Tuesday, April 17, 2007

அஃறிணை அழகுகளும் மறந்து விட்ட படிப்பினைகளும்

முதல் முதலில் ஒரு பதிவரின் குரலை கேட்டது என்றால் அது நம்ம கண்ணபிரான் இரவிசங்கர் தான். அப்பேற்பட்டவர், பதிவு பதிக்க அழைக்கிறார் அதுவும் அழகு பற்றிய தொடராக.

யாராவது பதிவு பதிக்க கூப்பிட்டா சட்டுன்னு சரின்னு சொல்லாம இப்படி பதிக்கவா? அப்படி பதிக்கவா? ன்னு கருத்து கணிப்பும், செல்லாத ஓட்டு போடக்கூடாதுன்னு திஸ்கி வேற. கடைசியா சரியான மாதிரி நான் மாட்ட இதோ ஒரு பதிவு மாட்டிகிச்சு.

அஃறிணை அழகுகளும் மறந்து விட்ட படிப்பினைகளும்.

ஆவினங்கள்
தன் கன்றோடு தன் எஜமானன் குழந்தைகளையும் காக்கும் ஆவினங்கள் அழகு.
மனித(ம்)ன் மறந்தது: பிரதியுபகாரம் காணாமல் செய்யும் நன்றி.

ஆலமர விதை
சிவப்பாய் - சிறியதாய் பிறந்த ஆலமர பழத்தினுள்ளே இருக்கும் ஆலவிதை அழகு
மனித(ம்)ன் மறந்தது: சிறிதாய் பிறப்பது குற்றமல்ல, சிறிதாய் மரிப்பது.

ஆலமர விழுது
ஏன்றோ வளர ஆரம்பித்து ஏன்றோ தரையை தொட ஊஞ்சலாடும் ஆல விழுது அழகு
மனித(ம்)ன் மறந்தது: பொருமையோடு வளர்ச்சியும் இருக்க வேண்டியதன் அவசியம்

தலையாட்டி பொம்மை
சிரிக்க வைத்து கவனத்தை ஈர்க்கும் தலையாட்டி பொம்மை அழகு
மனித(ம்)ன் மறந்தது:எல்லாவற்றையும் ஏற்க்கும் மனதும், சமநோக்கையும்

மெழுவர்த்தி
தன்னையே கரைத்து வேலையை செய்யும் மெழுவர்த்தி அழகு.
மனித(ம்)ன் மறந்தது:இருளை துடைக்க ஒண்டியாய் போராடும் மனப்பாண்மை

மரப்பெட்டி
தன்னுள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து தேவைப்படும் போது தரும் மரப்பெட்டி அழகு
மனித(ம்)ன் மறந்தது: தேவையில் தரும் சேவை.
நான் அழைப்பது : ஒன்னு இல்ல ரெண்டு பிரதீப். ("மழை" பிரதீப்பும், "காற்றில் பறக்கும் காகிதம்" பிரதீப்பும்).

13 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிவா

அழைப்பை அன்புடன் ஏற்றது மட்டுமன்றி மிக அழகாக விளையாடி இருக்கீங்க!

பொதுவா "அஃறிணை தானே" என்று பலருக்கும் ஒரு அலட்சியம் இருக்கும்.
ஆனா அந்த அஃறிணைகள், உயர்திணைகளுக்குச் சொல்லும் பாடம் பலப்பல!
அதை அழகா சிந்தித்து, பதிவில் அருமையா சொல்லியிருக்கீங்க!
வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிவா,

உங்க பதிவைப் பார்த்ததும் சிந்தனைகள் பலப்பல தோன்றுகின்றன.

நமது சமயத்திலும் பண்பாட்டிலும், அஃறிணை என்று ஒதுக்காது, அதற்கும் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் இடம் கொடுத்துள்ளதை எண்ணிப் பார்க்கிறேன்.

ஆவினம் = கோபூசை
பல ஆலயங்களில் இறைவனே இதன் முன்னர் தான் முதலில் விழிக்கிறான்.
அப்புறம் தான் உயர்திணைகள் முகத்தில் விழிக்கிறான் :-)

ஆலமரம் = ஆலமரப் பிரதட்சணம்
சுற்றி வரும் போது நமக்கே மலைப்பாய் இருக்கும், இது எப்போது செடியில் இருந்து இவ்வளவு பெரிய மரமானதோ என்று!

மெழுவர்த்தி = மாதா கோவில்களில் வெளிச்சம் இருந்தாலும் இது இல்லாமல் வேண்டுதலா?

அஃறிணையும் ஒரு வகையில் உயர்திணையே! அதற்கு வலு சேர்த்துள்ளது உங்கள் அழகான பதிவு.

துளசி கோபால் said...

சூப்பர் பதிவு.

ச்சின்னதா இருந்தாலும் சிறப்பா இருக்கு,நம்ம ஆல விதை போல!

சிவமுருகன் said...

KRS,
இந்த பதிவுக்கு காரணியே நீங்க தான்.

அழுவாச்சியா இல்ல எழுச்சியான்னு சொல்லவில்லையே?

நன்றி.

இலவசக்கொத்தனார் said...

வித்தியாசமான அழகுகள். சிந்தனையைத் தூண்டும் விதமாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

சிவமுருகன் said...

அம்மா,

சின்னதா இருக்க நான் பட்ட பாடு இருக்கே...

ரொம்ப நன்றி.

சிவமுருகன் said...

வாங்க கோத்ஸ் (இப்படி தான் எல்லாரும் கூப்பிடுராங்கோ),

தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அழுவாச்சியா இல்ல எழுச்சியான்னு சொல்லவில்லையே?//

அப்பவே சொல்லிட்டேனே சிவா....
சரி சரி, நான் கேட்ட மாதிரியே எழுச்சி தான் கொடுத்தீங்க! சூப்பர் :-)

சிவமுருகன் said...

நான் எழுச்சின்னு எழுதினத எல்லாரும் சிந்தனைன்னு படிக்கிறாங்களோன்னு ஒரு சின்ன ஐயம் அதான் சரிபார்த்துக்கொண்டேன்.

நன்றி.

பிரதீப் said...

சிவா,
ஒரு வழியாத் தட்டுத் தடுமாறி ஏதோ என்னால் ஆன அளவு எழுதிட்டேங்க...

http://pradeepkt.blogspot.com/2007/04/blog-post_20.html

படிச்சுப் பார்த்துச் சொல்லுங்க.

சிவமுருகன் said...

நன்றி பிரதீப்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப வித்தியாசமா அதே சமயத்தில சிந்தனையைத்தூண்டும்விதமா
எழுதி இருக்கீங்க...நல்லாருக்கு.

சிவமுருகன் said...

இதோட இரண்டாம் பாகம் விரைவில் வரப்போகுதுங்கோ (கொஞ்ச நெறையவே
சொ(கொ)ல்லப்போகிறென்)