Saturday, December 09, 2006

குறும்பு

ஆன்மீக குறும்பு
ஆன்மீகத்தில் குறும்பு என்று தனியாக ஒரு பெரிய வலை பூவே செய்யலாம், எல்லாம் அந்த பேரருளான் ஒரு நாடக தானே. அவன் செய்யும் நாடகங்கள் சற்று சந்தோஷம் செய்ய வைக்கிறது, சற்று அதிகமாக திக்கு முக்காடவைக்கிறது, சில சமயம் அதை உரசி பார்க்க எத்தனிக்கும் போது வரும் ஒரு வித சங்கடமமும் என்று எல்லாம் ஒரு வித்யாசமாக ஏற்படுவதும் ஒரு விதமான ஆன்மீக குறும்பு தானே.

ஆன்மீக குறும்பு பற்றி எழுதும் போது யாருடைய குறும்பை முதலில் இடுவது என்று ஒரு பெரிய போராட்டமே நடந்து விட்டது. பகவான் ரமணரின் குறும்பை சொல்லி மாளாது. சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
ஒரு முறை அவரை பார்க்க இந்தியாவிற்கான ஒரு வெளிநாட்டு தூதர் வந்தார். அவர் இருந்த நிலையை கண்டு சற்றே ஏளன செய்த அவர் என்னிடம் ஏதாவது கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன் என்றார். எப்போதும் இது போன்ற மகான்களிடம் நம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வோம் ஒருவர் தம்மிடம் வந்து கேட்க்கும் போது கசக்கவா செய்யும். (ஆராரோ ஆரிரோ படத்தில் பானுப்பிரியா கேட்பது போல்) சரி ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்படி கேட்டார் “நீ யார்?”. எத்தனை பெரிய கேள்வி ஆன்மீகத்தில் கொட்டை போட்டவர்களே பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி. புத்த மதத்தில் இந்த கேள்வி தான் முதலில் விடை காணும் இலைக்கை(task) தருவர் அதிலேயே அவருடைய பாதி ஆயுள் முடிந்து விடும். நம் தூதர் சொன்னார் “நான் ஆல்பர்ட் வில்ஸ்மன்” என்றார், அதற்க்கு “அது உங்களுடைய பெயர்”. “நீ யார்?”. “நான் அம்பாஸிடர் (தூதர்)”, அது உங்களது பதவி”, “நீ யார்?” என்று மீண்டும் கேட்டார் அவரும் பல பதில்கள் சொன்னார் தன் மனைவியின் கணவன் என்றார் அது ஒரு உறவு என்றும், தன் தந்தையின் மகன் என்றார், இன்னும் எத்தனையோ பல பதில் சொன்னார், அதில் இருவரும் திருப்தி அடையாமல் இருந்தனர், கடைசியில் ஆல்பர்ட் மகரிஷியின் காலில் விழுந்து எனக்கு தெரியவில்லை நீங்களே சொன்னால் கேட்டு கொண்டு சந்தோஷ படுவேன் என்றார். அதற்க்கு அவர் “அதை தேடி தான் உலக மக்கள் ஓடுகின்றனர். சிலர் இருக்கும் சூழலையே நம்பி அமர்ந்து விடுகின்றனர் சிலர் திருப்தியில்லாமல் ஓடுகின்றனர். அந்த ஓட்டம் உள்ளவரை உலகம் சுற்றிக் கொண்டிருக்கும். இது தான் ரகசியம்.” என்று சொல்லி முடித்தார். ஆல்பர்ட் அடைந்த சந்தோஷத்திற்க்கு அளவேஇல்லை.

என்னுடைய குருநாதர் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஜோக்கிற்க்கு கூட ஒரு பெரிய இடம் தந்திருப்பார். அவர் நடத்தும் வகுப்புகளில் நிச்சயமாக ஒரு ஜோக் இருக்கும், யோகா வகுப்பில் என்ன ஜோக் என்று நினைக்க தோன்றும் ஆனால் பாருங்க ஹாஸிய யோகம் என்று அதையும் ஒரு யோகமாக மாறிவிட்டது. தமது வகுப்புகளில் இது போன்ற நகைச்சுவை சம்பவங்களுக்காவே “சங்கரன் பிள்ளை” என்ற ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கியுள்ளார். சங்கரன் பிள்ளை செய்யும் குறும்புக்கு அளவே இல்லை. இதை பற்றி அவருடைய ஆனந்த விகடனில் வந்த மற்றும் வருகின்ற தொடர்களான “அத்தனைக்கும் ஆசைப்படு” மற்றும் “உனக்காவே ஒரு ரகசியம்” போன்ற தொடர்களில் நீங்கள் காணலாம். ஒரு சின்ன சாம்பிள்.

எதையும் அளவோடு செய்ய வேண்டும் என்று சொல்வதற்க்காக சத்குரு சொல்லும் ஒரு சங்கரன் பிள்ளை சம்பவம். ஒரு முறை சங்கரன் பிள்ளை தன் மகனை அழைத்துக் கொண்டு எவ்வளவு சாராயம் குடிக்கலாம் என்று உனக்கு தெரியவில்லை அதை உனக்கு சொல்லி தருகிறேன் என்று சாராய கடை நோக்கி சென்றார். இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர். இரு முறை ஏதோ ஒரு பானத்தை குடித்த சங்கரன் பிள்ளை தன் மகனிடம் மிகவும் நிதானமாக “இதோ பார் குடிப்பதும் ஒரு கலை, எப்போது நிறுத்த வேண்டும் என்றால் அதோ அங்கே தெரியும் இருவர் எப்போது நால்வராக உனக்கு தெரிகிறதோ அப்போது குடிப்பதை நிறுத்தி விட வேண்டும்”. அவருடைய மகனும் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரும்பி பார்த்தான் ஆனால் அங்கே ஒருவர் தான் அமர்ந்திருந்தார். உடனே தன் தந்தையை அழைத்துக்கொண்டு அக்கடையை விட்டு வெளியேறினான்.
இது போல் பல கதைகள் வரும் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு நீதியோ அல்லது போதனையோ பொதிந்திந்திருக்கும்.

இந்திய வரலாற்றில் குறும்புக்கு பேர் போனவர் என்று கேட்டால் கிருஷ்ண தேவராயரின் அரண்மனையில் இருந்த தெனாலி ராமன் முதலில் நினைவுக்கு வருவார். விகடகவி என்று என்ற அழைக்கப்பட்ட கோபத்தின் உச்சமாம் அந்த காளியையே சிரிக்க வைத்த அந்த விகடனின் குறும்பு ஒன்று இரண்டல்ல, அனேகம், எதையோ செய்து வேறு எதையோ உணர வைப்பதில் தெனாலி ராமனுக்கு நிகர் தெனாலி ராமனே. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று உணர்ந்தவன் ராமன். எல்லாரும் எல்லாமும் பெருவதில்லை அதே போல் ஒருவரிடத்தில் ஒன்றும் இல்லாமல் இருந்து விடுவதில்லை என்று உணரவைப்பதற்க்கு அவை முக்கிய மந்திரி அப்பாஜி என்றோ, மாமன்னர் கிருஷ்ணதேவ ராயர் என்றோ, அல்லது வெளிமனிதர்களோ என்ற எந்த பேதமும் தெனாலி ராமனுக்கு இருப்பதில்லை.
இக்கரையில் குறும்பு செய்து உணரவைப்பது தெனாலி ராமன் என்றால் அக்கரையான அமீரகத்தில் அதே போல் முல்லா நஸ்ருதீன்.இவரும் குறும்பு குறைவில்லாதவர். தம் மனதில் உள்ளதை அப்படியே பிறரிடம் சொல்பவர். எதற்க்கும் எந்த பேதமும் பாராதவர்.
இன்னும் சற்று பின்னோக்கி சென்றால் ஆன்மீகத்தில் – அரசியலில் குறும்புகளை கண்டோமானால் கண்ணனின் குறும்பு பேர் போன இதிகாச குறும்பு. குழந்தையாக் மண்ணை தின்றதாகட்டும், வாயை திறந்து ஈறேழு லோகத்தை காட்டியதாகட்டும், வெண்ணை திருடி தின்றதாகட்டும், தயிர் பானைகளை உடைத்தது, பாவமாய் தன் தாயிடம் ஒன்றும் அறியாதவன் போல் நடித்ததாகட்டும் என்று இன்னும் எத்தனை எத்தனை லீலைகள் எத்தனை எத்தனை படிப்பினைகள் எல்லாம் அனுபவிக்க ஒரு பிறவி போதாது, அதை அனுபவித்து எழுதியவர்களின் எழுத்துக்களை படிக்க ஏழு பிறவிகளும் குறைவே. கண்ணனும் வளர்ந்து பிறகும் ஜராசந்தனை கொல்லும் சமயம் குறும்பாக பீமனுக்கு சமிக்ஞை செய்வதாகட்டும் பாரத போர் என்று வந்த பிறகு அர்ஜுனனை காக்க சூரியனையே மறைத்ததாகட்டும் என்று அவனது குறும்பிற்க்கு ஒரு அளவே இல்லை. இத்தனை அரசியல் குறும்புகள்(தந்திரங்கள்) செய்து தர்மத்தை நிலை நாட்டினார்.

தமிழ் வேதமான திருக்குறளில் வரும் சில நகைச்சுவையை பற்றி படிக்கும் சமயம் திருவள்ளுவரும் குறும்பிற்க்கு சில உதாரணங்களை சொல்லி தமது இடுக்கணழியாமை என்ற அறுபத்து மூன்றாவது அதிகாரத்தில் கஷ்டகாலத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்துள்ளார். மேலும் மக்கட் செல்வம் செய்யும் குறும்புகளை காண தாம் செய்த தவம் என்று சொல்லி குறும்பு வாழ்க்கைக்கு தேவையான ஒன்று என்று அடித்து சொல்கிறார்.

அப்பேற்பட்ட குறும்புகள் நம் இளைய தலைமுறையினர் மத்தியிலும், சினிமாவிலும் எப்படி புரள்கிறது என்பதை அடுத்த பதிவில்.

3 comments:

அரை பிளேடு said...

பெரிய பெரிய மகானோட கர்த்தெல்லாம் சொல்றீங்கோ..

ரமணரு கேட்ட நான் யாருன்ற பெரிய கேள்வி குறும்புலயா வரும்..
அது முயுக்க முயுக்க நமக்கு பிரியமுடியாத தத்துவம்பா...

தத்துவத்தை புடிச்சு எயுதிட்டு குறும்புன்னு சொல்றது அக்குறும்பா தெரில..

ஆனா படிக்கறதுக்கு ரொம்ப நல்லாவே கீது.... இத ஆன்மிகம்னு கிளாஸிபை பண்ணா நல்லாவே இருக்கும்.....

சிவமுருகன் said...

வாப்பா அரை பிளேடு,
எப்படி கீர?

ஏம்பா அரை பிளேடு,

//ஆனா படிக்கறதுக்கு ரொம்ப நல்லாவே கீது....//

ரொம்ப ஸோக்கா கீதுபா நீ வந்து கமென்டு குத்தது. ரொம்ப தாங்க்ஸ்பா.

தோ பாரு, நமக்குன்னு எத்த எயிதி வச்சாங்களோ அத்த நமக்கு வாய்க்றத மாத்த முடியாது. சரியா. அத தான் மகான்க குறும்பா சொன்னத இங்க வெச்சேன்பா.

ENNAR said...

இதைத்தான் சாக்ரட்டீஸ் உன்னையே நீ அறிவாய் உன்னையே நீ அறிவாய் என்றாரோ?