Tuesday, May 02, 2006

112: சித்திரை திருவிழா இரண்டாவது நாள்


நேற்று(01-05-2006) அம்மையும் அப்பனும் அன்னம் பூத வாகனத்தில் வலம் வந்தனர்.
(இன்று காமதேனுவும், இராவண-கைலாச பர்வதம் வாகனத்தில் வலம் வந்தருள்வர்)

2 comments:

ENNAR said...

// இராவண-கைலாச பர்வதம் வாகனத்தில் வலம் வந்தருள்வர்)//
கொஞ்சம் விளக்குங்கள்

சிவமுருகன் said...

இராவணன் தன் இருபது கைகளால் இசை வாத்தியங்களை வாசித்து இறைவனை தன் பால் ஈர்க்க எண்ணினான். பற்றற்றான் பாதத்தை பற்றுவதை விட்டு, அவரையே தன் இலங்கையில் ஆவாஹனம் செய்ய எண்ணி கைலாசமலையோடு இறைவனையும் இடத்தை எடுக்க நினைத்த போது, ஈசன் தன் இடக்கால் கட்டை விரலால் கைலாசத்தை அழுத்த வேந்தன் மலையின் அடியில் அகப்பட்டான். அகப்பட்டவன், அப்படியே ஈசன் மீது 'சந்திர கலாதரனே' என்ற பாடலை பாடி தன் தவறு மண்ணிக்கும் படி வேண்ட, கருணையே உருவான மஹேசனும் அவனுக்கு காட்சியளித்து அவன் பாடிய சந்திரகலா என்ற ஆயுதத்தை அளித்து அபயமளித்தார்.