Thursday, August 10, 2006

உறவு என்பதால்

நான் ஆணென்பதால் அழுவதில்லை (ஆம்பள சிங்கம்டா)
- அழுதால் ஆணென்று ஏற்க்கமாட்டரே.

நான் பெண்ணென்பதால் அழவைப்பதில்லை (பொண்ணா பொறந்தாலே...)
- அழவைத்தால் பெணென்று ஏற்க்கமாட்டரே.

நான் மகனென்பதால் சோர்வதில்லை (அம்மா இந்தாங்க இந்த மாச சம்பளம்)
- சோர்ந்தால் மகனென்று ஏற்க்கமாட்டரே.

நான் மகளென்பதால் சிலிர்ப்பதில்லை (நீங்க சொல்ற பையனையே
கட்டிக்கிறேன்ப்பா)
- சிலிர்த்தால் மகளென்று ஏற்க்கமாட்டரே.

நான் மனைவி என்பதால் தவிற்ப்பதில்லை (பரவாயில்லங்க)
- தவிற்த்தால் மனைவி என்று ஏற்கமாட்டரே

நான் கனவனென்பதால் காத்திருப்பதில்லை (சீக்கிரம் சீக்கிரம்)
- காத்திருந்தால் கனவனென்று ஏற்க்கமாட்டரே.

நான் தாயென்பதால் ஓய்வதில்லை (அம்மா காய்கறி வாங்க போயிருக்காங்க)
- ஓய்ந்தால் தாயென்று ஏற்க்கமாட்டரே.

நான் தந்தையென்பதால் உழைக்க மாய்வதில்லை (அப்பா வெளியே போயிருக்காங்க)
- மாய்ந்தால் தந்தையென்று ஏற்க்கமாட்டரே.

நான் பாட்டியென்பதால் விழிப்பதில்லை (ஷ்ஷ்ஷ்... பாட்டி தூங்குகிறார்)
- விழித்தால் பாட்டி என்று ஏற்க்கமாட்டரே.

நான் தாத்தா என்பதால் உறங்குவதில்லை (ஷ்ஷ்ஷ்... தாத்தா சாமி கும்புடுகிறார்)
- உறங்கினால் தாத்தாவென்று ஏற்க்கமாட்டரே.

நான் தெய்வமென்பதால் பேசுவதில்லை (...)
- பேசினால் தெய்வமென்று ஏற்க்கமாட்டரே.


வாழ்க உறவுகள்!

5 comments:

ENNAR said...

நான் ஆன்லைனில் இருப்பதால் பின்னூட்டமிடமுடிகிறது

தி. ரா. ச.(T.R.C.) said...

நான் உங்கள் உறவு (நட்பு) என்பதால் உங்கள் பதிவை படிக்காமல் விட்டதில்லை.படித்தால் வந்த உறவுதானே இது. வெற்றி பெறவாழ்த்துக்கள்

மணியன் said...

உறவுகளின் எதிர்பார்ப்புகளை பட்டியலிட்டுள்ளீர்கள். வீடுவரை உறவு...கடைசிவரை யாரோ ?

மதுமிதா said...

நான் விழித்திருந்து வாசித்ததால்
உறங்காத பின்னூட்டம் இங்கே

சிவமுருகன் said...

உறவுகளும் ஒற்றுமைகளும் – தேன்கூடு போட்டிக்காக கவிதைக்கு (?) வாக்களித்த 14 பேருக்கும், உறவு என்பதால் கவிதைக்கு (?) வாக்களித்த 11 பேருக்கும். என் மனமார்ந்த நன்றிகள்.