Thursday, June 01, 2006

156: கணித்திருவிளையாடல்.

இது வரை நான் நகைசுவைபதிவை பதித்தில்லை முதல் முறையாக ஒரு நகைச்சுவை பதிவு தொடர்.
கணித்திருவிழையாடல்.
(சிரிப்பதற்க்கு மட்டும்)

காட்சி : 1
இடம்: மக்கள் கூடும் சந்தை

முரசு அறிவிப்பவன் யானை மீதிருந்து முரசு அறிவிக்கிறான்...

டும்... டும்... டும்...

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!!!!!!!

நமது பாண்டிய மன்னருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்ககூடிய C program கொண்டு வரும் ப்ரோகிராமருக்கு 1000 அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்படும்

டும்... டும்... டும்...
தருமி கூட்டத்தை விலக்கி கொண்டு முன் வருகிறான்
தருமி: (முரசு அறிவிப்பவனை பார்த்து) எவ்ளோ? 1000 அமெரிக்க டாலரா?
முரசு அறிவிப்பவன் : ஆமாம்.... ஆயிரம் அமெரிக்க டாலர்கள்
தருமி ஆவலை கட்டுபடுத்த முடியாமல், தனக்கு தானே பேச ஆரம்பிக்கிறான் ஆய்யோ ஒன்னா ரெண்டா ஆயிரம் டாலராச்சே, ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நான் என்ன பண்ணுவேன்.இப்போன்னு பார்த்து program எழுத வரலை ... அப்பா சொக்கா!!!! சிவன் தருமியின் முன் தோன்றுகிறார். அவரை பார்த்தால் system programmer போல் இருக்கிறார்.
சிவன்:புரோகிரமரே...
தருமி: யாரது?
சிவன்: அழைத்தது நான் தான்.
தருமி: அப்படியா? ஏன் அழைச்சீங்க?
சிவன்:மன்னரின் அய்யப்பாட்டை நீக்கும் உனக்கு கிடைத்தால் பரிசு அத்தனையும் உனக்கே கிடைத்துவிடுமல்லவா?
தருமி: ஆமாம், ஆமாம்
சிவன்: நான் அந்த ப்ரோகிராமை தருகிறேன்
தருமி: யாரு யாரு ... நீ
சிவன்: ஆம்
தருமி: அத கொண்டு போய் என் ப்ரோகிராம்னு சொல்லவா. எதோ Y2K BUG எல்லாம் solve மன்னிகிட்டு இருக்கேன், ப்ரோகிராம்ன்னு ஒத்துகிட்டு இருக்காங்க, அதையும் கெடுக்கலாமுன்னு பாக்கிறியா?
சிவன்: பரவாயில்லை எடுத்துச் செல்.
தருமி: அப்ப திருடலாம்ன்னு சொல்றியா?
சிவன்: ஹா ஹா ஹா ஹா
தருமி: தெய்வீக சிரிப்பையா உங்களுக்கு,
சிவன்: என் திறமைமீது சந்தேகமிருந்தால், நீ வேண்டுமானால் என்னை பரிசோதித்து பாரேன்... உனக்கு திறமை இருந்தால்
தருமி: தருமிக்கு கோபம் வருகிறது. யாரு... ஏங் எங்கிட்டேவா, எங்கிட்டேவா, மோத பாக்கிறியா, நான் ஆளு பார்க்க தான் சுமாரா இருப்பேன். ஆனா என் ப்ரோகிறாமை பற்றி உனக்கு தெரியாது... தயாரா.... இரு....
சிவன்: அப்படியே. கேள்விகளை நீகேட்கிறாயா நான் கேட்கட்டுமா?
தருமி: (நடுக்கத்துடன்) ஆ.. நானே கேட்கிறேன். எனக்கு கேட்க தான் தெரியும்...
தருமி: பிரிக்க முடியாதது என்னவோ
சிவன்: body shopping-ம், கமிஷனும்
தருமி: சேர்ந்தே இருப்பது?
சிவன்: விண்டோசும் BUGம்
தருமி: சொல்லகூடாதது?
சிவன்: client இடம் உண்மை
தருமி: சொல்லகூடியது?
சிவன்: seminarல் பொய்
தருமி: codeக்கு அழகு?
சிவன்: comment-உடனிருப்பது.
தருமி: comment எனப்படுவது?
சிவன்: புரியாதிருப்பது
தருமி: OS-க்கு?
சிவன்: UNIX
தருமி: Language-க்கு?
சிவன்: C
தருமி: off shoreக்கு?
சிவன்: நீ.
தருமி: On siteக்கு?
சிவன்: நான்.
தருமி: ஐயா ஆளைவிடு...
தருமி சிவனின் திருவடியில் விழுகிறார்.
தருமி : ஐயா நீர் ப்ரோகிராமர்.
சிவன்: அப்போது நீ.
தருமி: இல்லை நான் ப்ரோகிராமர் இல்லை. எங்கே அந்த ப்ரோகிராமை கொடுங்கள். மன்னர் என்ன கொடுக்கிறாரோ அதை அப்படியே உங்களிடம் கொடுத்து விடுகிறேன். நீர் பார்த்து ஏதாவது செய்யும்.

சிவன் ஒரு floppy disk-ஐ தருகிறார்..

சிவன்: பரிசு அத்தனையும் நீயே வைத்துக்கொள்.
தருமி: 1000 டாலரையா?
சிவன்: ஆம் சென்றுவா!!!
தருமி floppy உடன் புறப்படுகிறான்.. .. ஒருநிமிடம் தயங்கி சிவனை நோக்கி வருகிறான்..........
தருமி: பரிசு கிடைத்தால் நான் வைத்துக்கொள்கிறேன் வேறு ஏதாவது கிடைத்தால்
சிவன்: என்னிடம் வா நான் பார்த்துக் கொள்கிறேன்.
தருமி: எங்கேங்கே வீங்கி இருக்குன்னா?
சிவன்: ஹா... ஹா... ஹா...
தருமி: இதுக்கும் சிரிப்பு தானா
சிவன்: வெற்றி உனக்கே.. போய்வா
தருமி: நான் மறுமுறை எங்கே பார்க்கலாம்
சிவன்: எங்கும் பார்க்கலாம்
தருமி: ஒஹோ body shopper பொல இருக்கு
சிவன்: இந்த ஊரிலேயே பெரிய வீடு
சிவன், கோவிலைகாட்டுகிறார்




காட்சி 2:
இடம் : பாண்டியனின் மென்பொருள் திருச்சபை......

அங்கே நிறைய ப்ரோகிராமர்கள், சிஸ்டம் அனலிஸ்ட்டுகள், மட்யுல் லீடர்கள் எல்லோரும் தத்தமது லாப்டாபில் அமைதியாக உட்கார்ந்துள்ளனர்.
தருமி உள்ளே நுழைந்து குழம்பி போகிறான்.. .. ..
(முதலில் உள்ளவ ப்ரோகிராமரை நோக்கி)
தருமி: மன்னா!!!
அவரோ மன்னனரை நோக்கி கைகாட்டுகிறார், ஆனால் தருமி 2ம்வனை பார்த்து
¾ÕÁ¢: அரசே!!!!
(இப்படியே, இப்படியே, ஒவ்வொரு ப்ரோகிராமரை வணங்கி கடைசியில் அரசனை அடைந்து
தருமி: பார் வேந்தே, என்னை பார் வேந்தே!!! ப்ரோகிராமுடன் வந்திருக்கும் தருமியின் வணக்கம்
பாண்டியன்: எங்கே உமது சோர்ஸ் கோடை கொடும்.
தருமி கொண்டு வந்த ப்லாப்பி டிஸ்கை ஒப்படைக்கிறான். மன்னர் அதை பெற்று கீழே உட்கார்ந்திருக்கும் டேட்டா எந்ட்ரி ஆப்ரேட்டரிடம் தந்து சி ஃபைல் எடிட்டரில் திறக்க செய்கிறார்.

#include
void main()
{
a=13*3;
printf(“%d\n”,a);
}
பாண்டியனுக்கு புல்லரிக்கிறது.
பாண்டியன்: ஆஹா.. அற்புதமான சிண்டாக்ஸ், ஆழமான லாஜிக்... தீர்ந்தது சந்தேகம்.
தருமி: மன்னா பரிசு.
பாண்டியன் யாரங்கே... 1000 அமேரிக்க டாலரை கொண்டு வாருங்கள்......
தருமி: (தனக்கு தானே) மொதல்ல கம்ப்யூடர் கடனை அடைக்கனும்.
பரிசு வருகிறது.
பாண்டியன்: (தம் ஆஸ்தான ப்ரோகிராமர்களை கடைக்கண்ணால் பார்த்தபடி) ஸாப்ட்வேர் சங்கம் தீர்க்க முடியாத என் சந்தேகத்தை தனி ஒரு ப்ரோகிராமராக தீர்த்து வைத்த தருமிக்கு இந்த பரிசை அளிக்கிறேன்.

சபையின் மறுபக்கத்திலிருந்து ஒரு குரல் வருகிறது.

இது நக்கீரன் குரல் அவர் தன் பாண்டியனின் ராஜியத்தில் சீனியர் சிஸ்டம் அனலிஸ்ட்.
நக்கீரருக்கும் தருமிக்கு விவாதம் நடக்கிறது.
நக்கீரர்: மன்னா.. சற்று பொருங்கள் ப்ரோகிராமரே சற்றி இப்படி வருகிறீர்களா?
தருமி: முடியாது. பரிசை வாங்கி கொண்டு பிறகு வருகிறேன். மன்னா டாலரை போடு....
நக்கீரர்: அதில் தான் பிரச்சனை.
தருமி: வந்தேன். (நக்கீரரிடம் போகிறார்) என்னையா பிரச்சனை?
நக்கீரர்: இந்த ப்ரோகிராமை எழுதினது நீர்தானா?
தருமி: நான்... நான்... நானே தான் எழுதினேன். பின்ன என்ன இன்டர்நெட்ல இருந்து டவுன் லோட் பண்ணிட்டா வந்தேன்? என்னுடையது தான் என்னுடையதே தான்.
நக்கீரர்: அப்படி என்றால் ப்ரோகிராமை கம்பயில் செய்துவிட்டு பரிசை பெற்று செல்லலாமே.
தருமி: மன்னருக்கு விளங்கி விட்டது இடையில் நீர் என்ன. மன்னா!!! நான் ரொம்ப கஷ்டப்படுகிறென். இவர் வேறு கம்பயில் பண்ண சொல்கிறார்.
இதற்கிடையில் நக்கீரர் ப்ரோகிராமை கம்பயில் செய்கிறார். தவறு என்று தகவல் பெட்டி வருகிறது. Error - a not defiend
நக்கீரர்: சரியான ஒரு ப்ரோகிராமுக்கு எம் மன்னவர் பரிசளித்தால் அதை கண்டு மகிழும் முதல் மனிதன் நான், அதே சமயம் Ken Thompson-ம் Dennis Richieம் கட்டி காத்த இந்த மென்பொருள் திருச்சபையில் BUG உள்ள ப்ரோகிராமுக்கு பாண்டியன் பரிசளித்தால் அதை கண்டு வருந்தும் முதல் ஆளும் நானே.
தருமி: ஓஹோ! இங்கு எல்லாம் நீர்தானோ! கோட் எழுதி பேயர் வாங்கும் ப்ரோகிராமர்கள் இருக்கிறார்கள், BUG கண்டுபிடித்து பெயர் வாங்கும் ப்ரோகிராமர்களும் இருக்கிறார்கள்.
நக்கீரர்: ஹி..ஹி..
தருமி: சிரிக்காதீர், இதில் நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரியுமென்று எண்ணுகிறேன். ஒன்று மட்டு நிச்சயமைய்யா, உம்மை போல் இருவர், வேண்டாம் நீர் ஒருவரே போதும் இந்த மென்பொருள் துறை உருப்படும், முடிந்தால் மன்னரிடம் சொல்லுங்கள். எனக்கு பரிசு வேண்டாம்.

காட்சி 3:
இடம் : கோவில்
ஆற்றாமையில் புலம்புகிறான்
தருமி: எனக்கு வேனும்! எனக்கு வேனும்! ஆசை... ஆசை...என்னோட மானம் போச்சே.. இனிமே சொந்தமா ப்ரோகிராம் எழுதுனா கூட “ஏம்பா! நீஎழுதுனது தானா?” ன்னு கேட்பார்களே. நான் என்ன பண்ணுவேன்.
அங்கே உள்ள தூணில் தொற்றிக்கொள்கிறான்.
தருமி: யாரோ துரத்தி துரத்தி வந்து அடிக்கிற மாதிரி இருக்குதே.. சொக்கா சொக்கா அவனை நம்பி லாஜிக் போச்சு, இப்போ கத்தி கத்தி குரலும் போக போகுது, இல்ல அவனை கூப்பிட கூடாது கூடாது அவனில்லை நம்பாதே நம்பாதே.
சிவன் அங்கே தோன்றுகிறார்
தருமி: வாய்யா வா,
சிவன்: தருமியே பரிசு கிடைத்ததா?
தருமி: எல்லாம் கிடைச்சது உதை மட்டும் தான் பாக்கி. கொஞ்சம் இருந்திருந்தா அதை வாங்கிட்டு வந்திருப்பேன்.
சிவன்: (கோபத்துடன்) தருமி! நடந்ததை கூறு......
தருமி: பேசும் போது நல்லா பேசு ... ப்ரோகிராம் எழுதும் போது கோட்ட விட்டுரு. சபைல உன் கோடில் பக் இருக்குன்னு சொல்லிட்டாங்க.
சிவன்: என் கோடில் பக்க? எவம் சொன்னது
தருமி: அங்கே ஒருத்தன் இருக்கானே உங்க பாட்டன், சீனியர் சிஸ்டம் அனலிஸ்ட் அவன்தானையா சொன்னா.
சிவன்: வா என்னுடன்

(தருமியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சபைக்கு வருகிறான்...)

காட்சி 4:
இடம்: மென்பொருள் திருச்சபை.
சிவன்: தருமி கொண்டு வந்த கோடில் பக் என்று சொன்னவன் எவன்?
பாண்டியன்:அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்... அவை அடக்கத்துடன் கேட்டால் தக்க பதில் தரப்படும்.
சிவன்: அப்படியானால் மன்னரை விட மற்றவருக்கு மரியாதை அதிகமோ?
பாண்டியன்: இது அரச சபையல்ல மென்பொருள் திருச்சபை. இங்கு அனைவரும் சமம்.
சிவன்: அதனால் தருமி கொண்டு வந்த கோடில் குறை கூறினீரோ?
நக்கீரர்: பிழையான ப்ரோகிராம் என்பதால் பரிசுக்கு அருகதை இல்லை.
சிவன்: ஓ கீரனோ எந்த பக் கண்டீர்?
நக்கீரர்: முதலில் ப்ரோகிராம் எழுதிய நீர் வராமல் கோடை இவரிடம் கொடுத்தனுப்பியதன் காரணம்?
சிவன்: அது நடந்து முடிந்த கதை தொடங்கிய பிரச்சனைக்கு வாரும்....
நக்கீரர்: டிசைனருக்கு முதலில் பொய்யுரை தேவையில்லை என்பது தெரிந்திருக்கும்...
சிவன்: தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது, பிறந்தது, பிறவாது அனைத்தும் யாம் அறிவோம் அது பற்றி உமது விளக்கம் தேவையில்லை..
நக்கீரர்: எல்லம் தெரிந்தவர் என்றால் எழுதும் ப்ரோகிராமில் பக் இருக்காது என்ற அர்த்தமா? அதை யாம் எடுத்துக்கூறக்கூடாதா?
சிவன்: கூறும்... கூறி பாரும் ஹா... ஹா...
பாண்டியன்: ரிவியுவில் சரி செய்ய வரலாம், ஆனால் அது சண்டையா மாறி விடக்கூடாது.
சிவன்: சண்டையும் சச்சரவும் ப்ரோகிராமர்களில் பரம்பரை சொத்து, அதை மாற்ற யாராலும் முடியாது. (நக்கீரரை பார்த்து) எங்கு குற்றம் கண்டீர்? சின்டாக்ஸிலா? லாஜிக்கிலா?
நக்கீரர்: லாஜிக்கில் தவறு இருந்திருந்தாலும் அது கம்பயில் ஆகிவிடும், சின்டாக்ஸில் தான் பக் உள்ளது.
சிவன்: என்ன பக்?
நக்கீரர்: எங்கே, உம் ப்ரோகிராமை கூறும்....
சிவன்: #include
void main()
{
a=13*3;
printf(“%d\n”,a);
}
நக்கீரர்: இதன் பொருள்?
சிவன்: 13ம் 3ம் பெருக்கி a என்ற வேரியபள்லில் வத்து, பின் அதை பதிக்கிறேன்.
நக்கீரர்: இதன் மூலம் தாங்கள் மன்னருக்கு சொல்ல விரும்புவது?
சிவன்: ஹா. ஹா. புரியவில்லையா? int a; என்னும் declaration தேவையில்லை என்பது என்னுடைய முடிவு
நக்கீரர்:ஒருக்காலும் இருக்க முதியாது, முதலில் டிக்ளேர் செய்தால் மட்டுமே ஒரு வேரியபிளை பயன் படுத்த முடியுமே தவிர, டிக்ளேர் பண்ணாமல் வேரியபிளை பயன்படுத்த முடியாது.
சிவன்: C++லும் அப்படி தானோ?
நக்கீரர்:ஆம்
சிவன்: ஜாவாவில்?
நக்கீரர்: ஜாவா என்ன எல்லா ஹைலெவல் லாங்க்வேஜ்லும் அப்படி தான். ஒரு வேரியபிளை டிக்ளேர் செய்த பிறகே பயன்படுத்தமுடியும்.
சிவன்: உமது ப்ராஜெட் மேலாளருக்கும் அப்படி தானோ?
நக்கீரர்: ப்ராஜெட் மேலாளர் என்ன, நான் அன்றாடம் ப்ரவுஸ் செய்யும் kernigamமிற்க்கு இடப்பாகம் அமர்ந்திருக்கும், Ritchie, அவனுக்கும் அதே விதிப்படி தான்.
சிவன்:நிச்சயமாக?
நக்கீரர்: நிச்சயமாக...
சிவன்: உமது மென்பொருள் திறமையின் மீது ஆணையாக?
நக்கீரர்: எனது மென்பொருள் ஆலோசக்த்தின் மீது ஆணையாக
சிவன்: அல்லும் பகலும் வன்பொருளில் வேலை செய்து Y2K பக்கை சீராக்கும் கீரனோ, என் C-ப்ரோகிராமை ஆராய்யத்தக்கவன்.
நக்கீரன்: Y2K solve செய்வது எங்கள் வேலை, நாமும் COBOL-ஐ எழுதுகிறோம், ஆனால் உன்போல் சின்டாக்ஸில் தவறு செய்வதில்லை...
சிவன்: நக்கீரா.. நன்றாக என்னை பார்.. (நெற்றிகண்ணை திறந்து காட்டுகிறார் அங்கே அவருடைய ASNI-Certificate தெரிகிறது) .
நக்கீரன்: நீரே ANSI standard-ம் ஆகுக, வேரியபிளை டிக்ளேர் செய்யாதது குற்றமே, சான்றிதழ் காட்டிய பின்பும் குற்றம் குற்றமே.
சிவன் தமது ப்ரோகிரமால் நக்கீரரது கணினியில் உள்ள வன்தகடை(ஹார்ட் டிஸ்க்) எரிக்கிறார்.
பாண்டியன்: இறைவா... பிழையை பொருத்தருள வேண்டும்... சீனியர் சிஸ்டம் அனலிஸ்ட் நக்கீரனின் வன்தகடை மீட்க வேண்டும்
சிவன் விஸ்வரூபம் எடுக்கிறார்...
சிவன்: பாண்டியமன்னா! நக்கீரனின் வன்தகடு இப்போதே மீட்கப்படும் எம்ப்ரோகிராமால் ஏற்ப்பட்ட வைரஸை நீக்க Aptech-ல் இருந்து மீண்டு வருவான், நான் உங்களின் மென்பொருள் திறமையை சோதிக்கவே இத்திருவிளையாடலை புரிந்தோம். எமது கணிதிருவிளையாடல்களில் ஒன்று.நக்கீரன்: இறைவா!!! UNIXம் நீயே WINDOWS-ம் நீயே C-ம் நீயே, ஜாவாவும் நீயே, வேரியபிளும் நீயே, கான்ஸ்டன்ட்டும் நீயே...

20 comments:

ரவி said...

அருமை. எங்கோ படித்தது போல் உள்ளது. உங்க தளம் ஏதோ கோவிலுக்குள் நுழைந்த்ததுமாதிரி உள்ளது.

மஞ்சூர் ராசா said...

சிவா கலக்கலாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு இடத்தில் பாண்டியன் என்பதற்கு பதில் நக்கீரன் என்று இருக்கவேண்டும்.
//பாண்டியன்:அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்... அவை அடக்கத்துடன் கேட்டால் தக்க பதில் தரப்படும்.//

நகைச்சுவையாகவும் எழுதத்தெரியும் என்று நிரூபித்த உமக்கு அந்த ஆயிரம் டாலர் பரிசை அளிக்குமாறு பாண்டிய மன்னரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஜயராமன் said...

நல்ல கூத்துதான் போங்கள்!

நான் கம்ப்யூட்டர் ஆசாமி இல்லை, இருந்தாலும் ரசித்தேன். நன்றாக இருக்கிறது.

தருமியின் பாட்டெழுதும் படலம் எங்கெங்கெல்லாம் எப்படி எப்படி உருமாறுகிறது.

தங்களுக்கு நகைச்சுவை பதிவு நன்றாகத்தான் வருகிறது.

மேலும் வழங்குங்கள்.

நன்றி

ஏஜண்ட் NJ said...

சரிதான்... சிவன், சரியான உதார் பேர்வழி போல இருக்கே! சபைல வந்து ஆ...ஊ.. ன்னு பிஸ்தா மாதிரி ஊடுகட்டி கலாசிட்டு, நக்கீரன் கொக்கி போட்டோன்ன, டபால்-னு harddisk-க எரிச்சு போடுறாரு!

:-)))

சிவமுருகன், நல்லாருக்கு, continue பண்ணுங்க!

யோசிப்பவர் said...

//ஜாவா என்ன எல்லா ஹைலெவல் லாங்க்வேஜ்லும் அப்படி தான். ஒரு வேரியபிளை டிக்ளேர் செய்த பிறகே பயன்படுத்தமுடியும்.
//

வி.பி.யில் முடியுமே, பேஸிக்கில் கூட முடியும்.

- நக்கீரனுக்கு நக்கீரன்;)

நன்றாயிருக்கிறது;))))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

Have a look: Click here

சிவமுருகன் said...

வாங்க சுமா,

எல்லாம் அவளருள்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

மஞ்சூராரே,

வாங்க வாங்க,

//சிவா கலக்கலாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு இடத்தில் பாண்டியன் என்பதற்கு பதில் நக்கீரன் என்று இருக்கவேண்டும்.
//

நல்ல பாருங்க அங்க பாண்டியன் தான் வரவேண்டும். முதற் கணிச்சங்க தலைவர் அவர் தானே.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

ஜெயராமன் சார்,

வாங்க, வாங்க,

//தங்களுக்கு நகைச்சுவை பதிவு நன்றாகத்தான் வருகிறது.//

இது நான் சற்று எடிட் செய்தது, கதை ஒரு மின்னஞ்சலில் வந்தது.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

யோசிப்பவரே,

வாங்க, வாங்க.

//வி.பி.யில் முடியுமே, பேஸிக்கில் கூட முடியும்.//

V.B. - front end tool லாங்க்வேஜ் அல்ல

//- நக்கீரனுக்கு நக்கீரன்;)//
உண்மை!

//நன்றாயிருக்கிறது;))))//

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

ஏஜென்ட் ஐயா,

//சபைல வந்து ஆ...ஊ.. ன்னு பிஸ்தா மாதிரி ஊடுகட்டி கலாசிட்டு, நக்கீரன் கொக்கி போட்டோன்ன, டபால்-னு harddisk-க எரிச்சு போடுறாரு!//


//:-)))//

நல்ல வேளை சிரிப்பான போட்டு விட்டீர்கள்

//சிவமுருகன், நல்லாருக்கு, continue பண்ணுங்க! //

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

(நிலவு) நன்பரே,

//Have a look: //
பார்த்தேன் நல்லா இருந்தது. கொஞ்சம் நெருடலா இருந்தது. தேடலில் பல தடவை தேடியும் கிடைக்கவில்லை ஆகவே தான் இதை பதித்தேன். இப்போது தான் தெரிய வந்தது தாங்களும் பதித்தாகிவிட்டதென.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

துளசி கோபால் said...

அடடா... சிரிப்பான் போட மறதுட்டேன், சிரிச்சுக்கிட்டே இருந்ததில்
இதோ என் சிரிப்பான்ஸ்:)))))))))))))))

சிவமுருகன் said...

அம்மா,
தலைப்பே சிரிப்பதற்க்கு மட்டும்ன்னு போட்டுள்ளேன்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

நன்மனம் said...

:-))

சிவமுருகன் said...

நன்மனம்,
வருகைக்கும் சிரிப்பானுக்கும் மிக்க நன்றி.

Unknown said...

என்னங்க இந்த கலக்கு கலக்கிருக்கிங்க?சூப்பர் பதிவு.சிரிப்பே நிக்கலை

சிவமுருகன் said...

செல்வன் சார்,

//என்னங்க இந்த கலக்கு கலக்கிருக்கிங்க?சூப்பர் பதிவு.//

இது என் முதல் முயற்சி,
வருகைக்கும் பாராட்டிற்க்கும் நன்றி.

G.Ragavan said...

இப்பத்தான் இந்தப் பதிவப் பாத்தேன் சிவமுருகன். முந்தி எப்பவோ மெயில்ல வந்திருக்குன்னாலும் திரும்பப் படிக்கிறப்போ நல்லாயிருக்கு.

சிவமுருகன் said...

நன்றி ராகவன்.