Monday, May 22, 2006

146: தமிழ் நாடு மேல் நிலை பள்ளி தேர்வு முடிவுகள்

தமிழ்நாடு மேல்நிலை பள்ளியின் இறுதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் முதல் மாணவராக நங்கநல்லூரை சார்ந்த, திரு பரத்ராம், 1180 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் வந்துள்ளார்.

மொத்த தேர்வானவர்கள் விழுக்காடு 74.4%.
இதில் மானவர்கள் பங்கு - 71.7%
மேலும் மானவிகள் பங்கு - 77.1%

மேலும் முடிவுகளுக்கு தேசிய தகவல் மையத்தின் தமிழக கிளையின் தளம்.

மேலும் தகவல்கள் இங்கே.

முதல் மதிப்பெண் பெற்ற பரத்ராமுக்கும், தேர்வு பெற்ற அனைவருக்கும் எம்பதிவர் உலகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், மேற்படிப்பில் நீங்கள் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த அன்னை மீனாட்சிசுந்தரேஸ்வரரை வேண்டுகிறேன்.

6 comments:

Unknown said...

என்னங்க.எல்லா வருஷமும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை விட அதிகமாயிட்டே போகுது?பசங்க படிக்கறதே இல்லை போல

சிவமுருகன் said...

செல்வன் சார்,
அப்படி கிடையாது. தேர்வு எழுதுவதும், நுட்பங்களை வாழ்க்கைக்கு பயன்படுத்துவதும் வேறு.

அதற்க்காக மாணவிகளை நான் குறை சொல்லவில்லை, அதில் இப்படியும் சிலர், சில நேரத்தில் சிலர். அவ்வளவே.

என்னையே எடுத்துகோங்க நான் 8 ஆம் வகுப்பில் தோல்வி, 2 வருஷம் படிச்சேன், மறுபடி 9ஆம் வகுப்பில் தோல்வி, நேரடி மாணவனாய் 10ஆம் வகுப்பு தேர்வெழுதினேன், 60% மதிப்பெண்களுடன் தேர்ந்தேன், தொழில் நுட்பம் படித்தேன், முதல் வகுப்பில் 68.25% மதிப்பெண்களுடன் தேர்ந்தேன்.

படிப்பு வேறு வாழ்க்கை வேறு சார். (மண்ணிக்கனும் கொஞ்சம் ஓவரா போச்சு?)

கோவி.கண்ணன் said...

//என்னையே எடுத்துகோங்க நான் 8 ஆம் வகுப்பில் தோல்வி, 2 வருஷம் படிச்சேன், மறுபடி 9ஆம் வகுப்பில் தோல்வி, நேரடி மாணவனாய் 10ஆம் வகுப்பு தேர்வெழுதினேன், 60% மதிப்பெண்களுடன் தேர்ந்தேன்//
'விழுந்து', 'விழுந்து' படித்தேன் என்று இதைத்தான் சொல்கிறார்களா ? :)

சிவமுருகன் said...

வாங்க கோவிசார்,
நீங்கள் சொல்வது சரின்னாலும், அப்படியும் கிடையாது, விழுவது தோல்வி அல்ல, மீண்டு எழாமல் இருப்பது தான் தோல்வின்னு, சானக்கியன் சொல்ல படிச்சிருக்கிறேன். அவ்வளவே.

கோவி.கண்ணன் said...

//நீங்கள் சொல்வது சரின்னாலும், அப்படியும் கிடையாது, விழுவது தோல்வி அல்ல, மீண்டு எழாமல் இருப்பது தான் தோல்வின்னு, சானக்கியன் சொல்ல படிச்சிருக்கிறேன். அவ்வளவே.//
என்னங்க நீங்க ஒரு டைமிங் ஜோக்கா இருக்கட்டும்னு சொன்னால் சீரியஸ பதில் சொல்கிறீர்கள். நாங்களும் காலேஜ்ல கப் வாங்கியிருக்கோம்லெ :)

சிவமுருகன் said...

ஜொக்னாலும் அதில் ஒரு படிப்பை திரும்பி பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது, அடிக்கடி வாங்க, நிறைய திரும்பி பார்க்க வைக்கனும்னு கேட்டுக் கொள்கிறேன்.
:)