Tuesday, June 06, 2006

161: ஆறு மணமே ஆறு...


ஆறு மணமே ஆறு.

இன்று இந்நூறாண்டின் ஆறாம் வருடம்,
இவ்வருடத்தின் ஆறாம் மாதம்,
இம்மாதத்தின் ஆறாம் நாள்,
இந்நாளில் மாலை ஆறாம் மணி,
இம்மணியில் ஆறாம் நிமிடம்,
இந்நிமிடத்தின் ஆறாம் வினாடி.
(இப்படி ஆறும் சேர்ந்த ஒரு சமயத்தில் இப்பதிவு)

இதுக்குமேல இருக்குற ஆறு(6) பத்தி சொல்லிகிட்டே போகலாம். ஆனா அதுவல்ல நான் சொல்ல வருவது, இதை போன்றதொரு நடப்புகள், நிகழ்வுகள் மிகக்அரிதாக வரும். கடந்த ஆண்டில் மே மாதம் இதே போல் வந்தது அதில் மேலும் ஒரு சிறப்பு இருந்தது அதை நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்.

16 comments:

குமரன் (Kumaran) said...

சிவகுமரன் ஆறுமுகனின் தரிசனமும் ஆனது. மிக்க நன்றி.

துளசி கோபால் said...

ஆறு மனமே ஆறு
இது ஆண்டவன் கட்டளை ஆறு.

நல்லாதான் இருக்கு.

நாமக்கல் சிபி said...

அதாவது 1 மணி ரெண்டு நிமிடம், 3 வினாடி, 4ம் தேதி, 5ம் மாதம் 6ம் வருடம்!

இதுதானே மே மாதத்தில் வந்த சிறப்பு!

நாமக்கல் சிபி said...

ஆறு பற்றிய நல்ல (விதமான) பதிவு!

சிவமுருகன் said...

அண்ணா,

என் கேள்விக்கென்ன பதில்?

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

அம்மா,

என் கேள்விக்கென்ன பதில்?

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

சிபி சார்,

கொஞ்சம் பொறுங்க சொல்கிறேன்.

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

Unknown said...

அருமையான முருகன் திருக்கோலத்தை காண தந்தமைக்கு நன்றி சிவமுருகன்

சிவமுருகன் said...

ஆறுதலை அளிக்கும் ஆறுதலையனை தரிசித்தமைக்கும், பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி.

துளசி கோபால் said...

நம்ம சிபி சொன்னதுதானே?

சிவமுருகன் said...

அம்மா,
நீங்களும் கொஞ்சம் பொறுங்க இன்று மாலை(இந்திய நேரப்படி) சொல்கிறேன்.

சிவமுருகன் said...

முடிவு அறிவிப்பு.

கடந்த ஆண்டில் 05-05-05 என்ற அமைப்பில் வந்தது, அதே சமயத்தில் வாரத்தின் ஐந்தாவது நாளாகவும் வந்தது +சிறப்பு.

தி. ரா. ச.(T.R.C.) said...

06/06/06 அன்றுகூட நீங்கள் சொன்னதோடு வாரத்தில் ஆறாவது நாளாக வந்தது. மற்றொரு சிறப்பு உங்களுக்குதான் தெரியுமே. தி ரா ச

G.Ragavan said...

ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்

சிவமுருகன் said...

அன்புள்ள தி ரா ச,

//06/06/06 அன்றுகூட நீங்கள் சொன்னதோடு வாரத்தில் ஆறாவது நாளாக வந்தது. மற்றொரு சிறப்பு உங்களுக்குதான் தெரியுமே. //

இல்லையே அது வாரத்தின் மூன்றாவது நாளாக வந்தது. (புதன்கிழமை).

சிவமுருகன் said...

அன்புள்ள இராகவன்,

ஆறுதலை அளித்து அஞ்சுதலை போக்கும், ஆறுதலையனை தரிசித்தமைக்கும், பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி.