நவபக்தி
குமரன் அவர்களின் கேட்டதில் பிடித்தது பதிவில் “பக்தி மரபில் இறைவனை காதலனாகவும் தம்மை காதலியாகவும் நினைத்து வழிபடுவதும் ஒரு முறையாக இருக்கிறது.” என்று சொல்லியிருந்தார். அச்சமயம், நான் கடந்த 2000ல் கேட்ட திரு. தா.கு.சுப்ரமணியன் அவர்களின் “நவபக்தி” என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவில் அவராற்றியது நினைவிற்க்கு வந்தது, வரும் பதிவுகளில் ஒரு தொடராக தரவிருக்கிறேன்.
“எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தொடங்கி அவராற்றிய சொற்ப்பொழிவு.
நவபக்தி என்பது ஒன்பது விதமான இறைதொண்டு. அத்தொண்டை புரிந்துகொண்டு இறைவனை வழிபடுவதும், கூடவே தம் நித்திய தர்மாச்சாரங்களையும், நியமங்களையும் செய்து வருவதே பக்தனின், மனிதனாக பிறந்தவனின் கடமை.
“பக்தி செய்து பிழைக்கச்சொன்னான் பலன்கருதா உழைக்கச்சொன்னான்” என்பது பாரதி சொன்ன கீதையின் சாரம்.
“அப்பேற்ப்பட்ட பக்தியானது என்ன?”
“கடவுளை யார் என்ன கூறினாலும் அதை முழு மனதுடன் சொன்னால் அதையே தன்னை பக்தி செய்ததாக ஏற்றுக்கொள்கிறான். அந்த பலன்படி அவன் தன் மக்களை கரை சேர்க்கிறான்.”
1. தாச பக்தி - இறைவன் சேவை ஒன்றே குறிக்கோள்.
2. நாயகி பக்தி - இறைவனே தன் காதலன், நாயகன்.
3. பத்னி பக்தி - இறைவனே என் கனவன்.
4. சகோதர பக்தி - இறைவன் என் சகோதரன்.
5. நாரத பக்தி - இறைவனை பாடல்களால் பாடி பரவசப்படுவது.
6. மித்ர பக்தி - இறைவன் என் தோழன்.
7. ப்ரோஹித பக்தி - இறைவனை மந்திரங்கள் சொல்லி பரவசப்படுவது.
8. குரு பக்தி - இறைவன் என் ஆசான்.
9. விரோத பக்தி - இறைவன் என் எதிரி.
6 comments:
சிவமுருகன், நல்ல தொடர். வாழ்த்துகள். நான் படித்த நவ-வித-பக்திகள் வேறு. நீங்கள் பட்டியல் இட்டிருப்பது வேறு. திரு.தா.கு.சுப்ரமணியன் ஐயா அவர்களின் பட்டியல் இது என்று எண்ணுகிறேன். அதனால் இந்தப் பட்டியலில் சொன்ன ஒன்பது வித பக்திகளையும் பற்றி எழுதுங்கள்.
நான் அறிந்த ஒன்பதுவித பக்தி:
ச்ரவணம்: இறைவனின் புகழையும் திருவிளையாடல்களையும் கேட்பது (எழுதுவதும் இதில் சேரும்)
கீர்த்தனம்: இறைவனின் திருப்பெயர்களையும் புகழையும் திருவிளையாடல்களையும் பாடுவது
ஸ்மரணம்: இறைவனின் திருப்பெயர்களையும் புகழையும் திருவிளையாடல்களையும் எண்ணிக் கொண்டிருப்பது
பாத சேவனம்: அவன் திருவடிகளை என்றும் வணங்குவது
அர்ச்சனம்: அவனை வழிபடுவது
வந்தனம்: அவனை விழுந்து வணங்குவது
தாஸ்யம்: அவனின் அடிமை என்னும் எண்ணத்தை வலுப்படுத்திக் கொள்வது
சக்யம்: அவனின் நண்பன் என்னும் எண்ணத்தை வலுப்படுத்திக் கொள்வது
ஆத்ம நிவேதனம்: எல்லாமே அவன் என்று அவனை முழுமையாக சரணடைவது; தன்னையே அவனுக்குக் கொடுப்பது.
இவற்றில் நாயகநாயகி பாவம் வரவில்லை.
குமரன் அண்ணா,
நீங்கள் குறிப்பிட்டுள்ள பக்தி, ஒரே அன்பர் செய்யும் பலவித வழி என்று எண்ணுகிறேன்.
//திரு.தா.கு.சுப்ரமணியன் ஐயா அவர்களின் பட்டியல் இது என்று எண்ணுகிறேன்.//
இத்தொடரில் நான் எழுதுவதுயாவும், அவரது உரையை தழுவி எழுதப்பட்ட என்னுடைய கருத்தே.
நீங்கள் பட்டியலிட்ட பக்தியும் மிகச்சரியானதே.
ஆத்ம நிவேதனம் தான் நாயக நாயகி பாவம். உதாரணம் ஆண்டாள் மற்றும் மீரா.அவர்கள் இருவரும் தங்களையும் ஆத்மாவையும் கண்ணனுக்கு நிவேதனம் செய்தவர்கள். தி ரா. ச
அன்புள்ள தி.ரா.ச.,
இதை பற்றி இரண்டாவது பதிவில் சொல்கிறேன்.
வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
"இறைவனும் நானும் ஒன்றே" எனும் அத்வைத நிலை இதில் எங்கு பொருந்தும் சிவமுருகன்?
செல்வன் சார்,
1+1=2,1+1=1 ஆகாது.
//'இறைவனும் நானும் ஒன்றே' //
ஒரு யோகாஆசிரியர் இருந்தார், அவரிடம் பலர் கலைகளை கற்று தத்தமது பகுதிக்கு சென்று யோகா கற்று தர ஆரம்பித்தனர் பிறகு சில நாட்களுக்கு பின் மீண்டும் அனைவரும் ஒன்றாக ஆசிரியரை கண்ட போது தமது சீடர்கள் தமக்கு செய்யும் அதே மரியாதையை தமது குருவிற்க்கு செய்தனர். ஆசிரியர் எப்போதும் ஆசிரியர், ஏன் குருவிற்க்கு மிஞ்சிய சீடனானாலும், சீடன் குருவிற்க்கு என்றும் சீடனே. முதல் முறை குருவிற்க்கு, இறைவனுக்கு கிடைத்த நிலை தான் காலாகாலத்திற்க்கும் ஏற்ப்பட்ட நிலை. 'பித்தா' என்று திட்டிய நாயன்மார் 'பித்தா' என்றே தன் பதிக்கத்தை பாடினாரே அது போல் தான்.
இதெல்லாம் முதல் சந்திப்பில் (அது குருவோ, இறைவனோ) இருந்தே சீராக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.
என்னுள் உள்ள கடவுளை கண்டால் அது என்னுள் தான் இருக்கிறதே ஒழிய நானல்ல.
உங்களிடம் பகவான் ரமணர் கேட்ட ஒரு கேள்வி "நீ(ங்கள்) யார்?" சொல்லுங்கள் பார்க்கலாம்.
Post a Comment