Tuesday, June 27, 2006

173: ஆறு பதிவு

ஆறு பதிவை பதிக்க என்னை முதலில் அழைத்த மணியன் அவர்களுக்கும், அதை வழிமொழிந்த அண்ணன் குமரன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. பிடித்தது பிடிக்காதது என்றில்லாமல் ஆறில் உள்ள சிலவற்றை பார்க்கலாம்.

1. தேவ சேணையின் அதிபதிக்கு சிரங்கள் - ஆறு

2. மதுரையின் சின்னங்களாகவும், எல்லைகளாகவும் உள்ள சிவன் கோவில்கள் - ஆறு
1. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
2. இம்மையில் நன்மை தருவார் கோவில்
3. பழைய சொக்கநாதர் கோவில்
4. ஏடக நாதர் கோவில்
5. தென்திருவாலய கோவில்
6. முக்தீஸ்வரர் கோவில்

3. உலகில் வரும் பருவங்கள் - ஆறு
1. வஸந்தம்
2. மழை
3. இளவேணில்
4. கோடை
5. குளிர்
6. இலைஉதிர் காலம்

4. பூஜை நடக்கும் காலங்கள் - ஆறு
1. முதல் காலம் - அதிகாலை
2. இரண்டாம் காலம் - காலை
3. மூண்றாம் காலம் - உச்சி காலம்
4. நான்காம் காலம் - மாலை
5. ஐந்தாம் காலம் - இரவு
6. ஆறாம் காலம் - ஜாம காலம்

5. தேவர்களுக்கு பகல் பொழுது - ஆறு மாதங்கள்
1. மார்கழி
2. தை
3. மாசி
4. பங்குனி
5. சித்திரை
6. வைகாசி

6. தேவர்களுக்கு இரவு பொழுது - ஆறு மாதங்கள்
1. ஆனி
2. ஆடி
3. ஆவணி
4. புரட்டாசி
5. ஐப்பசி
6. கார்த்திகை

நான் அழைக்கும் ஆறு பேர்.

1. கதையோ, கவிதையோ, விமர்சனமோ, அனுபவமோ, தன் கடந்த காலமோ, எந்த ஒரு படைப்பானாலும் தன் நகைசுவை ‘மழை’யில் இணைய மக்களை நனைத்து, மகிழ்வித்து மணம்பரப்பி வரும் ‘மழை’ பிரதீப் (E.S.பிரதீப்)
2. தன் கவிதைகளாலும், கதைகளாலும் சிரிக்க, சிந்திக்க வைக்கும் ‘தூரல்கள்’ கார்த்திக் (E.S.கார்த்திக்)
3. தன் ஆன்மீக கேள்வி பதில்களால் ஒரு பெரிய வாசகர் வட்டமுள்ள அன்புள்ள சகோதரி ப்ரியா.
4. அரசியலாக இருந்தாலும், வேறு எந்த தலைப்பாக இருந்தாலும் தன் எழுத்துக்களால் பூத கண்ணாடி போட்டு அலசி சிந்திக்க வைக்கும் ‘வஜ்ரா’ ஷங்கர்.
5. தன் எழுத்துக்களால் ஒரு ரசிகர்கள் கூட்டத்தை இணையத்திலும், முத்தமிழ் குழுமத்திலும் பெற்றுள்ள ‘உலகின் புதிய கடவுள்’ செல்வன்
6. தன் அனுபவங்களை சமயம் கிடைக்கும் போதெல்லாம் (முத்திரை) பதித்து வரும் K.T.பிரதீப்.

14 comments:

சிவமுருகன் said...

இத்துடன் இட்ட ஆறு பதிவுகள்:

மனற்கேணி

ஆறு பதிவு

சித்தர் பாடல்கள் #22

சித்தர் பாடல்கள் #23

சித்தர் பாடல்கள் #24

சித்தர் பாடல்கள் #25

மணியன் said...

நன்றி சிவமுருகன். மிகவும் சுருக்கி விட்டீர்களே !

Karthik Kumar said...

kalakkuringa sivamurugan.

Indha vilayattu konjam kastam than. Irundaulu ennoda baniyla muyarchi senju pakren.

-nandri sivamurugan.

-karthic

சிவமுருகன் said...

யோகன் ஐயா,

காலங்கள் ஆறு என்று தான் சொல்லியுள்ளேன்,

எல்லா காலங்களும் பிடித்துள்ளது.

சிவமுருகன் said...

//நன்றி சிவமுருகன். மிகவும் சுருக்கி விட்டீர்களே ! //

சுருக்கி விட்டேனா?

ஆறு பதிவுகளை இட்டுள்ளேன் மணியன் சார்.

சிவமுருகன் said...

வாங்க கார்த்திக்,
//kalakkuringa sivamurugan.

Indha vilayattu konjam kastam than. Irundaulu ennoda baniyla muyarchi senju pakren.//

இதை விளையாடி பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

கோவி.கண்ணன் said...

ஆறுபதிவு என்று
ஆர்வத்துடன் வந்தேன்
ஆறுதலுக்கு கூட
ஆறு இல்லை
ஆராதனைகள் போட்டு
ஆற்றுப்படைப் (பாக்கி)
ஆக்கிவிட்டீர்கள்

Unknown said...

சிவமுருகன்

அழைப்புக்கு என் மனமார்ந்த நன்றி.ஆனால் ஏற்கனவே 6 பதிவு இட்டுவிட்டேன். உங்கள் ஆறுபதிவில் பக்தி மணம் கமழ்கிறது.படித்து மிக ரசித்தேன்

சிவமுருகன் said...

கோவி சார்,
அதுக்காக ஏழுவரிகளா?

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

செல்வன் சார்,
//அழைப்புக்கு என் மனமார்ந்த நன்றி.ஆனால் ஏற்கனவே 6 பதிவு இட்டுவிட்டேன்.//

இட்டுட்டீங்களா?

//உங்கள் ஆறுபதிவில் பக்தி மணம் கமழ்கிறது.படித்து மிக ரசித்தேன்//

மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றாக இருக்கிறது சிவமுருகன். எப்போதோ படித்துவிட்டேன். இப்போது தான் பின்னூட்டம் இட முடிந்தது.

சிவமுருகன் said...

அண்ணா,
//நன்றாக இருக்கிறது சிவமுருகன். எப்போதோ படித்துவிட்டேன். இப்போது தான் பின்னூட்டம் இட முடிந்தது.//

ஏற்கனவே நினைத்தேன். வருகைக்கும் பின்னூட்டட்த்திற்க்கும் நன்றி.

பிரதீப் said...

sivamurugan,

neengal azhaithum ennaal aaru pathivai pathiya mudiyavillai. nirayya yosithu vitten, ondrum mandayil oda matten engirathu!

சிவமுருகன் said...

என்ன பிரதீப்,

சீக்கிரம் நூறுமுகம் காட்டுதம்மா, அறு முகம் நின்றுன்னு பதிவு இடுவீங்கனு பார்த்தா? (நூறாவது பதிவு அறு பதிவா போடுங்க, சரியா?).