Friday, August 04, 2006

உறவுகளும் ஒற்றுமைகளும் – தேன்கூடு போட்டிக்காக

உறவுக்கும் நிலவுக்கும்
ஒரு ஒற்றுமை


இரண்டும் தூரஇருந்தால் தான் ஒளிமிகுந்த பௌர்ணமி
இரண்டும் இணைந்து விட்டால் ஒளியற்ற அமாவாசை

உறவுக்கும் மருந்துக்கும்
ஒரு ஒற்றுமை


இரண்டும் தேவையான நேரத்தில் தான்
சந்தித்துக்கொள்ளவேண்டும்

இரண்டும் மற்ற நேரத்தில் சேர்ந்துவிட்டால்
நேரம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்


உறவுக்கும் பகைக்கும்
ஒரு ஒற்றுமை


இரண்டும் உயிருள்ள மட்டும் உருகும்
இரண்டும் மூச்சுள்ள மட்டும் முட்டும்

உறவுக்கும் நீருக்கும்
ஒரு ஒற்றுமை


இரண்டும் இல்லாமல் அமையாது உலகு
இரண்டும் இல்லாமல் அமைவது அல்ல உலகு.
(நட்பும் ஒரு வகையில் உறவு தானே!)

உறவுக்கும் வேலைக்கும்
ஒரு ஒற்றுமை


இரண்டும் உடலில் தெம்புள்ள மட்டும் பாராட்டும்.
இரண்டும் உடலில் தெம்பைவிட்டு விட்டால் நீராட்டும்.

உறவுக்கும் செல்லுக்கும்
ஒரு ஒற்றுமை


இரண்டும் சார்ஜ் செய்த மட்டும் வேலை செய்யும்
இரண்டும் உறவேற்றிய மட்டும் வேலை செய்யும்.

உறவுக்கும் கணினிக்கும்
ஒரு ஒற்றுமை


இரண்டும் உள்ளதை மட்டும் கணக்கிடும் ஒரு கருவி
இரண்டும் தெரிந்ததை மட்டும் சொல்லும் கூண்டுக்கிளி

உறவுக்கும் நாட்காட்டிக்கும்
ஒரு ஒற்றுமை

இரண்டும் உள்ளவரை இருந்து கடைசி நேரத்தில் கிழிந்து விடும்
இரண்டும் காக்க செய்வதில் வரையரை கிடையாது.

எல்லாவற்றிலும் உறவையே காணும் மானிடன் உறவையும் விட்டு, துறவை உறவாக்கி கொண்டவன் துறவியா? அல்லது உறவியா?

10 comments:

வல்லிசிம்ஹன் said...

சிவமுருகன்,
பொருத்தமான உறவுக் கவிதை கொடுத்து இருக்கிறீர்கள்.

எல்லாமே உண்மைதான். தூக்கித் தூக்கி படம் பார்ப்பது போல் சிறப்பாக அமைந்து இருக்கிறது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

சிவமுருகன் said...

\\எல்லாமே உண்மைதான். தூக்கித் தூக்கி படம் பார்ப்பது போல் சிறப்பாக அமைந்து இருக்கிறது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.\\

நன்றி வல்லி

Jazeela said...

எனக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை.
நீங்களும் தமிழர் நானும் தமிழர்
நீங்களும் பிறந்த இடத்தை விட்டு வேலை நிமித்தமாக வெளியூரில் இருக்கிறீர்கள். நானும் பிறந்த இடத்தை விட்டு விட்டு வெகு தூரத்தில் வெளிநாட்டில் இருக்கிறேன்.
நீங்களும் போட்டுக்கு பதிவு போட்டிருக்கீங்க நானும் போட்டிருக்கேன் ;-)

Jazeela said...

எனக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை.
நீங்களும் தமிழர் நானும் தமிழர்
நீங்களும் பிறந்த இடத்தை விட்டு வேலை நிமித்தமாக வெளியூரில் இருக்கிறீர்கள். நானும் பிறந்த இடத்தை விட்டு விட்டு வெகு தூரத்தில் வெளிநாட்டில் இருக்கிறேன்.
நீங்களும் போட்டிக்கு பதிவு போட்டிருக்கீங்க நானும் போட்டிருக்கேன் ;-)

துபாய் ராஜா said...

//எல்லாவற்றிலும் உறவையே காணும் மானிடன் உறவையும் விட்டு, துறவை உறவாக்கி கொண்டவன் துறவியா? அல்லது உறவியா?//

ஆம் சிவமுருகன்.எண்ணிப்பார்த்தால்
நாம் பெறுவதைவிட இழப்பதுதான்
அதிகமாக உள்ளது.

Unknown said...

சிவ முருகன்,

வித்தியாசமான சிந்தனை.. ரசித்துப் படித்தேன் நன்றி.

ENNAR said...

நல்ல கலக்கல் அதான் டெல்லியில் உள்ளீர்கள் போல் இருக்கு

தி. ரா. ச.(T.R.C.) said...

உறவு என்பதே வேற்றுமைக்குள் ஒற்றுமை காண்பதுதானே.நன்றாக விளக்கியுள்ளீர்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள்.

மணியன் said...

போட்டியின் கருவை வெவ்வேறு கோணங்களில் அலசியிருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள் !

சிவமுருகன் said...

உறவுகளும் ஒற்றுமைகளும் – தேன்கூடு போட்டிக்காக கவிதைக்கு (?) வாக்களித்த 14 பேருக்கும், உறவு என்பதால் கவிதைக்கு (?) வாக்களித்த 11 பேருக்கும். என் மனமார்ந்த நன்றிகள்.