Friday, May 12, 2006

131: சித்திரை திருவிழா பதிமூண்றாவது நாள்

சூடிகொடுத்த சுடர்கொடியான ஆண்டாளின் மாலை பெற்று ஆற்றில் இறங்கிய கள்ளழகர். அதற்க்கு முன்னதாக ஆண்டாள் இருதினங்களுக்கு முன்னர் அம்மாலையுடன் காட்சியளித்தார்.






கள்ளழகர் இன்று ஆயிரக்கனக்கான பக்தர்கள் வெள்ளத்தில் நடுவே ஆற்றில் இறங்கிய போது, பலர் தண்ணீர் பீச்சியடித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

8 comments:

மணியன் said...

நன்றி சிவபாலன். இன்று இரவு முழுவதும் வண்டியூரில் உற்சவம் தான்.உற்சாகம்தான்.

ENNAR said...

தன்னவளிடம் மலை பெற்று தங்கையைக் காணச் செல்கிறாரா?
நல்ல படங்கள் அருமை சிவா தொடரட்டும் உங்கள் பணி

தி. ரா. ச.(T.R.C.) said...

காணவேண்டாமோ இரு கண்ணிருக்கும்போதே கள்ளழகர் சேவை. காண்பித்ததற்கு. நன்றி. சிவமுருகன். தி ரா. ச

வல்லிசிம்ஹன் said...

சிவ முருகன், எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.தங்க குதிரை அழகா,
பச்சை பட்டு அழகா,
ஆண்டாள் அன்பு மாலை அழகா,
ஜொலிக்கும் பக்தி அழகா,
அதை நீங்கள் எங்களுக்கு
கொடுத்த வண்ணம் அழகா!!
மதுரை மக்களைக் கண்டது அழகு.
வாழ்த்துக்கள்

சிவமுருகன் said...

ஆமாம் மணியன் சார்,

உற்சாக உற்சவம் என்றே சொல்லலாம்.

நன்றி.

சிவமுருகன் said...

என்னார் ஐயா,

அழகர் தங்கையை காணவேண்டி வரவில்லை, எதிர் சேவையிலேயே அண்ணனும், தங்கையும் கண்டு விடுகிறார்கள். பிறகே ஆற்றில் இறங்குகிறார்.

நன்றி என்னார் ஐயா.

சிவமுருகன் said...

நன்றி தி.ரா.ச.

உங்களின் உடல் நலமுன்னேற்றத்திற்க்கு கடவுளை வேண்டினேன். தற்போது நீங்கள் நல்ந்தானே?

சிவமுருகன் said...

வல்லி,

மொத்தத்தில் சித்திரை திருவிழா, அழகோ அழகு, கொள்ளை அழகு என்று சொல்லலாமல்லாவா?

நன்றி.