும் ஒன்றும் செய்வதில்லை.
ஷ்ரேயா மேடம் வாங்க வாங்க,
எனக்கும் கொஞ்சம் நம்பிக்கை தான். அவ்வளவே.
நன்றி.
சூப்புர் சுப்ரா, நீங்கள் சொல்வது சரிதான் என்று எண்ணுகிறேன்.
நன்றி குமரன் அண்ணா.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா.
எங்காத்தா மீனாச்சி எப்பவும் போல உங்களுக்குத் தொணையிருப்பா.
மிக மிகத் தாமதமனாலும், மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
நாளும், கோளும் செய்வதை யாரும் செய்ய முடியாது என்பதை நம்புபவன் என்ற முறையிலும், சித்திரைத் திருநாள் வைபவங்களை மகிழ்வுடன் படித்தவன் என்ற வகையிலும்,
நவமி, ஆயில்ய, ராக்ஷஸ திதியனுக்கு என் வாழ்த்துகள்!
மிக்க நன்றி பிரதீப்.
மிக்க நன்றி SK.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவமுருகன்.
வாழ்க வளமுடன்.
//
அப்போது ஒரு சின்ன ஞாபகம் இந்த வருடம் என்னோடு இருப்பவர்க்கு சகாயமுண்டு என்று 19வது வயதில் கணித்த கணிப்பு நினைவிற்க்கு வந்தது.
//
அப்பனே இந்த மாதிரி ஏதாவது கணித்து வைத்திருந்தா முதல்லயே சொல்லுப்பா, நாங்களும் பயன் அடைஞ்சிக்கிறோம். :-))
நல்லவர்களின் சேர்க்கை நன்மை தான் செய்யும்.
வாங்க குறும்பன்,
முதல் முறை வந்துள்ளீர்கள்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
//அப்பனே இந்த மாதிரி ஏதாவது கணித்து வைத்திருந்தா முதல்லயே சொல்லுப்பா,//
இன்றய பொழுது உங்களுக்கும் உங்கள் அன்பிற்கினியவர்களுக்கு மிக உகந்த நாள். இன்று நீங்கள் அளற்பறிய சந்தோஷத்தில் இருப்பீர்கள்.
Post a Comment