Thursday, August 21, 2008

தமிழ்மணத்தின் இந்தவார விண்மீனின் பயோடேட்டா (குமுதம் பாணியில்)


பதிவுலகின் ஆன்மீக தலைமகன்,


பதிவுலக புதியவருக்கு இளநிலை ஆசான்


எனதருமை அண்ணன் தமிழ் மணத்தில் மீண்டும் விண்மீனாம் குமரன்(Kumaran) அவர்களை, கே.ஆர்.எஸ் சும்மா சுத்தி சுத்தி (சுத்திய வச்சு அல்ல) அடிச்சு விளையாடி முடிச்சார்.


சரி என்ன்னோட பங்கிற்க்கு (என்ன பெட்ரோல் பங்கா? டீசல் பங்கான்னு கேட்பவர்களுக்கு? அந்த ஆங்கில பங்க் இல்ல சுத்த தமிழ் பங்கு! எனச் சொல்லி) சரி அவரோட ஒரு சில அந்தரங்களை பொதுவில் வைக்கலாம்ன்னு ஒரு சின்ன ஆசை அதை தான் இங்கே பதிவாய்(வாய்) மடை திறந்துள்ளது. வழி பிறந்துள்ளது.


பெயர்:குமரன் (Kumaran)
வயது:மூன்றாண்டுகள் (வலையில்)
தொழில்:எழுதுவது
உபதொழில்:பொருள் எழுதுவது
நண்பர்கள்:சாமி கும்பிடுபவர்கள் - (கூட்டு வலைப்பூக்கள்)
எதிரிகள்:அப்படியாராவது இருந்தால்… சொல்லுங்கள் (அதுக்காக வீச்சரிவாளோடெல்லாம் வரக்கூடாது!)
பிடித்த வேலை:பதிவது - (தினமும் என்னை(கூடலை) கவனி)
பிடித்த பொருள்:கணினி - (வீட்டு கணினி)
மறப்பது:தமிழ்மணத்தில் விலகல் - (நன்றி வருகிறேன்)
மறக்காதது:பின்னூட்டம் இடுவதும், பழைய பின்னூட்டங்களும்
மறுப்பது:கடவுள் மறுப்பு - (அடியேன் சிறிய...)
பதிவில் நம்புவது:தலைப்பை - (அஷ்ட அட்சரம் ஏற்கும் மனது பஞ்ச அட்சரம் பார்க்காது )
பதிவில் நம்பாதது:பின்னூட்டம்

அடைந்தது: சிகரம் (பொறுமை என்னும் சிகரம்) (நன்றி வாத்தியாரையா)
அடையாதது: குன்று (குன்று கிடைக்காத குமரன்) (நன்றி வாத்தியாரையா)
பிடிச்ச நாடு:இந்தியா, அமெரிக்கா
பிடிக்காத நாடு:இதில் நம் (புலிகேசி) மன்னருக்கு சந்தேகம் தீர்ப்போருக்கு 100 … தரப்படும்
நம்புவது:தமி்ழை - (கூடல்)
நம்பாதது:ஆரியம் கலந்த திராவிடத்தை - (சொல் ஒரு சொல்)
சமிபத்திய சாதனை:தமிழ்மணத்தில் மீண்டும் விண்மீன் (*நட்சத்திரம்*) நீண்டகால சாதனை:பல வலைப்பூக்களை மேய்ப்பது (16)
சமிபத்திய மகிழ்ச்சி:தமிழ் பாட்டு கவிதைகள் தழுவிய கதைகள் (உடுக்கை …, புல்லாகி பூண்டாகி)
நீண்டகால மகிழ்ச்சி:அபிராமி அந்தாதிக்கு பொருள் சொல்லி முடிந்தது (அபிராமி அந்தாதி)

விளம்பரம் : உங்களோடய பயோட்டாவும் தயார் செய்ய அனுகவேண்டிய முகவரி sivamurugan dot neelamegam at gmail dot com.

8 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//நம்பாதது:ஆரியம் கலந்த திராவிடத்தை - (சொல் ஒரு சொல்)//

அப்படின்னா என்ங்க சிவமுருகன்...புரியல்லையே?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Table enna aachi? :)

//தொழில்:எழுதுவது
உபதொழில்:பொருள் எழுதுவது//

அடுத்து எதுக்குப் பொருள் எழுதப் போறீங்க குமரன்? :)

//பதிவில் நம்பாதது:பின்னூட்டம்//

பின்னூட்டக் கோனார் நோட்ஸ் போட்டவரை, இப்படியா அபாண்டமாச் சொல்லுறது? Too bad siva! :(

Subbiah Veerappan said...

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சுவாமி!

அடைந்தது: சிகரம் (பொறுமை என்னும் சிகரம்)
அடையாதது: குன்று (குன்று கிடைக்காத குமரன்)

குமரன் (Kumaran) said...

ரொம்ப நல்லா தான் கவனிச்சிருக்கீங்க சிவமுருகன். :-)

சிவமுருகன் said...

மௌலிஅண்ணா,
////நம்பாதது:ஆரியம் கலந்த திராவிடத்தை - (சொல் ஒரு சொல்)//

அப்படின்னா என்ங்க சிவமுருகன்...புரியல்லையே?//

அப்டீன்னா அப்படி தான் :-).

கோமதி அம்மன்ன்னு கூட சொல்ல மாட்டார் ஆவுடையம்பிகைன்னு தான் சொல்லுவார்ன்னா பாத்துக்கோங்க! (சும்மா ஒரு உதாரணம்).

சிவமுருகன் said...

கே.ஆர்.எஸ்.
//Table enna aachi? :)//

ரொம்ப படுத்தி விட்டது. கடைசி என்னோட பாணியில் தட்டி விட்டேன்.

////தொழில்:எழுதுவது
உபதொழில்:பொருள் எழுதுவது//

அடுத்து எதுக்குப் பொருள் எழுதப் போறீங்க குமரன்? :)//

ஸ்தோதிரமாலா படிப்பதில்லையோ?

//பின்னூட்டக் கோனார் நோட்ஸ் போட்டவரை, இப்படியா அபாண்டமாச் சொல்லுறது? Too bad siva! :(//

அதனால தான் இப்படி சொல்லவேண்டியதா போச்சு!

சிவமுருகன் said...

வாத்தியாரையா,

//இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சுவாமி!

அடைந்தது: சிகரம் (பொறுமை என்னும் சிகரம்)
அடையாதது: குன்று (குன்று கிடைக்காத குமரன்)//

சேர்த்துகொள்கிறேன். மிக்க நன்றி

சிவமுருகன் said...

விண்மீனே,

//ரொம்ப நல்லா தான் கவனிச்சிருக்கீங்க சிவமுருகன். :-)//

ஏதாவது தப்பா இருந்தா சொல்லுங்க மாத்திருவோம்!