Saturday, June 03, 2006

158: இந்தியா அன்று

இன்று காலை நன்பர் ஒருவரின் மின்னஞ்சல் என்னை வெகுவாக கவர்ந்தது.
அதை இங்கு பதித்துள்ளேன்.

ஒரு இந்திய நாட்டின் இளவரசி தன் தந்தையின் வீரசெயலோடு ஒன்றியிருந்து தாம் வேட்டையாடிய போது, 1920களில். இப்படமும் மேலும் சில படங்களும் "ரோலி புக்ஸ் நிறுவனத்தின்" பதிப்பான "வீர் சங்கவி" மற்றும் "ருத்ரான்ஷு முகர்ஜி" அவர்கள் எழுதிய 'India Then and Now' (இந்தியா அன்றும் இன்றும்), என்ற ஒரு புத்தகத்திலிருந்து. (முறத்தால் புலியை விரட்டிய தமிழச்சி ஞாபகத்தில் வருகிறதா?)

ஆங்கிலேய ஏகதிபத்யம்: இந்தியர்கள் ஒரு ஆங்கிலேயருக்கு சேவகம் செய்கின்றனர்.

இந்தியாவில் ஷேர் ஷா ஸூரி(Sher Shah Suri)யால் உருவாக்கப்பட்ட, கல்கத்தாவிற்க்கும் காபூலுக்கும் இடையே இருந்த முக்கிய சாலை தி கிரான்ட் ட்ரன்க் ரோட் (The Grand Trunk Road), படத்திலிருப்பது அம்பாலாவிலிருந்து தில்லிக்கு செல்லும் வழியில்.


தங்களின் உயர்ந்த வகை நகைகளாலும், உடைவகைகளாலும் புகழ்பெற்ற நாடிய குழுவினர். அரச சபைகளிலும், கோவில்களிலும் ஆடிய நாட்டிய தாரகைகள் 1830களில்.



ஏட்வின் லுதின் மற்றும் ஹெபெர்ட் பேக்கரால் வடிவமைக்க பட்ட தில்லி பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகையின் ஒரு கழுகு பார்வை.

1910ல் மும்பையில் நடைபெற்ற பெண்கள் மாநாடு, பெண்களும் சமூக அக்கரை மற்றும் அரசியல் ஆர்வம் கொண்டாவர் என்பதை விளக்கும் படமாக கருதப்படுகிறது.


வைஷ்ணவ குழு: ஹிந்து சனாதனத்தின் ஒரு குழு. இவர்களின் அடியவர்களை தான் கோஸ்வாமி - மஹராஜ்(Gosvami-maharajahs) என்பர்.இவர்களின் மேற்பார்வை பல கோவில் இருந்தன.


முஹலாய சக்ரவர்த்தி சாஜஹானால் 1650-1658களில் கட்டபட்ட தில்லி ஜாமா மசூதியின் ஒரு கழுகு பார்வை.

இந்தியா - இங்கிலாந்து இடையே பறந்த, தி இம்பீரியல் ஏர்வேஸ்(The Imperial Airways). ஷார்ஜாவில் எரிபொருள் நிரப்பிய போது.

அன்புடன்,

சிவமுருகன்.

8 comments:

சிவமுருகன் said...

வாங்க ராஜா,

கருத்துகளுக்கும், வருகைக்கும் நன்றி.

Radha N said...

ஆவணக்காப்பகத்தில் நுழைந்த உணர்வைத் தந்தது. நன்றி. இதனைப் போலவே இன்னும் சில மிகப்பழமையான சென்னைப்பட்டினத்தின் பலபகுதிகளை காட்டும் படங்கள் மின்னஞ்சல் வழியே உலவி வருகின்றது.

சிவமுருகன் said...

நாகு சார் வாங்க, வாங்க,

உங்களை என்னுடைய பதிவில் பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னு தெரியலை.

கருத்துக்கும், வருகைக்கும் நன்றி

குமரன் (Kumaran) said...

நல்ல படங்கள் சிவமுருகன்.

சிவமுருகன் said...

வருகைக்கு நன்றி அண்ணா.

சிவமுருகன் said...

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி யோகன் ஐயா.

தி. ரா. ச.(T.R.C.) said...

அருமையான பதிவு. நல்ல தேர்வுசெய்யப்பட்ட படங்கள்.பாரதியாரின் புகைப்படம் கிடைக்குமா தி. ரா.ச

சிவமுருகன் said...

//அருமையான பதிவு. //

நன்றி தி.ரா.ச.

//நல்ல தேர்வுசெய்யப்பட்ட படங்கள்.//

மின்னஞ்சல் படங்களே.

//பாரதியாரின் புகைப்படம் கிடைக்குமா//

என்னிடம் சில படங்கள் உள்ளன. பதிக்கிறேன்.