Monday, April 30, 2007

சித்திரை திருவிழா:

சித்திரை திருவிழா

கடந்த வருடம் மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழாவை தினந்தோறும் பதிவில் பதித்து வந்தேன். மிக கடினமான அலுவல் காரணமாக என்னால் இவ்வருடம் தொகுக்க முடியாமல் போனது.

ஒவ்வொரு நாளும் அம்மையும் அப்பனும் பல பல வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தனர். ஆறாம் நாள் காலையில் பிக்ஷாடனார் கோலத்தில் வலம் வந்து தன் திருமணத்திற்க்கு நிதி சேர்த்த வைபவமும். நேற்று காலை திருமணமும், இரவு புஷ்ப்ப பல்லாக்கும், இன்று காலை தேர்திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது.


துல்லியமான படங்கள் தினமலரில், சுட்டி இதோ சித்திரை திருவிழா:

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆகா...
நானும் இந்தப் பக்கம் எட்டி எட்டிப் பாத்துவிட்டுப் போனேன்....
இப்பவாச்சும் வந்தீங்களா?

அன்னைக்கு (சென்ற ஆண்டு) போட்ட பதிவு என்றாலும், அதுவும்
அன்னைக்கு (மீனாட்சி) போட்ட பதிவு தானே!
அதையும் காண்போம்...தினமலரும் காண்போம்!

//பிக்ஷாடனார் கோலத்தில் வலம் வந்து தன் திருமணத்திற்க்கு நிதி சேர்த்த வைபவமும்//
பெருமாள் மாதிரி கடன் வாங்காத வரை சந்தோஷம் தான் :-)

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை அடியேனும் இட முயல்கிறேன், சிவா!

சிவமுருகன் said...

//இப்பவாச்சும் வந்தீங்களா?//

வருகைக்கு நன்றி இரவி,

வேலை வேலை முடிய மாட்டேன் என்று ஒரே அடம். என்ன பன்றது.

தினமலர் மட்டும் இல்லாட்டி பைத்தியமே பிடித்திருக்கும்.

//பெருமாள் மாதிரி கடன் வாங்காத வரை சந்தோஷம் தான் :-)//

அது சரிதான். கலியுகம் முடியும் வரைல வட்டி கட்டி இருந்திருக்கனும்.

//மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை அடியேனும் இட முயல்கிறேன், சிவா!//
ஆவலுடன் எதிர் நோக்கி... :-)