Tuesday, May 02, 2006

106: சித்திரை திருவிழா முதல் நாள்


கடந்த ஞாயிறு (30-04-2006) கொடியேற்றத்துடன் கோலாகலமாக சித்திரை திருவிழா ஆரம்பமானது.

இன்று (01.05.2006) அம்மையும் அப்பனும் வலம் வர இருப்பது அன்னம்-பூத வாகனத்தில்.

அனைவருக்கும் வணக்கம்,

என்னடா இவன் தீடீர்னு வணக்கம் எல்லாம் போடுகிறான் என்று என்ன வேண்டாம். எல்லாம் தேர்தல் சமயத்தின் பிரதிபலிப்பு. இப்போது வணக்கமிட்டது வாக்குறுதி அளிக்கவே.

அடுத்தசில தினங்களுக்கு எம் பதிவில் நிறைய விஷயமிருக்காது. அன்னையை தரிசிக்க வலையில் சுற்றி வருவேன். நீங்களும் அங்கயர்கண்ணியின் திருவீதி உலாவை கண்டு பேராணந்த்ததில் திளைக்கவும்.

இப்படி எல்லாம் நான் தட்டி பதிவேற்ற இருந்த சமயத்தில் ஈ-பேப்பரில் (கடந்த 30 ஏப்ரல், மதுரை பதிப்பு, முதல் பக்கம்) செய்தியை கண்டு இதை எல்லோர்க்கும் தெரிவிக்க வேண்டுமென்று என் பணியை தொடர்கிறேன்.

என்கோப்பிலிருக்கும் சில படங்களை இதில் ஒரு தொடராக தருகிறேன்.



நாள் தேதி விபரம்
முதல் நாள் 30/04/2006 கொடியேற்றம்
இரண்டாவது நாள் 1/05/2006 அன்னம், பூத வாகனம்
மூன்றாவது நாள் 2/05/2006 காமதேனு, கைலாசம்
நான்கவது நாள் 3/05/2006 பல்லாக்கில் பகற்காய் மண்டபத்தில் மண்டகபடி
ஐந்தாவது நாள் 4/05/2006 குதிரை வாகனம்
ஆறாவது நாள் 5/05/2006 ரிஷப (காளை) வாகனம்
ஏழாவது நாள் 6/05/2006 யாளி, நந்தி வாகனம்
எட்டாவது நாள் 7/05/2006 பட்டாபிஷேகம்
ஒன்பதாவது நாள் 8/05/2006 இந்திர விமானத்தில் திக்விஜயம்
பத்தாவது நாள் 9/05/2006 திருமணம்,திருமணம்,திருமணம்,புஷ்ப பல்லக்கு, யானை வாகனம்
11வது நாள் 10/05/2006 தேரோட்டம்,இந்திர விமானத்தில் பவனி
12வது நாள் 11/05/2006 அழகர் புறப்பாடு
12வது நாள் 11/05/2006 எதிர் சேவை
13வது நாள் 13/05/2006 அழகர் ஆற்றில் இருங்குதல்
14வது நாள் 14/05/2006 சேஷ வாகனத்திலும், கருட வாகனத்திலும் காட்சி
14வது நாள் 14/05/2006 மான்டூக மகரிஷிக்கு மோட்சம்,

15வது நாள் 15/05/2006 தசாவதாரக் காட்சி
16வது நாள் 15/05/2006 புஷ்ப்ப பல்லாக்கு
17வது நாள் 16/05/2006 மூன்று மாவடியிலிருந்து மலைக்கு திரும்புதல்
18வது நாள் 17/05/2006 அதிகாலை கோவிலை அடைதல்

3 comments:

ENNAR said...

வைகையில் தண்ணீர் வருகிறதா சித்திரா பெளர்னமிக்கு நான் வரட்டுமா?
நீங்கள் தில்லியில் நான் மட்டும் மருதையிலா!!!

சிவமுருகன் said...

என்னார் ஐயா,
பேஷா சித்திரை திருவிழாவிற்க்கு போய்வரவும், என்னுடைய அண்ணன் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்கிறார் நீங்களும் சென்று பாருங்களேன்.

சிவமுருகன் said...

இவ்வருடம், இன்று(09/04/2008)கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா ஆரம்பமாகிறது.