Wednesday, May 02, 2007

வாராரு வாராரு அழகர் வாராரு ...

பச்சை பட்டு உடுத்தி, கள்ளழகர் கோலத்தில் இன்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்கிய அழகர்.


யாம் பெற்ற இன்பம் உங்களுக்கும்.

படம் : நன்றி தினமலர்.

11 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பச்சைப் பட்டா...
ஜமாயுங்க அழகரே!

ஆற்றில் மட்டும் இறங்கி விட்டுப் போனால் விட்டு விடுவோமா?
ஒழுங்கா, எங்க மனசிலும் வந்து இறங்கி விடுங்க!
சொல்லிட்டோம் ஆமாம்! :-))

நன்றி சிவா, உங்க பேரைச் சொல்லி அழகரை மிரட்டியாச்சு :-))

Unknown said...

சிவா

பச்சைப் பட்டின் பலன் என்ன என்றும் சொல்லி விடுங்கள்

அன்புடன்
ச.திருமலை

Tulsi said...

You made my day..

Thanks & wish you all the best.

Happy Chithraa pournami.

சிவமுருகன் said...

அடடா அதுக்குள்ள 3 பின்னூட்டமா?

அழகருக்கு இருக்கும் சிறப்பே சிறப்பு.

KRS,

//உங்க பேரைச் சொல்லி அழகரை மிரட்டியாச்சு :-))//

அப்போ புண்ணியம் எனக்கா உங்களுக்கா? :-) அதையும் சொல்லிடுங்க...

சிவமுருகன் said...

திருமலை சார்,

//பச்சைப் பட்டின் பலன் என்ன என்றும் சொல்லி விடுங்கள்//

பச்சை பட்டிற்க்கு விளக்கம் அந்த வண்ணத்திலேயே உள்ளது. மழை சரியாகவும், விளைச்சல் அமோகமாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை.

சிவமுருகன் said...

அம்மா,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

உங்களுக்கும் அனைத்து பதிவருக்கும், சித்ரா பவுர்ணமி வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணி உந்து வைகை வடபால்
திருமால் வந்து சேர்விடம் மக்கள் கடலே

பச்சை வண்ணன் பவளக்கனிவாய்ப்பெருமான்
இச்சையுடன் இசைந்தவரைக் காக்கும் அழகன்
பச்சை வண்ணப் பட்டுடுத்தித் பரியில் ஏறி
இச்சகத்தோர் வாழ்ந்திடவே வைகை சேர்ந்தான்

சிவமுருகன் said...

இப்பாடல் எங்கோ படித்த ஞாபகம்!

ஓ ! ஏகாதேசி பதிவில் கண்ணபாட்டிலா.

திருமலை அவர்கள் கேட்ட கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்லிவிட்டீர்கள்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

முதல் இரண்டரை அடிகளை ஆழ்வார் பாசுரங்களில் படித்திருப்பீர்கள். பின்னர் இருக்கும் அடிகளை தன்னைத் தானே அடியேன் மூலம் பாடிக்கொண்டான் அழகர் மலை அழகன் சற்று முன்னர். இனி மேல் தான் இதனைக் கண்ணன் பாட்டில் இடவேண்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்போ புண்ணியம் எனக்கா உங்களுக்கா? :-) அதையும் சொல்லிடுங்க...//

அழகரு ஒங்க ஊர்ஸ் ஆச்சேப்பா!

மிரட்டியவரை விட
மிரட்டத் தூண்டியவருக்குத் தான் அதிக தண்டனை.
அதனால் புண்ணியம் உங்களுக்கே சிவா! எடுத்துக் கொள்ளுங்கள்...:-)))

நீங்களா ஏதாச்சும் பாத்து, இந்தப் பக்தி செய்யா அடியேனுக்கும், மனமிரங்கிக் கொடுங்கள் :-)

Information said...

மிக்க நன்று.