Tuesday, May 16, 2006

135: சித்திரை திருவிழா பதினேழாவது நாள்

இன்று(16-05-2006) மூன்று மாவடியிலிருந்து கள்ளழகர் கோலத்தில் அழகர் மலைக்கு திரும்பினார்.

பல்லகில் கிளம்பி, பரிமேல் வந்து வைகை ஆற்றில் இறங்கி, மன்டூக மகரிஷிக்கு மோக்ஷமளித்து, தசாவதாரம் காட்டி, பல்லக்கில் திரும்பும் அழகா, இத்திருவிழா படங்களை கண்டவர்கள், நின்னடி தொழுது மோக்ஷம் பெற்ற மக்களின் பலனருள உன்னை வேண்டுகிறேன்

.

சித்திரை திருவிழாமுடிவடைந்தது.

சுபமஸ்து.

9 comments:

ENNAR said...

நன்றி நன்றி சிவா எங்களுக்காகவும் வேண்டுதலுக்கு!

தி. ரா. ச.(T.R.C.) said...

சதாசிவபிரும்மேந்திரரைப்பற்றி ஒரு குறிப்பிடு. அவர் ஆற்றங்கரையில் விளையாடும் சிறுவர்களை பார்த்துகேட்பாராம் கங்கையில் குளிக்கவேண்டுமா என்று. சரி என்றால் அவர்களை கண்ணை மூடச்சொல்லிவிட்டு கங்கையில் குளிப்பாட்டி திரும்ப புதுக்கோட்டைக்கே கொண்டுவந்து விடுவாராம். சிவமுருகன் அதுபோல தாங்களும் எங்களையெல்லம் மதுரைக்கூட்டிச்சென்று சித்திரை திருவிழாவை காண்பித்து விட்டீர்கள். நன்றி. தி.ரா.ச

Jeevish Glastine said...

Anbu nanbarae,
Azhagaga Chithirai thiruvizhaa nigazhlvugalai dhinanthorum thoguthu vazhangiyatharkku manamaarndha nandri.

I am working in hyderabad,, native of madurai. Alagarai neryl paartha magizhlchi. thank u very much.

மணியன் said...

சித்திரை திருவிழாவினை சிறப்பாக பதித்த சிவமுருகனுக்கு வாழ்த்துக்கள் !!நன்றிகள்!!

சிவமுருகன் said...

என்னார் ஐயா,
எப்போதும் எல்லோருக்காவும் வேண்டுவதே என்னுடைய வழக்கம். அதை தான் இங்கேயும் செய்தேன்.
நன்றி.

சிவமுருகன் said...

அன்புள்ள தி.ரா.ச.,
நானும் மதுரை செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன் ஆனால் அது முடியவில்லை.

ஆனால் நம் அனைவரையும் அந்த மீனாக்ஷி சுந்தரேஸ்வரும், அழகரும் மனதால் சித்திரை திருவிழாவிற்க்கே கூட்டி செல்ல வைத்துவிட்டார்கள்.

இறைவனுக்கு தெரியும் யாரை எப்போது எங்கு வைக்க வேண்டும் என்று.

சிவமுருகன் said...

அன்புள்ள ஜீவிஷ்,
தொடர்ந்து வருகை தந்தமைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

அன்புள்ள மணியன்,
தொடர்ந்து வருகை தந்து என்னை உற்சாக படுத்தியமைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

சிவமுருகன் said...

வாங்க சிவம்.

என்னையும் தில்லியில் சிவம் என்று தான் அழைப்பார்கள்.

உங்களை பதிவகத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.