Wednesday, August 27, 2008

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணிமூல உற்சவம் (புட்டுத்திருவிழா)

மதுரை, ஆக.27-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 8-ந் தேதி சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

ஆவணி மூல உற்சவ விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்து மிகப்பெரிய திருவிழா ஆவணிமூல விழாவாகும். குறிப்பாக மதுரையில் சிவபெருமானின் ஆட்சி இந்த மாதத்தில் இருந்து தான் தொடங்குகிறது. இந்த ஆவணி மூல திருவிழா இன்று (27-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் ஆவணி மூல வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

அதன்படி வருகிற ஆகஸ்ட் - 2-ந்தேதி, `கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை` கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டபத்தில் நடைபெறும். 3-ந் தேதி, `நாரைக்கு முக்தி கொடுத்த லீலை` பூக்கடைத்தெருவில் உள்ள முத்துச்செட்டியார் மண்படத்திலும், 4-ந் தேதி `மாணிக்கம் விற்ற லீலை`யும், 5-ந் தேதி, `தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை`யும், 6-ந் தேதி, `உலாவாக்கோட்டை அருளிய லீலை`யும், 7-ந் தேதி `பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை`யும் நடக்கிறது.

பட்டாபிஷேகம்

8-ந் தேதி முக்கிய விழாவான பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 7-33 முதல் 7-57 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த விழாவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து.கண்ணன், சுவாமியிடம் இருந்து செங்கோலை பெற்றுக்கொண்டு அவரின் சார்பில் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் சுற்றி வந்து, மறுபடியும் சுவாமியிடம் செங்கோலை ஒப்படைக்கிறார்.

9-ந் தேதி, `நரியை பரியாக்கிய லீலை`, 10-ந் தேதி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில், `பிட்டுக்கு மண் சுமந்த லீலை`யும் நடக்கிறது. 11-ந் தேதி, `விறகு விற்ற லீலை`யும் நடக்கிறது. 12-ந் தேதி அம்மனும், சுவாமியும் சட்டத்தேரில் ஆவணி மூலவீதியில் எழுந்தருளுகிறார்கள்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ராஜநாயகம், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், அறங்காவலர்கள் ருக்மணி பழனிவேல்ராஜன், ராஜாராம், புகழகிரி, பாலசுப்பிரமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

செய்தி : தினத்தந்தி

அட்டவணை
செப்- 2-ந்தேதி, `கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை` கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டபத்தில் நடைபெறும்.

செப் 3-ந் தேதி, `நாரைக்கு முக்தி கொடுத்த லீலை` பூக்கடைத்தெருவில் உள்ள முத்துச்செட்டியார் மண்படத்திலும்,

செப்- 4-ந் தேதி `மாணிக்கம் விற்ற லீலை`யும்,

செப் - 5-ந் தேதி, `தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை`யும்,

செப் - 6-ந் தேதி, `உலாவாக்கோட்டை அருளிய லீலை`யும்,

செப் - 7-ந் தேதி `பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை`யும் நடக்கிறது.

செப் - 8-ந் தேதி `வளையல் விற்ற லீலை` யும், முக்கிய விழாவான பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 7-33 முதல் 7-57 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த விழாவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து.கண்ணன், சுவாமியிடம் இருந்து செங்கோலை பெற்றுக்கொண்டு அவரின் சார்பில் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் சுற்றி வந்து, மறுபடியும் சுவாமியிடம் செங்கோலை ஒப்படைக்கிறார்.

செப் - 9-ந் தேதி, `நரியை பரியாக்கிய லீலை`, யும்

செப் - 10-ந் தேதி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில், `பிட்டுக்கு மண் சுமந்த லீலை`யும் நடக்கிறது.

செப் - 11-ந் தேதி, `விறகு விற்ற லீலை`யும் நடக்கிறது.

செப் - 12-ந் தேதி அம்மனும், சுவாமியும் சட்டத்தேரில் ஆவணி மூலவீதியில் எழுந்தருளுகிறார்கள்.


Madurai flights, madurai trains, madurai education, madurai hotels, meenakshi amman temple, India, tour, travels

4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அப்போ தினமும் படங்கள் போட போறீங்களா சிவ முருகன்?..(போடுங்களேன் ப்ளீஸ்)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பிட்டுக்கு மண் சுமந்த லீலை`யும் நடக்கிறது//

இதை யாராவது ஒரு நல்லடியார் Youtube-இல் தரவேற்றினால் நன்றாக இருக்கும்! :)

சிவமுருகன் said...

//அப்போ தினமும் படங்கள் போட போறீங்களா சிவ முருகன்?..(போடுங்களேன் ப்ளீஸ்)//

இரண்டாம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது! முடிந்த வரை இடுகிறேன்!

மனற்கேணியில் திருவிளையாடல் புராணம் இதே வரிசையில் ஆரம்பித்துள்ளேன் காண்க!

சிவமுருகன் said...

//இதை யாராவது ஒரு நல்லடியார் Youtube-இல் தரவேற்றினால் நன்றாக இருக்கும்! :)//

கிடைக்கும் என்றே தோணுது. அஷ்ட சப்பரம் உள்ளது! தேர் திருவிழா உள்ளது! இதுவும் இருக்க வேண்டும்.