Friday, May 12, 2006

133: சித்திரை திருவிழா பதினைந்தாவது நாள்


ராமராயர் மண்டபத்தில் அழகர் நிகழ்த்திய தசாவதாரக் காட்சி.

(முத்தங்கி சேவை, மச்சாவதாரம், கூர்மாவதார, வாமனாவதாரம், ராமவதாரம், கிருஷ்ணாவதாரம், மோஹினி அவதாரம்.)

மேலும் படங்களும் செய்திகளும் இங்கே தினமலரில்.

9 comments:

Unknown said...

மோகினி அவதாரத்துக்கு சிலை இருப்பதை நான் இன்றுதான் கேள்விப்படுகிறேன் சிவமுருகன்

மணியன் said...

நன்றி சிவமுருகன்.

பிரதீப் said...

ஆகா கண்கொள்ளாக் காட்சி.
அழகரே அழகர்... அதிலும் அவர் பல்வேறு அவதாரக் காட்சிகளில் தோன்றும்போது பேரழகர்.

அழகர் கோயிலில் கீழே இருக்கும் மூலவர் பிரம்மாண்டமாக இருந்தாலும் அவரிடம் ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங். ஆனால் ஊர்வலம் வரும்போதே அனைத்து இன மக்களையும் தன்னோடு கூட்டி வரும் அழகரைப் பார்த்தாலே பரவசம் - ஐயா இது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

சிவமுருகன் said...

நன்றி மணியன் சார்.

சிவமுருகன் said...

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி கணேஷ்.

பல முறை வந்தாலும் முதல் முறை பின்னூட்டம் இட்டுள்ளீர்.

நாளையும் வாருங்கள் அழகர் நாளை திரும்புகிறார்.

சிவமுருகன் said...

இது அலங்காரம் செல்வன் சார்.

மோகினிக்கு சிலைகளும் உள்ளன. தசாவதார கோவில் என்று ஒன்றுள்ளது அதில் மோகினிக்கு தனியாக சிலை உள்ளது.

அதே போல் பல வைஷ்னவ கோவிலில் தசாவதாங்களில் மோகினி தவிர அனைத்திற்க்கும் சிலைகளுன்டு. மதுரையில் தெற்க்கு கிருஷ்னன் கோவிலில் மோகினி-கல்கி அவதாரங்களை இனைந்த நிலையில் காணலாம்.

சிவமுருகன் said...

பிரதீப்,

//ஊர்வலம் வரும்போதே அனைத்து இன மக்களையும் தன்னோடு கூட்டி வரும் //

இப்படி எல்லா மக்களையும் இணைய செய்தது திருமலை மன்னர் தான் என்றால் அது மிகையாகது.
எல்லோருக்கும் சில பணிகளை கொடுத்தார். பிராமணர் புரோகிதம் செய்ய, க்ஷதிரியர்கள் தேரிழுக்க, வைசியர்கள் நீர்மோர் வழங்க, சூத்திரர்கள் மதுரையில் புழுதி பறக்காமலிருக்கவும், மக்களை குளிர்ச்சி படுத்தவும் நீர்தெளிக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்தவர், சில இனமக்களை மண்டகபடி மூலம் வரவேற்க்க-வழியனுப்ப வேண்டும் என்றும் அவர்களை கட்டளை தாரர்களாக்கினார். அப்படி பெற்ற பெருமை தான் நம் சௌராஷ்டிரர்கள் செய்யும் எதிர்சேவையும், மூன்று மாவடி வழியனுப்பதல் சேவையும்.

குமரன் (Kumaran) said...

தசாவதாரக் காட்சியைத் தந்ததற்கு நன்றி சிவமுருகன். பல முறை அதிகாலையில் சென்று மோகினி அலங்காரக் காட்சியைக் காணும் நல்வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

சிவமுருகன் said...

//பல முறை அதிகாலையில் சென்று மோகினி அலங்காரக் காட்சியைக் காணும் நல்வாய்ப்பு கிட்டியிருக்கிறது.//

குமரன் அண்ணா நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்
நான் ஒரே ஒருமுறை தான் கண்டுள்ளேன்.