கதம்பச்சரம்.
“என்னபா! எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்றபடி டீக்கடை அரட்டையை ஆரம்பித்தார் பாய். “உமக்காக தான்வே வெய்ட்டிங்க்” என்ற ஐயர் “ஒரு வாரத்தை எப்படியோ "வருத்ததையே வருக்காம" புதுஸ்ஸா சரம் போட்டு முடிச்சுட்டார் உம்ம பதிவர்” என்று மெதுவாக ஆரம்பிக்க. “ஆமாபா! இன்னும் ரெண்டு நாள் பதிவு எல்லாம் எழுதி முடிச்சுட்டார்பா, தன்னோட பதிவுல எழுதி வச்சிருக்காராம்! நாளைக்கும் இன்னிக்கும் சரியான நேரத்துல பதிச்சுவாராம்பா!”
உடனே சாமி “என்னமோ எப்படி ஆரம்பிக்குறது எப்படி தொடர்ரதுன்னு முழிச்சி கிட்டு இருந்தவரு, இப்போ முடிச்சுடவும் போறாரா? நல்லாருக்கு!” என்று முடிக்க “ஆனா முக்கியமா தன்னோட "ஆல்வேஸ் ரீடர்ஸ்" பலர் வரலைன்னு தன்னோட நெருங்கிய வட்டத்துல சொல்லி வருத்தப்பட்டாராம்!, அவங்களும் "கவலபடாதேள்! அவா எல்லாம் தன்னோட ரீடர்ல படிச்சிக்கிட்டு இருப்பா-னு" தேற்றி இருக்கா ஓய்!” என்று பாய் முடிப்பதற்க்குள்…
“இன்னிக்கி என்ன சரமாம் சொல்லுங்க பாய்!” என்று நிகழ்வுகளுக்கு கொண்டுவந்தார் சாமி, “எல்லாரும் கடைசிநாள்ல தான் கதம்பம் கட்டுவாங்க, ஆனா இவர் இன்னிக்கு போடுறாராம்” என்று பாய் சொல்லிக் கொண்டிருந்த போதே சாமி குறிக்குட்டு “இதுக்கு ஏதாவது தனிப்பட்ட காரணம் உண்டா”-ன்னு கேட்க. “உண்டுபா, ஆனா அதை நாளைக்கு சொல்வார்பா!” என்று நிறுத்தினார் பாய்.
“கண்டிப்பா மொதல்ல சாமி கும்புடுவார் அதான்பா ரெண்டு பேர் சேர்ந்து ஒரு பதிவு போடுறாங்களே அதுல இருந்து ஆரம்பிப்பார்!”. “அது தமிழ் பதிவாவே! இது ஒரு செங்கிருத பதிவு தானேவே” என ஐயர் வம்பிழுக்க காதில் வாங்காத பாய் “அப்பறம் இவர் அபிராமி அந்தாதிக்கு சரணம் வச்சு! கொஞ்சம் வீடு பேறு பொருள் பற்றி சொல்வார்,” என்று முடித்தார் பாய் “இத்தனை விஷயம் படிச்சுருக்காரா பாய்” என்று ஒன்றும் அறியாதவரய் கேட்டார் அண்ணாச்சி. பாய் “இவர் ஒவ்வொரு நாளும் பணம் புழங்கும் விதம் பற்றிய அறிய ஆர்வம் அதிகமாகுதாம்பா,”
“நமது உழைப்பை இன்னொருவருக்கு பலனளிக்கும்படி கொடுத்து அதற்கு பதிலாக அவரது உழைப்பை நமக்கு பலனளிக்கும்படி வாங்கிக் கொள்வதற்கான இடைப் பொருள்தான் பணம்.”
“இப்படி எழுதுவங்கள படிச்சா ஏன் ஆர்வம் வராது ஓய்!” என்று ஐயர் சொல்ல!
“பணத்தை பதுக்கி வச்சு சாப்டது அந்த காலம் பணத்தை வெளியில உலவவிட்டு சம்பதிக்கிறது, சாப்புடறது இந்த காலம்” ன்னு தத்துவம் உதிர்த்தார் நாயர் டீ ஆற்றியபடி.’
’உச் கொட்டிய பெஞ்ச் தன்னுடைய தலைப்பிற்க்கு திரும்பியது’ ஐயர் ஆரம்பித்தார் “போனவருஷம் கொஞ்சநாள் ஹாஸ்டல்ல இருந்தார்ல அதுல “தீ எக்னாமிக்ஸ் டைம்ஸ்” படிக்க ஆரம்பிச்சாராம், எல்லா தமிழ் சைட்ல போய் பங்கு சந்தை பற்றி படிப்பாராம்” .“அது ஏம்பா பொருளாதாரம்ன்னு சொன்னவுடனே பங்குசந்தை வருது” என பாய் கேட்க அண்ணாசி ஆரம்பித்தார் “அதாவது பாய்! ஒருத்தன் ஓரிடதில பணத்த வச்சுகிட்டு என்ன பண்ணாலாம்ன்னு யோசிக்கிறான், இன்னொருத்தன் பணத்துக்கு என்னாட பண்றதுன்னு யோசிக்கிறான். இவனுங்க ரெண்டு பேரையும் இணைக்குறது தான் இந்த பங்கு சந்தை! ரெண்டாவது ஆசாமிக்கு பணம் லாபம் கெடைச்ச அதை முதலீட்டாளர்களான முதலாவது ஆசாமிகளுக்கு பங்கு கொடுப்பதும்!?!?, தலைகீழா நடக்றதும் கண்கூடு” என்று அண்ணாச்சி முடிக்க. “அப்டியா! ரொம்ப நன்றி அண்ணாச்சி! அடுத்தது இவர் தொடுக்க போறது ஒரு ஊரபற்றின பதிவுபா!” “தலை நகர பற்றி தானே அதுவும் அந்த மூத்த பதிவர் எழுதுனது, ரொம்ப சூப்பரான படத்தை எல்லாம் போட்டு பதிச்சாங்களே அதைத் தானே சொல்ற,
என கேட்ட சாமியை ஆமாம் என தலையாட்டி அமோதித்தார்.
“ஒரு சில மாதமாய் அவ்வப்போது படிக்கும் சில செய்திகள் இருக்கும்பா!”
அப்பறம் இவருக்கு ரொம்ப பிடிச்ச செய்தியாம்! அதாவது காதல், இவருக்கும் காதலுக்கும் காததூரமாம்! அவ்ளோ பிடிக்குமாம்! இருந்தாலும் ஒரு சில காதல் பதிவுகளையும் காதல் பற்றிய கவிதைகளையும் படிப்பாராம் ஆனால் பின்னூட்டமிடமாட்டாராம். "என முடித்தார் பாய்.
“பிறகு மறுபடியும் நாளைய சஸ்பென்ஸ் பற்றி ஞாபகப் படுத்திட்டு முடிச்சுக்குவாரு!” அப்பிடிதானே பாய் என்று அண்ணா சொல்ல! ஆமாம் போட்ட படி பாய் எழுந்திருக்க எல்லோரும் கலைந்தனர்.
“இதை படிக்கும், படிக்கவிருக்கும் அனைவருக்கும் சமர்பணம்”
___________________________________________________________________________________
இப்படிக்கு இந்த வார ஆசிரியர்
“வாங்க அண்ணாச்சி” என்று வந்த அண்ணாச்சியை வரவேற்ற ஐயர்! பாய் பார்த்து ஒரு சைகை செய்தார் பாய் ஆரம்பிப்பதற்க்குள் அண்ணாச்சி “என்ன நாயரே! இன்னிக்கு எப்படி கட தொறந்தீங்க! ஓ! நீர் ஆளுங்கட்சிக்கு சப்போர்ட்டா?” என்று நாயரை பதில் சொல்ல விடாமல் பாய் அருகில் போய் இடம்பிடித்தார், அண்ணாச்சி தோள் மீது கைபோட்டபடி பாய் ஆரம்பித்தார் “ஒரு வாரம் போனதே தெரியலையாம்பா! அதுக்குள்ள “இப்படிக்கு இந்த வார ஆசிரியர்” ஆகிறார்பா நம்ம பதிவர்!” “ஆமாம் பாய் என்னமோ 'சஸ்பென்ஸ்' ன்னு சொன்னீங்க அதென்னது” என தன் ஞாபக சக்தியை காட்டினார் அண்ணா. “அத கொஞ்ச நேரத்துல சொல்றேன்பா” என சூடு கிளப்பினார் தன் டீக்ளாசை ஆற்றியவர், பின்னர் தொடர்ந்தார். “இன்னிக்கி தன்னை உருவாக்கிய தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம் சொல்ல போறார்பா!” “அதென்னவே, ஏதோ ஆரம்பிக்கறப்போ வணக்கம் சொல்லுவா! முடிக்கும் போது நன்றி தானேவே சொல்லுவா இவரென்ன வழக்கத்த மாத்துறார்!.” என்று ஐயர் தன் பங்கிற்க்கு சூடாக்கினார். “அதொன்னும் இல்லபா கொஞ்ச நாள் பதிவுபக்கமே வராம இருந்தவர், இப்போ இந்த தொடர்ல எழுதினதுக்கப்பறம் தன்னால இப்படியும் எழுத முடியுதேன்னு நினைச்சாராம்” என்று நிறுத்த, “சரிய்யா ஒத்துக்குறேன் சரத்துக்கு வர்ரீங்களா?” என்று அண்ணா ஆவலாய் கேட்டார்.
முதல் வணக்கம்) “அதாவது வலைக்கு வர்ரதுக்கு முன்னாடி தமிழ் எழுதக்கற்றுத்தந்தது இவரோட இரண்டாம் வகுப்பு ஆசிரியராம் அதுவரைக்கும் தமிழ்ன்னு கூட சரியா எழுதமாட்டாராம்! அப்பறம் மூன்றாவது படிக்கும் போது ஆசிரியர் பவாணிங்கரவங்க நல்ல சுழி வச்சு எழுத சொல்லித் தந்தாங்களாம், அப்பறம் ஆறாம் வகுப்புல வகுப்பாசிரியர் பூங்கோதை மூக்கு உள்ள எழுத்துக்களை தனிவிதத்துல வரும்னு சொல்லி தந்தாங்களாம், கடைசியா பத்தாம் வகுப்பு படிக்கும் போது தனியியல் ஆசிரியர் சுரேஷ் கொஞ்சம் நெளிவு சுளிவுகளை சொல்லித்தந்தாராம், பல தமிழ் செய்திகளை சூத்திரப்படுத்தி அதை எப்படி ஞாபக வைத்துக்கொள்வதுன்னு சொல்லி தருவாராம், இவங்க யாரும் தமிழை தனி பாடமா எடுத்து படிக்காதவங்க. அதே போல பல செய்திகளை கதைகளாக சொல்லி தரும் எட்டாம் வகுப்பு ஆசிரியர் பாக்கியம், அதோட கணக்கையும், ஆங்கிலத்தையும், படிக்கும் நெளிவுகளையும் கற்றுத்தந்த ஒன்பதாம் வகுப்பாசிரியர் இராதா கிருஷ்ணன் அவர்கள்ன்னு இவரோட மொழி வகுப்பு ஆசிரியர் எல்லாருக்கும் மொதல்ல ஒரு வணக்கம்ன்னு சொல்லுவார், கரெக்டா பாய்” என்று சாமி கேட்க! பாய் அமோதித்தார்.
(இரண்டாவது வணக்கம்) “எங்கோ இருந்த இவரை எதையோ படித்து கொண்டிருந்தவனை இங்கே பார் என்று திசை திருப்பிய அந்த ஆன்மீக வின்மீனுக்கும், எப்படி எழுதினா என்ன அதையெல்லாம் நாங்க வந்து படிக்கிறோம்ன்னு சொன்ன, ஞானவெட்டியான், தி.ரா.ச. , என்னார், அப்பறம் தன்னை இப்படி எழுதுங்கன்னு சொன்ன ஜீ.ரா., எப்போதும் ஆசியோட தர்ர வலைபதிவர்களின் டீச்சர் மற்றும் வலையுலகில் நல்லமுதை மட்டுமே பதிக்கும் (மதுரையம்பதி) , தன் சமூகத்தை வேறுஒரு விதகோணத்தில் காணவைக்கும் ’மழை’ பிரதீபுக்கும், எல்லா நகைச்சுவையையும் ஒரு ஆன்மீகத்தோடு இணைக்கும் கே.ஆர்.எஸ். , பல அரிய செய்திகளை சொல்லும் ‘என் எண்ணங்கள்’ கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் , அரசியலையும் மற்ற அனைத்தையும் விமர்சிக்கும் கால்காரி சிவா அண்ணாவுக்கும், ‘வஜ்ரா ’ சங்கருக்கும், என்னாலும் இவ்ளோ பதிவுகள வித்யாசமாய் எழுத முடியும்ன்னு வலைசர குழுவினர், பொறுப்பாசிரியர் சீனா, லிஸ்ட்ல புதுஸ்ஸா சேர்ந்திருக்கும் கைலாஷி, என அனவருக்கும் நன்றியுடன் வணக்கம்ன்னு சொல்லுர்பா” என பாய் முடிக்க! “ஆசையா ஆரம்பித்த வலைபூக்கள் எல்லாம் அப்படியே நிக்குதுன்னு நெனைக்குறாரா என்ன?” ன்னு அண்ணா அரட்டையின் போக்கை சற்று திசை மாற்ற, அதற்க்குள் பொறுமை தாங்காத அண்ணாச்சி “பாய்! மொதல்ல சஸ்பென்ஸ் தாங்கலை சிக்கிரம் சொல்லுங்க” என மற்றவர்களை தன்பக்கம் சேர்த்துக் கொண்டார்.
“அதாவதுபா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி மூத்த பதிவரோட 32வது திருமணநாள் வந்தது! அப்போ இவர் வாழ்த்தை சொன்னதோட ரெண்டு நாளைக்கப்புறம் தன்னோட அம்மாவின் பிறந்தநாள்ன்னு சொன்னார்பா! இப்போ முந்தாநேத்து அந்த மூத்த பதிவரு கல்யாண நாள் பதிவு பதிச்சிருக்காராம், அப்போ நீங்களே தெரிஞ்சிக்கோங்கபா!”. “அதாவது இவரோட அம்மாவுக்கு இன்னிக்கி பொறந்த நாள் அதானே பாய்” என்று அண்ணாச்சி விஷயத்தை உடைக்க, பாய் ஆமோதித்தபடி “அதுவும் அவங்க அம்மா இன்னியோட தமிழ் வருஷத்துல வர்ர எல்லா வருஷத்துலையும் பொறந்த நாள் கொண்டாடிட்டாங்களாம்” என்று விஷயத்தை முடித்தார் “அட அப்போ இது மணிவிழா” என அண்ணா சொல்ல! பாய் தொடர்ந்தார் “இவர் ஆரம்பிச்ச எல்லா பதிவுகளும் கொஞ்சம் நாளைக்கு இப்படியே இருக்கட்டும், வீட்ல ஒரு மடிகணினியும் இணைய இணைப்பும் வாங்கிட்டா எல்லாத்தையும் முடிச்"சுடலாம்"ன்னு நினைக்கிறாராம்”.
“இன்றைய சரத்தை உலகத்தில் தன் சேய்யை சான்றோன் எனக்கேட்க துடிக்கும் அனைத்து தாயுள்ளம் கொண்டவர்களுக்கும் சமர்பணம்ன்னு சொல்லுவார்பா!”. என்றபடி எழ முயர்ச்சித்த பாய்யை அண்ணாச்சி பற்றி இழுத்து நிறுத்தினார், “என்ன பாய் அப்பறம் என்ன சங்கதி” என்று கேட்க, “அதான் முடிட்ச்சிட்டாரேபா, அடுத்த வாரம் இவரோட நட்சதிரக்காரர் தொடருவார்பா” என்று பாய் நிறுத்த ஐயர் தொடர்ந்தார், “முடிஞ்சிருச்சேன்னு கவலைப்படாதேள் நல்ல படியா ஆச்சுதே சந்தோஷபடுங்கோ” என ஐயர் முடித்தார். பெஞ்ச் அமைதியானது.
___________________________________________________________________________________
Saturday, August 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment