Tuesday, May 09, 2006

124: சித்திரை திருவிழா பத்தாவது நாள்




இதோ அனைவரும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய காட்சி.
இன்று மாலை அம்மன் பூப்பல்லாக்கிலும், அய்யனும் பிரியாவிடையும் யானை வாகனத்தில் மாசிவீதியில் வலம் வந்தருள்வர்.

13 comments:

மணியன் said...

மீனாட்சி கல்யாணமே, வைபோகமே ! இன்று மதுரை தாய்மார்கள் கல்யாணத்திற்கு செல்ல முடியாவிட்டால் கூட தங்கள் இல்லங்களில் தாலி மாற்றிக் கொள்வார்கள்.மதுரை மல்லிகைகளால் அலங்கரிக்கப் பட்ட முத்துப் பல்லக்கும் காண கண் கோடி வேண்டும். நினைவுகலை கிளறியதற்கு நன்றி சிவமுருகன்.

சிவமுருகன் said...

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும், நன்றி மணியன்

பிரதீப் said...

ஆகா ஆகா...
பத்து நாக்கூத்தையும் அப்படியே போட்டுட்டீகளேப்பு... மீனாச்சி கலியாணம் காணக் கண்கொள்ளாக் காச்சி! இந்தியாவுலயே இருந்துக்கிட்டுப் போக வாக்கலை... என்னைக்கு ஆத்தாவே என்னைக் கூப்பிடுவாளோ, அன்னைக்கு மருதைக்குப் போயிப் பாத்துக்கிருவேன்....

அருமைய்யா... புண்ணியம் உங்களுக்கு!!!

சிவமுருகன் said...

பிரதீப்,

//பத்து நாக்கூத்தையும் அப்படியே போட்டுட்டீகளேப்பு... மீனாச்சி கலியாணம் காணக் கண்கொள்ளாக் காச்சி!//

இன்னும் அஞ்சு நாக்கூத்தையும் போடுவேன் தொடர்ந்து வந்து தரிசிக்கவும்.


//இந்தியாவுலயே இருந்துக்கிட்டுப் போக வாக்கலை...என்னைக்கு ஆத்தாவே என்னைக் கூப்பிடுவாளோ, அன்னைக்கு மருதைக்குப் போயிப் பாத்துக்கிருவேன்//

இங்கேயும் அதே கதை தான்.

//அருமைய்யா... புண்ணியம் உங்களுக்கு!!! //

புண்ணியம் நம் எல்லோருக்கும் தான்.

நன்றி.

குமரன் (Kumaran) said...

அம்மனையும் சுவாமியையும் திருக்கல்யாணத்
திருக்கோலத்தில் காண்பித்தமைக்கு மிக்க நன்றி சிவமுருகன்.

வல்லிசிம்ஹன் said...

சிவ முருகன்,மதுரையை விட்டு வந்தாலும் நீங்காத மல்லி வாசம் போல,
மீனாட்சி அம்மாவோட திருமணத்தைக் கண்ணெதிரே கொண்டு வண்து விட்டீர்கள். நன்றி சொன்னால் மட்டும் போதாது. வாழ்த்துக்கள். மனு

நாமக்கல் சிபி said...

மதுரைக்குச் செல்ல முடியா விட்டாலும் அன்னை மீனாட்சியை சுந்தரேஸ்வரருடன் மணக்கோலத்தில் கண்டு ஆணந்தமுற உதவிய சிவமுருகன் அவர்களுக்கு நன்றி.

சிவமுருகன் said...

நன்றி குமரன் அண்ணா.

சிவமுருகன் said...

இது முதல் பத்து நாட்களின் திருவிழாபடங்கள் தாம். இன்னும் 5 நாள் திருவிழா உள்ளது. தொடர்ந்து வந்து தரிசிக்கவும். அட்டவணை முதல் நாள் பதிவில் தந்துள்ளேன்.

சிவமுருகன் said...

நன்றி மனு.

சிவமுருகன் said...

சிபி சார்,வாங்க வாங்க,

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

G.Ragavan said...

இந்தப் படங்களை நீங்களே நேராகச் சென்று எடுத்தீர்களா? நேராகப் பார்க்கவும் அதைப் படமாகப் பதிக்கவும் இறையருள் உங்களை வாழ்த்தியிருக்கிறது.

சிவமுருகன் said...

ராகவன் சார்.
படங்கள் அனைத்தும் இணைய தொகுப்பு. சில புதிய படங்களும் உள்ளன.

நன்றி.