இப்பதிவில் சிவசங்கரனின் அவதாரமான அனுமனை தரிசிக்கிறோம். செந்துரத்தை தன் உடல் முழூவதும் பூசி, ராம காதைகளை கேட்டு கொண்டிருக்கும் அந்த ராம பக்தன் இதோ, தேவ சிற்பி விஸ்வகர்மாவால் செதுக்கப்பட்டு, ஓரே இரவில் கிடைக்கபெற்ற அனுமனுனின் சிலை, பார்க்கவும் கண்கோடி வேண்டுமே, இதை பதிக்க என் முன்னோர் என்ன தவம் செய்தனரோ.
வெற்றிலை மாலை சாற்றியும், எள் விளக்கேற்றியும் வணங்குகின்றனர்.
ஆண்களும்...
பெண்களும்...
குடும்பமாகவும்... குழுக்களாகவும்... இவரை வேண்டுவது சிறப்பு. இவரை ஆஞ்சனேயர் துதி செய்து வலம் வருவோம். இவருக்கு எதிரில் சொக்கநாதரின் பிட்டுக்கு மண்சுமந்த லீலை உள்ளது.
மேலும் சில படங்கள்
அண்ணன் குமரன் எழுதிய கம்பராமயணம் ஸ்லோகம் இங்கே.
நன்பர் ரவிசங்கர் கண்ணபிரானின் (KRS) சிறப்பு பதிவு இங்கே.
14 comments:
"மதுர"மான தரிசனம்!
பக்தனின் பக்தர்களையும் தரிசனம் செய்து வைத்தீர்கள்! நன்றி சிவமுருகன்!!
புகைப்பட சுலோகம் என்று சொல்லலாமா? :-) அருமை!
Happy Birthday Hanumanthayya!
இன்னும் பல மீனாட்சி அம்மன் கோவில் படங்களை இப்பதிவகத்தில் தொகுத்துள்ளேன். கோவிலில் உள்ளே வலம் வருவது போல் உங்களுக்கே தோன்றும்.
நன்றி KRS.
நன்றி சிவமுருகன்....ஸ்வாமி சந்நதி அனுமனை தரிசிக்க உதவியதற்க்கு....
மெளலி........
நன்றி மௌலி.
மீனாட்சி கோவில் சுவாமி சன்னதி வெளிப்பிரஹாரத்தில் இருக்கின்ற உணர்வு ஏற்பட்டது!
படத்தில் இருப்பது வெண்ணைக் காளி அருகே இருக்கும் ஆஞ்சநேயர்தானே சிவ முருகன்?
ஹரிஹரன் சார்,
//மீனாட்சி கோவில் சுவாமி சன்னதி வெளிப்பிரஹாரத்தில் இருக்கின்ற உணர்வு ஏற்பட்டது!
படத்தில் இருப்பது வெண்ணைக் காளி அருகே இருக்கும் ஆஞ்சநேயர்தானே சிவ முருகன்? //
அவரே தான்.
மேலும் படங்கள் மனற்கேணி பதிவில் உள்ளன சுட்டியில் சென்று தரிசியுங்கள்.
நன்றி.
இந்த ஹனுமார் தானே வளர்கிறார் என்று சொல்வார்கள்? சரியா சிவமுருகன்? நம்ம ஊருக்குச் சென்று வந்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். சிறு வயதில் இவரை வணங்குவதை விட இவர் மேல் அப்பியிருக்கும் வெண்ணையை கொஞ்சமே கொஞ்சமாக எடுத்து வாயில் வைத்துக் கொள்ளவே அதிக துடிப்பு இருக்கும். :-)
ஆமாம் அண்ணா. இவரே தான். கடந்த முறை கூட நீங்கள் கேட்டீர்கள். இவருக்கு ஒரு வெள்ளி கவசம் இருந்ததாம் அதை ஆறு மாதம் தான் அணிவிக்க முடிந்ததாம், பிறகு அது பத்தவில்லையாம் என்ற தகவலும் தந்தேன். நீங்க படித்தீர்களா?
நன்றி.
பரவசப்படுத்தும் படங்களுக்கு நன்றி. அனுமார் சமூக சக்தியாக உருவெடுத்து அதர்மத்தை பூண்டோ டு வேரறுக்க பிரார்த்திப்போம்.
வாங்க நீலகண்டன்,
நிச்சயமாக அவரால் எப்படி அன்று அநீதி எரிந்ததோ, அதே போல் இன்றும் ஆகும் அந்த கேசரி நந்தன், ராமபக்தன் நம்மை காப்பான்.
நன்றி.
Hi Buddy,
I am writing from my friend's Blog. Keep your Devotional work going. Very nice photographs. Marvellous. Being an individual nearby Namakkal, I got very much attracted to your 'Anjaneyar work'.
Jai Anjaneya, Ram Ram.
May God Bless. Senthil EG Iyappan.
Thank you Senthil.
சிவமுருகன்,
அருமையான படம்...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல...
sivamurugan avargale...
yeh as u said, many sites talk abt chithirai as meenakshi kalyanam.. i guess what the book with says is wrong. Did you find anything out after that??
Post a Comment