Monday, August 07, 2006

ஐடி பொம்மன்

ஐடி பொம்மன்.

வீர பாண்டிய கட்டபொம்மன் வசனத்தை ஐடியில் உள்ளபடி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன் அதன் விளைவு இந்த நகைச்சுவை பதிவு. (இது சொந்த சரக்கு.)

ஐடி பொம்மன் ஒரு அவுட் சோர்சிங் நிறுவனத்தில் ப்ராஜக்ட் மேனஜர்,
ஐசக் துரை பொம்மன் பணிபுரியும் ‘அவுட் சோர்சிங்கை’ நடத்தும் அமேரிக்க உயரதிகாரி.

ஐசக் துரை : நீர் தான் இன்பர்மேஷன் டெக்னாலஜி பொம்மனோ?

ஐடி பொம்மன் : நீர் தான் ஐசக் துரை என்பவரோ?

ஐசக் துரை : என்ன விஷயம்?

ஐடி பொம்மன் : நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேன், அதையே விரும்பி நானும் வந்துள்ளேன்.

ஐசக் துரை : நட்பு வேண்டும் ஆனால் அதற்க்குறிய தகுதி இல்லை உன்னிடத்தில்.

ஐடி பொம்மன் :(ஆவேசத்துடன் எழுந்து) தகுதியைபற்றி எமக்கு பாடம் சொல்லும் துணிவு வந்துவிட்டதா? என்ன குற்றம் கண்டீர் எம்மிடத்தில்?

ஐசக் துரை : குற்றங்களை சொன்னால் கணக்கிலடங்காது, எண்ண முடியாது.

ஐடி பொம்மன் : ஹூம் எண்ணிக்கை தெரியாத குற்றம்.

ஐசக் துரை : எனக்கா! எனக்கா! எண்ணிக்கை தெரியாது இதோ சொல்கிறேன் கேள்!

கடந்த ஆண்டு உங்களது ப்ரபோசல் ஷீட் வரவில்லை
நீங்கள் செய்யவிருக்கும் ப்ராஜக்டின் தீம் ஷீட் வரவில்லை
நீங்கள் செய்த ப்ராஜக்டின் மெனுவல் வரவில்லை
நீங்கள் செய்த ப்ராஜக்டின் ஒட்டு மொத்த மதீப்பீடு தரவில்லை,
இவற்றிக்கான மெமோவிற்க்கு ரிப்ளை வரவில்லை

ஐடி பொம்மன் : (எழுந்து நடந்த படி) ப்ரபோசல் ஷீட், தீம் ஷீட், மேனுவல், மதீப்பீடு, ரிப்ளை. ஹும்

ப்ராஜக்ட் கிடைக்கிறது, மென்பொருள் தயாராகிறது
உனக்கு ஏன் தரவேண்டும் ப்ரபோசல் ஷீட்?
எங்களுடன் ஸைட்டுக்கு வந்தாயா?
பக்கை கண்டு பிடித்தாயா?
அதை செட் செய்தாயா?
க்ளைண்டின் கேள்விக்கு பதில் சொன்னாயா?
மென்பொருள் நிருவினாயா?
கணினி வாழ் வல்லுனர்க்கு சம்பள பாக்கி தந்தாயா?
அல்லது இரவு முழுவதும் முழித்திருந்து பதில்லளித்த எம் கால் சென்டர் பெண்களுக்கு காபி கொடுத்து சேவகம் செய்தாயா?
அல்லது நீ மாமனா? மச்சான? மானங்கெட்டவனே.
பக்கடித்து வாழும் கணினி வாழ் வல்லுனர் கூட்டம் அவுட் சோர்சிங்கர் ப்ராஜக்ட்டை பக்கினால் நிரப்பி விடும் ஜாக்கிரதை.

No comments: