Monday, August 14, 2006

இந்திய நாடு என் வீடு



நாளை நம் வாழ்வில் ஒரு பொன்னாள்,
இனியதொரு திருநாள்.
வாழ்வில் மற்றொரு முறை வரமுடியாத ஒரு திருநாள்.

ஆம், நம் இனிய வீடான இந்நாடு சுதந்திரமடைந்து 60ஆம் கல்யாணம் கொண்டாடும் ஒரு மாபெரும் திருநாள்.

இந்த நாளில் தீவிரவாதத்தை எதிர்த்து முழங்கவுள்ளார் நம் பிரதமர் “மன்மோகன் சிங்” என்ற பொருளாதார மேதை. அப்போது, இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள இந்தியர்கள் கரகோஷம் எழுப்பி, ஆனந்திப்பர். ஆனால் அவ்வறிவிப்புகள், அவ்வறைகூவல்கள் எல்லாம் அக்கரவொலி கரைந்தது போலே சிலநாட்களிலேயே கரைந்துவிடும், அப்படிபட்ட ஒரு காட்சி மீண்டுமொரு முறை அரங்கேற போகிறது நம் பாரதத்தில். நாமும் கரவொலி எழுப்ப தயாராகிவிட்டோம், கரவொலி எழுப்பும் முன் ஒரு சிறிய சிந்தனை தூண்டும் ஒரு வேண்டுகோள்.

1834 இந்தியா அன்று எப்படி இருந்தது ஆம் ஆகஸ்ட் புரட்சி நடக்க மூன்றாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது?

எதற்க்கும் ஆங்கிலேய மோகத்தையே மேற்க்கோள் காட்டும் பழக்கம் நம் ரத்தத்தில் ஏன் ஊறியது?
எப்போது பார்த்தாலும் அன்று அந்த ஆங்கிலேயர் இப்படி சொன்னார், அந்த பிரபு இவ்வாறு அழைத்தார் என்று சொல்லிகொள்ளும் நாம் அன்று எப்படி இருந்தோம், நம் கல்வி தரம் எப்படி இருந்தது.

வாய்கால் வரப்பிற்கருகில் இருந்த நெல்லை அறுக்காத தமிழர்கள் நாங்கள். அதை ஏழை எளிய மக்களுக்காக விட்டு வைத்தோம், அதை வரி என்று அறுத்துக்கொண்டு போனான் வெள்ளையன்.

நமக்குள்ளே சண்டை சச்சரவுகள் ஆயிரம் இருந்தாலும் நமக்குள் ஒரு மதிப்பு இருந்தது, கண்ணியமிருந்து. அதே தருணத்தில் அண்ணியனை வாழ்வளித்த, அதரவளித்த இந்தியர்கள் நாங்கள்.

அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியங்கோடியாம்
ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்

என்று புண்ணியம் கோடி தரும் ஒரு செயலை பணத்திற்க்கு விற்க்கும் ஒரு வியாபாரமாக்கியது ஆங்கிலேய சாம்ராஜ்ஜியம். பின் தாம் செய்த செயலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டு மற்றவர்களையும் தன் பால் ஈர்த்தது.

"A new India was born in 1835. The very foundations of her ancient civilization began to rock and sway. Pillar after pillar in the edifice came crashing down."


1835-ல் மெக்காலே பிரபு என்ற பிரிட்டிஷ் கௌன்ஸில் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை பாருங்கள், இந்தியாவை துண்டாட ஒரு பெரிய செயல்திட்டத்தை (Master Plan) வகுத்து செயல்படுத்தியது தெரியவரும்.

"I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation."

ஒரு திருடனோ, ஒரு பிச்சைகாரனோ இல்லாத நாட்டில் எப்படி நாம்(ஆங்கிலேயர்) நுழைவது? என்று எண்ணியவர் அதற்க்கு ஒரு தீர்வும் சொல்லி அதை செயல்படுத்தி, கடைசியில் (1947-ல்) தோற்க்கும் சமயத்தில் கூட அதை நிறை(வெ)வேற்றி விட்டனர்.

எத்தனையோ இஸ்லாமியர்கள் தம் அமைத்துக்கொண்ட இடங்களுக்கு பாதுகாப்பளித்தனர் அன்றைய இந்து மன்னர்கள், எத்தனையோ இந்துக்களுக்கு ஆதரவளித்தனர் அன்றைய இஸ்லாமிய மன்னர்கள். இப்படி வேற்றுமையில் ஒற்றுமையாக இருந்த நம்மவர்களை, பிரித்து, காந்தார தேசம் வரை பரந்து-விரிந்து கிடந்த தேசிய-சமுகத்தை இன்று காஷ்மீருக்கு கூட போராடும் நிலை அவர்களால் உருவானது.

இதே சமயத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் சொன்ன ஒரு சொல் ஞாபகத்தில் உதித்தது “நாளை முதல் நமக்கு சுதந்திரம், நடந்த செயல்களுக்கு இனி நாம் ஆங்கிலேயரை குறை கூறகூடாது.” (இப்படி தான் இருந்துள்ளோம், இப்படி தான் இருக்கிறோம், இப்படி தான் இருப்போமா?.)

(back to the point)

ஆகவே இம்முறை அந்த அறைகூவல்கள், அறிவுப்புகள் நிறைவேறும் வரை நம் கரவொலிகள் நிற்க கூடாது, அதை பற்றி மறக்காமல், சிந்தனை சிதராமல், நாளொரு வர்ணனை, நாளொரு சிந்தனை, நாளொரு பதிவு, அல்லது குறைந்தது நாளொரு பின்னூடமாவது இடும் ஒரு இயக்கம் ஆரம்பிக்க படவேண்டும் அதுவே இந்த இனிய அறுபதாம் சுதந்திர நாளில் ஏற்க்கும் ஒரு சபதமாக வேண்டும் என்று பதிவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். தேசியத்தையும் தெய்வீகத்தையும் ஒன்றாக ஒரே ஏணியின் இருகால்களாக கொண்டு ஏறிடிவோம்.

நாம் இந்தியர் வெறும் இந்துக்களல்ல,
நாம் இந்தியர் வெறும் இஸ்லாமியரல்ல,
நாம் இந்தியர் வெறும் கிருஸ்துவரல்ல,
நாம் மனிதாபிமானமுள்ள ஒரு இந்தியர் என்பதை மீண்டும் நிருபிப்போம்.
இப்படிக்கு,
2020க்குள்ளோ, 2020லோ இந்திய கனவு நனவாக துடிக்கும்
ஒரு இந்தியன்.

வாழ்க மணித்திருநாடு.
வாழ்க இந்தியர்.
வளர்க முத்தமிழ்.
வாழிய நற்றமிழர்.

16 comments:

Anu said...

wish you a happy independence day

சிவமுருகன் said...

wish you the same Anita.

வடுவூர் குமார் said...

சிவமுருகன்
நல்ல பதிவு.
வாழ்வோம் இந்தியனாக.

நாமக்கல் சிபி said...

//நாம் இந்தியர் வெறும் இந்துக்களல்ல,
நாம் இந்தியர் வெறும் இஸ்லாமியரல்ல,
நாம் இந்தியர் வெறும் கிருஸ்துவரல்ல,
நாம் மனிதாபிமானமுள்ள ஒரு இந்தியர் என்பதை மீண்டும் நிருபிப்போம்.
//

இதுக்கே உமக்கொரு சல்யூட்!

சிவமுருகன் said...

நன்றி குமார்,

சுதந்திர தின வாழ்த்துக்கள் .

சிவமுருகன் said...

சிபி சார்,

நன்றி.

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

சிவமுருகன் said...

Thank you, and wish you the same.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

"நாம் இந்தியர் வெறும் இந்துக்களல்ல,
நாம் இந்தியர் வெறும் இஸ்லாமியரல்ல,
நாம் இந்தியர் வெறும் கிருஸ்துவரல்ல,
நாம் மனிதாபிமானமுள்ள ஒரு இந்தியர் என்பதை மீண்டும் நிருபிப்போம்.
இப்படிக்கு,
2020க்குள்ளோ, 2020லோ இந்திய கனவு நனவாக துடிக்கும்
ஒரு இந்தியன்.

வாழ்க மணித்திருநாடு.
வாழ்க இந்தியர்.
வளர்க முத்தமிழ்.
வாழிய நற்றமிழர்."

இன்றைய இந்திய இளைஞர்களிடம் இந்த உணர்வு ஓங்கி பாரதமாதா ! தலை நிமிர வாழ்த்துகிறேன்
யோகன் பாரிஸ்

உங்கள் நண்பன்(சரா) said...

சிவமுருகன்...
நல்ல பதிவு.
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்...
சரவணன்.

வடுவூர் குமார் said...

º¢Å ÓÕ¸ý,
¯í¸ÙìÌõ ;ó¾¢Ã¾¢É Å¡úòÐì¸û.

CAPitalZ said...

நிங்கள் கொடுத்த ஆங்கில ஆவண வரிகள் பொய்யானவை. அவை உண்மையான ஆவணம் அல்ல.

வேணுமென்றால் தேடு தளங்களில் ஒரு தேடுதல் செய்து பாருங்கள்

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

சிவமுருகன் said...

//சிவ முருகன்,
உங்களுக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.//

என்ன குமார், திஸ்கில தட்டிவிட்டீர்கள் போல.

நன்றி.

சிவமுருகன் said...

நன்றி யோகன் ஐயா.

சிவமுருகன் said...

நன்றி சரவணன்

சிவமுருகன் said...

capital,
படித்துவிட்டு சொல்கிறேன்

சிவமுருகன் said...

அன்புள்ள Capital,
சரியான சுட்டியை தரவும்,
எனக்கு சம்பந்தமில்லாத தலைப்பிலுள்ளது(காதல்) நீங்கள் சுட்டிய சுட்டி.