Friday, May 12, 2006

134: சித்திரை திருவிழா பதினாறாவது நாள்

நேற்று(14-05-2006) இரவு தல்லாகுளம் வந்த அழகர் பக்தர்களுக்கு பூப்பல்லாகில் அருகாட்சி அளித்தார்.

11 comments:

palaniappan said...

மதுரை மகோற்சவத்தை மனங்கொள்ள வண்ண வண்ண படங்களாகத் தந்த தங்களின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் மிக்க நன்றி
ஒரே இலட்சியமாக எல்லா நிகழ்வுகளுக்கும் சென்று புகைப்படங்களாக்கிய தங்களின் சேவைக்குப் பாராட்டுகள்
வைகையில் ஏதோ செயற்கைத் தடாகம் வைத்ததாகக் கேள்வி
அவ்வகையில் ஏதேனும் தங்களிடம் படங்கள் இருக்குமோ-
தொடருங்கள்
டில்லியில் இருக்கும் தாங்கள் மதுரையில் இதற்காக தங்கியிருந்தது போன்ற பல விசயங்களை எண்ணிப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது

சிவமுருகன் said...

வாங்க manidal,
பாராட்டியமைக்கும், வருகைக்கும் நன்றி.

நீங்கள் முதல் நாள் படத்தை (கொடியேற்றத்தை) பார்க்கவில்லை என்று எண்ணுகிறேன்.

//வைகையில் ஏதோ செயற்கைத் தடாகம் வைத்ததாகக் கேள்வி//

ஆம் மன்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தரும் சமயம் செயற்க்கை முறையில் ஒரு தாமரை தாடாகத்தை செய்து அதில் ஒரு தவளை விடுவர். அத்தவளை நீரிலிருந்துவெளியே ஓடி வரும், பிறகு அங்கே மன்டுக மகரிஷியின் சிலையை வைத்து மாலை சூட்டுவர். ஒருவேளை இதை தான் சொல்கிறீர்களோ.

பிரதீப் said...

அடடா...
பூப்பல்லாக்கு என்னைப் பழைய காலத்துக்கே கொண்டு போகுதே... தல்லாகுளத்துல இருக்குற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்குப் பின்னாடி இருந்து அழகர் வரதுக்குள்ளாற சின்னப் பய புள்ளைகள் எல்லாம் தவிச்சுப் போயிரும்... ஏன்னா பெரியவுக நண்டு சிண்டுகளைக் கவனிக்காம அழகரின் பேரழகைப் பக்திப் பரவசத்தோட பாத்துக்கிருப்பாக.

ஒண்ணு ரெண்டு பூ விழுகாதா அதைக் கையாலத் தொட்டுற மாட்டோமான்னு துடிப்பாக... அழகர் கெளம்பிப் போன அடுத்த நாக்காலைல தல்லாகுளம் பொட்டலே வெறிச்சுனு போயிரும். நாங்க எல்லாம் போயி அந்த ராட்டினம் சுத்துன இடம், போளி வித்த இடம், ஜில்லுனு ஜிகர்தண்டா குடிச்ச இடம்னு தடம் மட்டும் பாத்துட்டு வருவோம்.

சிவா! வருசா வருசம் மறக்காமப் போட்டுருங்கய்யா..

மணியன் said...

அழகர் திரும்ப ஆரம்பித்துவிட்டாரா ?
நாளும் படங்கலை வெளியிட்டு திருவிழா சென்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டீர்கள்.

சிவமுருகன் said...

பிரதீப்,
அடுத்த வருடம் இதே போல் நிறைய படங்களையும், புதிய செய்திகளுடன் போடவேண்டும் என்று எண்ணியுள்ளேன், ஐயனின் திருவுள்ளம் என்னவோ.

சிவமுருகன் said...

ஆமாம் மணியன் இன்று(16-05-2005) இரவு கள்ளந்திரியில் கோழி-சன்டை நாளை அதிகாலையில் மலைக்கு திரும்புவார்.

சிவமுருகன் said...

வாங்க பார்வை,
ஈழ-கோவில்களை பற்றி சொன்னதற்க்கும், வருகைக்கும் மிக்க நன்றி.

ENNAR said...

மன்டூக மகரிஷி யார் அதைப் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்
படம் நன்றாக உள்ளது சிவா

சிவமுருகன் said...

என்னார் சார்,
அடுத்த பதிவுலேயே எழுதுகிறேன்.
நன்றி.