Tuesday, March 01, 2011

ஸௌராஷ்ட்ர பாஷா காலாஸாலா - ௨0௧௧ - ஸௌராஷ்டிர மொழிப் பட்டறை - 2011


அனைவருக்கும் வணக்கம்,

ஸௌராஷ்ட்ர மொழிபற்றியும், சௌராஷ்ட்ரர்களை பற்றியும், நானும், பலரும் பலமுறை எழுதியிருக்கிறோம்! எனவே மீண்டும் அதை இங்கே லிங்காக தந்துள்ளேன்!

வேதாகால மொழிகள் புராதன மொழிஅந்தஸ்த்தில் இருந்து வருகிறன. அத்தகைய பெருமைமிகு மொழிகளாக தமிழ், சமஸ்கிருதம், உருது, என படியல் நீள்கின்றது. மேலும் பல மொழிகள் பேச்சு வழக்குகளில் இருந்து வந்தாலும், தன்னுடைய ஆற்றலும், தனித்திறனும் தன்னகத்தே கொண்டுள்ளது, அத்தகைய மொழிகளில் ஸௌராஷ்ட்ர மொழியும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஸௌராஷ்ட்ர மொழிக்கும் இலக்கண, ஸாஹித்ய பெருமைகள் நிரம்பியுள்ளன. அத்தகைய சாஹித்யங்கள் இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க, தரணியில் முதல் ஸௌராஷ்ட்ர இணைய இதழமான "விஸ்வ ஸௌராஷ்ட்ரம்" நடத்தும், இப்பட்டறை ஒரு ஸௌராஷ்ட்ரனாகவும், ஸௌராஷ்ட்ர மொழி ஆர்வலனாகவும், தாய்மொழி பற்று மிக்கவனாகவும், வெற்றி பெற வாழ்த்துக்களை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இப்பெறு காரியத்தில், என்னையும் இணைக்கும் முகமாக இப்பதிவை பதிக்கும் படி கேட்டுக் கொண்ட "விஸ்வ ஸௌராஷ்ட்ர" இதழ் நிறுவனர் நண்பர் சுரேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி.

யாம் பெற்ற இன்பம் பெறுவக இவ்வையகம் என்பர், என்னால் பெறமுடியாத இவ்வின்பமும் பெறுக இவ்வையகம்!

மேலதிக தகவல்களுக்கு இங்கே,

3 comments:

மார்கண்டேயன் said...

மிக்க நன்றி,

தங்களின் இந்த உதவி மூலம்,

ஸௌராஷ்ட்ர மொழி பற்றிய ஒரு சில விவரங்களாவது பலரை சென்றடைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி,

என்றும் நட்புடன்,
மார்கண்டேயன்.

pathykv said...

There is much activity in the language front.
Sourashtri lipi teaching class
19th SOULE TRUST class will be held at Emaneswaram.
You are invited.
For further details contact Dr. Dhananjayan (09360487065)

K.V.Pathy

pathykv said...

Even after several days, there is no news of the proceedings.
K.V.Pathy