Monday, May 29, 2006

150: நூற்றிஐம்பாதவது பதிவு.

150வது பதிவில் என்ன எழுதுவது, எப்படி ஆரம்பிப்பது என்று பலவாறு யோசித்த போது, (கிட்டதட்ட மூன்று நாட்கள்), இதையே ஏன் ஒரு நன்றி தெரிவிக்கும் ஒரு பதிவாக மாற்றக்கூடாது என்று நினைத்தேன், செய்கிறேன்.

கடந்த அக்டோபரில் மணற்கேணி பதிவு ஆரம்பித்து என்னுடைய சிறு குறிப்பை மட்டும் அளித்திருந்தேன். அதன் பிறகு எந்த பதிவுகளையும் இடாமல் இருந்து வந்தேன். அப்போதும், இப்போதும் பதிவுலகில் கொடிநாட்டிவரும் பல பதிவர்களின் பதிவுகளான ‘ஆன்மீக சூப்பர் ஸ்டார்’ குமரன் அவர்களின் மதுரையின் ஜோதி (நான் படித்த முதல் பதிவு), கூடல் (என்னை மீனாட்சி அம்மன் கோவிலின் படங்களை ஆரம்பிக்க ஒரு தூண்டு கோலாய் இருந்த பதிவு), அபிராமி பட்டர் (அன்னை மீனாக்ஷியின் புகழ் பாட என்னை ஊக்கப்படுத்திய பதிவு), ‘மழை’ பிரதீப் (பதிவுகளை பற்றிய என்னுடைய ஒரு நேரான பார்வை மாற்றிய பதிவு), ஞானவெட்டியான் அவர்களின் ஞானக்குறள், ஞானக்கும்மி, (என்னை சித்தர் பாடல்களை பற்றி படிக்க தூண்டிய பதிவுகள்), படிக்க ஆரம்பித்தேன். படித்து வந்த நட்களில் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி குமரன் அவருடைய மதுரை-1 பதிவில் கண்ட “கோபுரதரிசனம் கோடிபுண்ணியம்” என்ற வாசகம் என் எண்ணத்தை கிளரியது “கோபுர தரிசனமே கோடி புண்ணியமென்றால் அக்கோயிலின் உட்புறத்தை ஒரு தொடராக சொன்னால்?” என்ற என் சிந்தனையும் அங்கயர்கண்ணியின் அருளுடனும் கடந்த பிரவரி மாதம் 20ஆம் தேதி ஆரம்பித்த பயணம், இதோ மேலும் 7 விதமான வலைபூக்களை ஆரம்பித்து தங்களின் பேராதரவுடன் கடந்த 98 நாட்களில் 150 பதிவுகளை இட்டு தொடர்கிறேன்.

என்னை மேலும் ஊக்கப்படுத்திய விஷயங்களை பற்றி எண்ணி பார்த்த போது,
முதலாவதாக, என் பதிவுகளுக்கு தவறாது வருகைதரும் திரு. என்னார். (இவருடைய பதிவுகளை தற்சமயம் படித்து சோழர்களின் வரலாற்றை அறிந்து கொண்டேன் அதே போல் பாண்டியர் வரலாற்றை தொகுக்க தருணம் பார்த்து காத்திருக்கிறேன்!)

நம் அனைவராலும் தி.ரா.ச. என்று அன்போடு அழைக்கப்படும் திரு, சந்திரசேகரன், மேலும் தொடர்ந்து வருகைதரும் ஸ்ரீ அன்னையின் பக்தரான திரு நடேசன்,

“கவலற்க யாமுள்ளோம்” என்று ஊக்கமளித்த ஐயா ஞானவெட்டியான்,

“தமிழ்மணத்தில் கற்றுக்கொடுக்க பலர் உள்ளனர்” என்ற அண்ணன் குமரன்

எப்போதும் அன்புடனும், ஆசிகளுடனும், பின்னூட்டமிடும் “டீச்சர்” என்று அனைவராலும் அன்புடன் அழக்கப்படும் அம்மா துளசி கோபால்,

தமிழ்மணத்திலும், முத்தமிழ் குழுமத்திலும் முத்திரை பதித்து வரும் திரு. செல்வன், கீதாம்மா,

மேலும் ‘மகரந்தம்’ திரு. ராகவன், திரு தருமி, திரு +இராமர், ‘தூறல்கள்’ திரு கார்த்திக், திரு.SK, திரு. மனு, திரு. நன்மனம், ‘மழை’ ஷ்ரேயா மேடம், பாஸ்டன் பாலா, காயத்ரி மேடம், மேலும் வந்து பின்னூட்டமிடாமல் வருகை எண்ணிக்கையை உயர காரணமான பலருக்கும் நன்றி.

நன்றி நன்றி நன்றி

மேலும் முதல்முதலாக வெரும் 22 பதிவுகளை இட்டிருந்த எம் பதிவையும் தம் தினசரியில் இட்ட தினமலருக்கும், முதலிலேயே எம் மீனாட்சி அம்மன் கோவில் பட பதிவை கண்டு ஊக்கமளித்த மரியாதைக்குரிய ஐயா திரு. கருமுத்து கண்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னங்க ரொம்ப சீரியஸா போச்சா. ஒரு டைம்லி ஜோக்!

150 என்ற எண்ணை பற்றி என்னுடைய மருகன் (அக்கா மகன்) கடந்த வியாழனன்று என்னிடம் கேட்ட ஒரு கேள்வி,

மருகன்: மாமா தமிழ்ல ஒரு கணக்கு பதில் சொல்லுவீங்களா? (வீட்டில் தாய்மொழி சௌராஷ்ட்ரா பேசுவோம்)
நான்: என்ன கேக்கபோற, 4ம்+3ம்மா? இல்ல 3ம்+4ம்மா? கேள் பார்ப்போம்.
மரு: அய்யோ! மாமா அதில்ல, நூறுரூபாய்க்கு பஞ்சு வாங்கி, நூத்தம்பது ரூபாய்க்கு வித்தா லாபமா நஷ்டமா? சொல்லுங்க பார்ப்போம்.
நான்:பூ! ரொம்ப ஈஸி, லாபம் ரூ. ஐம்பது.
மரு: இல்ல! நல்லா யோசிச்சி சொல்லுங்க.
நான்: இதுல யோசிக்க என்ன இருக்கு! அவ்வளவு தான்.
மரு: நூறுரூபாய்க்கு பஞ்சு வாங்கி, நூத்து அம்பது ரூபாய்க்கு வித்தா நஷ்டம் தானே? நூக்ற கூலி வேற. என்றானே பார்க்கனும்.
நான்: டாய்! என்றபடி துரத்தினேன். அதை பார்த்த வீடே சிரித்தது.

இந்த காலத்து பசங்களை எடை போடவே முடியல.

8 comments:

குமரன் (Kumaran) said...

150வது பதிவிற்கு வாழ்த்துகள் சிவமுருகன். தொடர்ந்து இதே வேகத்தில் பதிவுகளை இட்டுவாருங்கள். :-)

//பல பதிவர்களின் பதிவுகளான// இந்தப் பகுதி புரியவில்லையே?

//தி.ரா.ச. என்று அன்போடு அழைக்கப்படும் திரு, ராமச்சந்திரன்.// தி.ரா.ச. அவர்களின் பெயர் சந்திரசேகரன்.

//நூறுரூபாய்க்கு பஞ்சு வாங்கி, நூத்து அம்பது ரூபாய்க்கு வித்தா நஷ்டம் // நம் காலத்தில் சனி,ஞாயிறு திங்க லீவு என்று சொல்லி விளையாடியது மறந்துவிட்டதா சிவமுருகன்? :-)

சிவமுருகன் said...

குமரன் அண்ணா மிக்க நன்றி.

//பல பதிவர்களின் பதிவுகளான// இந்தப் பகுதி புரியவில்லையே?//

பிற பதிவர்கள் என்று சொல்ல மனம் வரவில்லை எனவே உங்களை போன்ற பல் பதிவர்களின் பதிவுகள்!

//தி.ரா.ச. என்று அன்போடு அழைக்கப்படும் திரு, ராமச்சந்திரன்.// தி.ரா.ச. அவர்களின் பெயர் சந்திரசேகரன். //

ஆம் சந்திரசேகரன் ராமசாமி என்று இருக்கும் தவறாகிவிட்டது, சுட்டியமைக்கு நன்றி.

//நூறுரூபாய்க்கு பஞ்சு வாங்கி, நூத்து அம்பது ரூபாய்க்கு வித்தா நஷ்டம் // நம் காலத்தில் சனி,ஞாயிறு திங்க லீவு என்று சொல்லி விளையாடியது மறந்துவிட்டதா சிவமுருகன்? :-)//

அதெல்லாம் மறக்குமா? ஆனால் அது எனக்கு பத்தாம் வகுப்பில் தான் தெரிய வந்தது. நம் தியாகராஜர் நன்முறை மேல்நிலை பள்ளியில் இப்படி சொல்ல மாட்டர்.

Unknown said...

Congrajulations Siva:)

U gotta a really smart nephew:)

தி. ரா. ச.(T.R.C.) said...

150து பதிவுக்ளும் மிக குறுகியகாலத்தில் புணையப்பட்டது மிக சிரமமான காரியம்தான்.ஆன்மீகத்த்லைவர் திரு. குமரன் 200ஐ நோக்கி விரைவாக முன்னேறுகிறார்.இதில் எண்ணிக்கையைவிட சொல்லவந்தவிஷயமும் சொல்லியமுறையிலும் இருவரும் தனித்தன்மையுடன் விளங்குகிறீர்கள்.இருவருக்கும் பல் ஒற்றுமைகள் இருகிறது. எனவே இருவரும் சேர்ந்து இணைபதிப்பு செய்தால் நன்றாக இருக்கும். 200ல் இணைந்து விடலாம்.அன்பன்.திருபத்தூர். ரமாசுவமி. சந்திரசேகரன்(தி,ரா.ச)

சிவமுருகன் said...

//Congrajulations Siva:)

U gotta a really smart nephew:) //

Thank you for your comment.

You are right Dev he is a smart boy.

சிவமுருகன் said...

//150து பதிவுக்ளும் மிக குறுகியகாலத்தில் புணையப்பட்டது மிக சிரமமான காரியம்தான்.//

ஊக்கமளிக்க உங்களை போன்றோர் இருக்க சிரமம் எதுவுமில்லை

//ஆன்மீகத்த்லைவர் திரு. குமரன் 200ஐ நோக்கி விரைவாக முன்னேறுகிறார். இதில் எண்ணிக்கையைவிட சொல்லவந்தவிஷயமும் சொல்லியமுறையிலும் இருவரும் தனித்தன்மையுடன் விளங்குகிறீர்கள்.//

அவர் என்னுடைய பதிவுலக வழிகாட்டி.

//இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருகிறது. எனவே இருவரும் சேர்ந்து இணைபதிப்பு செய்தால் நன்றாக இருக்கும். 200ல் இணைந்து விடலாம்.//

கலந்தாலோசிக்க வேண்டிய விஷயம்.

மணியன் said...

வாழ்த்துக்கள் !! மேன்மேலும் தொடருங்கள்!!

சிவமுருகன் said...

மிக்க நன்றி மணியன் சார்,

நட்சத்திர வாரத்திற்க்கு பிறகு கொஞ்சம் பொரடிக்குமே? (பலரும் சொல்லியதை கேட்டு தான் அறிந்தேன்)

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?