Thursday, August 10, 2006

ஷாரூக் ஏன் இப்படி?

http://www.dinamalar.com/2006aug10/specialnews1.asp?newsid=4

மும்பை : "அரசு நிறுத்தச்சொல்லி உத்தரவு போட்டால், நான் குளிர்பான விளம்பரத்தில் தோன்ற மாட்டேன். ஆனால், நான் கேட்பதெல்லாம், நாம் குடிக் கும் குடிநீரில் எவ்வளவு கலப்படம்... ஏன், தாய்ப்பாலில் கூட ரசாயன கலப்படம் இருக்கிறதே... அது பற்றி அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனரா இதுவரை' என்று பொரிந்து தள்ளியுள்ளார் பாலிவுட் பிரபல நடிகர் ஷாரூக்கான்.

ஷாரூக் ஏன் இப்படி பொரிந்து தள்ள வேண்டும்?

"இந்தியாவில் பெப்சிக்கு தடை விதித்தால், நான் அமெரிக்கா போய் பெப்சி குடிப்பேன்' என்றும் தடாலடியாக கூறினார்.குளிர்பானங்களுக்கு ஷாரூக் முதல் சச்சின் வரை பல பிரபலங்களும் விளம்பரங்களில் தோன்றி உள்ளனர். அவர்கள் "மாடலாக' பல பொருட்களுக்கு விளம்பரம் செய்துள் ளனர் என்றாலும், சமீப காலமாக குளிர்பானங்களின் விளம்பரங்களுக்கு ஆதரவு கொடுத்ததில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஐயா நல்ல பேஷா போய்ட்டு வாங்க, நீங்க அமேரிக்க என்ன அந்த சந்த்ரனுக்கு போயிகூட கோல குடிக்கலாம், நாம என்ன கூழோ கஞ்சியோ இங்கயே குடிக்கிறோம்.

கோககோலா, பெப்சி உட்பட சில குளிர்பானங்களில் பூச்சி மருந்து கலப்பு உள்ளது என்று சொல்லி, இதை மத்திய அரசு உயர் குழு தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது. இதை அடுத்து இந்த பானங்களை குடிப்பதில்லை என்று சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுகளை பொறுத்தவரை நேரடி தடை விதிக்கவில்லை என்றாலும், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் என்று தனிப்பட்ட முறையில் தங்களுக்கு கட்டுப்பாடு விதித்துக்கொண்டு கோலாக்களை குடிப்பதில்லை என்று முடிவு கட்டியுள்ளனர்.

குளிர்பான விளம்பரங்களில் வந்த பல பிரபலங்கள் வாயை திறக்காத நிலையில் முதல் முதலாக பாலிவுட் பிரபல நடிகர் ஷாரூக்கான் வாய் திறந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் மும்பையில் ஒரு வாட்ச் கம்பெனி விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் இந்த விவகாரம் பற்றி வாய் திறந்தது மட்டுமல்ல, பொரிந்து தள்ளிவிட்டார்.அவர் பேசியவதாவது: நான் விளம்பரப்படுத்திய பொருளை நியாயப்படுத்துகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஆனால், உண்மை நிலையை சொல்ல வேண்டும் என்பதால் சொல்கிறேன்.

பின்ன இருக்காதா?
திருடனுக்கு தேள் கொட்டினா சும்மவும் இருக்க முடியாது...

குளிர்பானங்களில் பூச்சி மருந்து உள்ளதாக கூறும் உயர் கமிட்டி, நாம் குடிக்கும் குடிநீரில் என்னென்ன கலப்படம் உள்ளது என்று சொல்லியிருக்கிறதா? இந்த நாட்களில் தாய்ப்பாலிலேயே ரசாயன கலப்படம் உள்ளது, அது பற்றி ஆராய்ந்திருக்கிறதா? அவற்றை எல்லாம் முறைப்படுத்தி, சுகாதாரத்தை காக்க நடவடிக்கை எடுத்ததா? நான் பெப்சி, கோலாவுக்கு விளம்பரம் செய்தேன். ஆனால், மத்திய அரசு தடை போட்டால், அதை நிறுத்தி விடுவேன். கட்அவுட் விளம்பரங்களை எதிர்ப்பவர் களும், அதில் தோன்றி முகம் காட்டியவர்களும் இது தொடர்பாக தீர்ப்பு கூற அனுமதிக்கக்கூடாது.

ஐயா அத சரி படுத்த தானே மொதல்ல இத ஒதுக்க சொல்றாங்க?

அவர்களுக்கு குளிர்பானங்களில் பாதுகாப்பு இல்லை என்று கூற தகுதி இல்லை. எது பாதுகாப்பு, எது பாதுகாப்பில்லை என்று சொல்வதில் நியாயமான நிதர்சனமான தீர்ப்பு தேவை. அதற்கான நியாயமான அணுகுமுறையும் தேவை. இவ்வாறு ஷாரூக்கான் பேசினார். அவர் பேசியவுடன் சில நிருபர்கள், "நீங்கள் இன்னும் பெப்சி குடிக்கிறீர்களா?' என்று கேட்டதற்கு, "ஆம், ஆனால், இந்தியாவில் பெப்சிக்கு தடை விதித்தால், நான் அமெரிக்கா சென்று அங்கு குடிப்பேன்' என்றாரே பார்க்கலாம்.


ரொம்ப முக்கியம், போங்கய்யா மும்பைல மழை பெய்யுது அத பத்தி வேற யார்ட்டயாவது கேளுங்க.

No comments: