Friday, August 08, 2008

சுதந்திர தாகம் - 1

அதென்னபா! கே.ஆர்.எஸ். மட்டும் தான் புதிரா? புனிதாமா?-ன்னு சொல்லி போட்டி நடத்தி பரிசுகள் தருவாரா? நாங்களும் கேள்விகளும் தந்து அதே மாதிரி பரிசுகளும் தருவோம்ல! (ஆத்தா மீனாச்சி! புலிய பாத்து பூனை சூடு போட்ட கதையாயிடக்கூடாது! தாயீ!)

வந்தவர்களுக்கும், வரைருப்பவர்களுக்கும், நின்றவர் ஒரு பரிசு! வென்றவர் கே.ஆர்.எஸ் மட்டுமே (9/10).

வலியான பாரதத்தை உருவாக்க "எழுமின், விழிமின்! கருதிய கருமம் கைகூடும் வரை நில்லாது செல்மின்" என்று முழங்கிய விவேகானந்தரின் கருத்துக்களை இன்று அன்பர்கள் இடையில் பரப்பிவரும் அவர் ஆரம்பித்த ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்தின் பிரதிபிம்பமான ஸ்ரீ இராம கிருஷ்ண விஜயத்தின் ஆகஸ்ட் மாத கணினி இதழ்(E-book).

விடைகள் போல்ட் செய்யப்பட்டுள்ளன்!

1. இவற்றுள் எது நம்முடைய தேசிய கொடியாக இருந்ததில்லை (சரியான விடை : /ஆ/இ/ஈ)
(அ)



(ஆ)
(இ)
(ஈ)


2. இவற்றுள் எந்த மொழி தென்னிந்திய மொழியல்ல (சரியான விடை : அ/ஆ//ஈ)
(அ) கன்னடம்
(இ) மாராத்தி
(ஆ) மலையாளம்
(ஈ) தமிழ்

3. இவர்களுள் ஒருவர் சுதந்திர போராட்ட தியாகியல்ல (ஆந்திராவிலிருந்து) (சரியான விடை : அ/ஆ/இ/)
(அ) துர்காபாய் தேஷ்முக்
(இ) சந்திர ராஜேஷ்வர ராவ்
(ஆ) தங்குதுரி ப்ரசம்
(ஈ) ஓலெடி பார்வதிசம்

4. இவர்களுள் ஒருவர் சுதந்திர போராட்ட தியாகியல்ல (கர்நாடகதிலிருந்து) (சரியான விடை : அ/ஆ//ஈ)
(அ) கங்காதர்ராவ் தேஷ்பாண்டே
(இ) கபா ராகாவேந்திரராயரு
(ஆ) சித்தவானஹள்ளி கிருஷ்ண ஷர்மா
(ஈ) R. S. ஹுக்கேரிகர்

5. இவர்களுள் ஒருவர் சுதந்திர போராட்ட தியாகியல்ல (தமிழ்நாடிலிருந்து) (சரியான விடை : அ/ஆ/இ/)
(அ) N.M.R.சுப்பராமன்
(இ) சென்பகராமன்
(ஆ) வ.உ.சிதம்பரம்
(ஈ) இரங்கராஜன் குமாரமங்கலம்
6. இவர்களுள் ஒருவர் சுதந்திர போராட்ட தியாகியல்ல (கேரளத்திலிருந்து) (சரியான விடை : அ/ஆ/இ/)
(அ) கிருஷ்ணய்யர். V.R.
(இ) கிருஷ்ணபிள்ளை. P.
(ஆ) கிருஷ்ணபிள்ளை E.V.
(ஈ) கிருஷ்ண மேணன்.V.K.

7. நமது நாட்டின் தாரக மந்திரம் (சரியான விடை : அ/ஆ//ஈ)
(அ) ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து
(இ) சத்தியமேவ ஜெயதே
(ஆ) யதா யதா ஹி தர்மஸ்ய
(ஈ) ஆயுஷ்மான் பவ

8. சுதந்திர போராட்டத்திற்க்கு பயன்பட்ட ஒரு விழா (சரியான விடை : அ//இ/ஈ)
(அ) ஆயுதபூஜை
(இ) ரம்ஜான்
(ஆ) விநாயகர் சதுர்த்தி
(ஈ) குரு கோபிந்த்சிங் பிறந்தநாள்

9. 1947 ஆகஸ்ட் 15 அன்று மூவர்ண கொடியேற்றியவர் (சரியான விடை : /ஆ/இ/ஈ)
(அ) மௌன்ட்பெட்டன் பிரபு
(இ) சர்தார் வல்லபாய் படேல்
(ஆ) ஜவஹர்லால் நேரு
(ஈ) மஹாத்மா காந்தி

10. தில்லி செங்கோட்டை யாரால் கட்டப்பட்டது (சரியான விடை : அ//இ/ஈ)
(அ) அக்பர்
(இ) பிரித்விராஜ் சௌஹான்
(ஆ) ஷாஜஹான்
(ஈ) திப்புசுல்தான்

இதிலிருக்கும் கேள்வி-பதில் பற்றிய தொடர் பதிவு அடுத்த ஒரு வாரத்திற்க்கு. அடடா! அப்போ "விடை" எப்போதுன்னு நீங்கள் கேட்பது எனக்கும் கேக்குது!(இங்கே விடைன்னா எருது ன்னு சொல்லப்டாது :-).)இந்திய நேரப்படி சனி மாலை 6.00 மணிக்கு.

12 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ அப்படியா அப்ப சரியா சனிக்கிழமை 6.01 மணிகுக்கு வந்து பார்க்கிறேன்.. :)

வஜ்ரா said...

1. ஆ
2. இ
5. ஈ
6. ஈ
7. இ
8. ஆ

குமரன் (Kumaran) said...

ரெண்டு மூனு கேள்விகளுக்குப் பதில் தெரியுது. எல்லா பதில்களையும் போட்ட பின்னாடி வந்து பாத்துக்கிறேன். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதென்னபா! கே.ஆர்.எஸ். மட்டும் தான் புதிரா? புனிதாமா?-ன்னு சொல்லி//

ஏன்பா சிவா, நீ மருத தானே?
திருவிளையாடல் தருமி தானே நானு? எனக்கு கேள்வி மட்டும் தானப்பா கேட்கத் தெரியும்! அதுக்கும் போட்டியா கெளம்புற...சரி பரவாயில்லை! ஆனா பதில் சொல்லச் சொன்னா எப்படிப்பா? நியாயமா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

1.(அ)-இரண்டு தாமரைகள் மட்டுமே உள்ளன.
2(இ) மாராத்தி
3(ஈ) ஓலெடி பார்வதிசம்
4(ஈ) R. S. ஹுக்கேரிகர்
5(ஈ) இரங்கராஜன் குமாரமங்கலம்
P.T. Rajan nnu pathivil irukku pa!
rendume seri thaan! pt rajan justice party-former chief minister-aaana freedom fighter illa
6(அ) கிருஷ்ணய்யர். V.R.
7(இ) சத்தியமேவ ஜெயதே
8(ஆ) விநாயகர் சதுர்த்தி
9(ஆ) ஜவஹர்லால் நேரு
10(ஆ) ஷாஜஹான்

சிவமுருகன் said...

கே.ஆர்.எஸ்!

கலக்கிட்டேள்!
4,6,9 தவிர மற்ற விடைகள் சரி. சீக்கிரம் சொல்லுங்க இன்னும் ஒரு வாரம் நேரம் இருக்கு.

//இந்திய நேரப்படி சனி மாலை 6.00 மணிக்கு.//

சனி மாலைன்ன்ய் தான் சொன்னே எந்த சனிக்கிழமைன்னு சொல்லவில்லையே :-)!

கவலைபடாதீங்க இன்றே சொல்லிருவோம்!

சிவமுருகன் said...

வாங்க கயல்விழி!

//ஓ அப்படியா அப்ப சரியா சனிக்கிழமை 6.01 மணிகுக்கு வந்து பார்க்கிறேன்.. :)//

இதெல்லாம் அநியாயம்! கொஸ்டின் அவுட் ஆகியும் பதில் சொல்லாட்டி! --ரொம்ப ஓவர்!.

சிவமுருகன் said...

//ரெண்டு மூனு கேள்விகளுக்குப் பதில் தெரியுது. எல்லா பதில்களையும் போட்ட பின்னாடி வந்து பாத்துக்கிறேன். :-)//

அண்ணா, அதையே சொல்லிடுங்க!

சிவமுருகன் said...

வஜ்ரா!

வாங்க! நல்லாஇருக்கீங்களா? கல்யணத்துக்கப்பறம் இப்போதான் பதிவு பக்கம் பார்க்கிறேன்.

நீங்கள் 1,2,5,6,7,8 கேள்விகளுக்கு விடைகள் சொல்லிருக்கீங்க! 1,6 தவிர மற்ற அனைத்தும் சரி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

9.
(அ) மௌன்ட்பெட்டன் பிரபு

6. (அ) கிருஷ்ணய்யர். V.R. - ivaru communist porathula kalanthukittavaru. aanaa freedom fighteraa?
(இ) கிருஷ்ணபிள்ளை. P. - ivaru freedom fighter thaan...periyar kooda vaiok porathula kalanthukittavar vera
(ஆ) கிருஷ்ணபிள்ளை E.V. - ivarao? ivar verum malayala ezhuthaalar mattume
(ஈ) கிருஷ்ண மேணன்.V.K. - participated in annie besant's home rule movement

seri...ippothikku answer
(ஆ) கிருஷ்ணபிள்ளை E.V

Kannabiran, Ravi Shankar (KRS) said...

4. (இ) கபா ராகாவேந்திரராயரு

சிவமுருகன் said...

சரியான விடைகள்
1.(அ)
2.(இ)
3.(ஈ)
4.(இ)
5.(ஈ)
6.(ஆ)
7.(இ)
8.(ஆ)
9.(அ)
10.(ஆ)

விளக்கங்களை அருமையாகா கே.ஆர்.எஸ் சொல்லிவிட்டார். (கூகிள் ஆண்டவர் உபயம் தானே கே.ஆர்.எஸ்)