Sunday, December 03, 2006

குறும்பு

குறும்பு என்ற வார்த்தையை கூட ஒரு குறும்பா சொல்லி பாருங்க அதுல வர்ர குசும்பே தனி. இது போன்ற ஒரு குறும்பான ஒரு தொடக்கத்தை இந்த மாதத்தில் வருடத்தில் நினைவில் இருந்ததையும் மேலும் சில கற்பனை கலந்து ஒரு குறும்பான வாரமாக்கலாம் என்று நினைத்தேன் பதிக்கிறேன்.

குறும்பு என்றால்...

குறும்பு என்ற சொல்லின் குறுகிய கால கட்டத்தில் இன்பத்தை வரவழைத்து, குறுகிய காலத்தில் நினைவில் நின்று வாழ்க்கை முழுவதும் அவ்வப்போது நினைவில் வந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு சிறு சம்பவம் குறும்பு என்று சொல்லியிருப்பார்களோ!

குறும்பின் விளைவு...

ஆரம்பத்தில் அதை பார்த்து சிரித்து, பின் அதையே ஒரு நிகழ்வாக கருதி மறக்க நினைத்து கடைசியில் எப்போதோ எங்கோ அதே போல் ஒரு சம்பவம் நடக்கும் போது மீண்டும் நம் மனதை ஆக்ரமிப்பது குறும்பின் விளைவு.

குறும்பின் வகை...

சிறில் அவர்கள் பல வகைகளை சொல்லியிருந்தார். மேலும் சில வகை

சிறுவர்கள் செய்வது அறியாகுறும்பு
வாலிபர்கள் செய்வது விஷமக்குறும்பு
உறவுக்குள் செய்வது கலாட்டாகுறும்பு
நட்ப்புக்குள் செய்வது தினக்குறும்பு

மேலும் பழமொழி குறும்பு, வியாபர குறும்பு, அரசியல் குறும்பு, கல்லூரி குறும்பு, வயோதிக குறும்பு, சமயோசித குறும்பு என்று பல நிலைகளில் குறும்பின் தன்மை மாறினாலும் குறும்பின் தாக்கம் மாறுவதில்லை. இரண்டு நிமிடம் கண்களை மூடுங்கள் எத்தனையோ எண்ணங்கள் வரும் அதில் அதிகபட்சமாக உங்களை சிரிக்கவைத்த குறும்பு சம்பவங்கள் வராமல் இருக்காது.இது போன்ற சம்பவங்கள் சமயத்தில் சிரிக்க வைத்து நம்மை பைத்தியமோ என்று பிறரை எண்ண வைத்துவிடும்.

குறும்பு என்று தேன்கூட்டில் டிசம்பர் மாத தலைப்பை கொடுத்தாலும் கொடுத்தார்கள் இனி புதிதாக ஒரு போட்டி குறும்பு என்று உருவாக காத்துள்ளது. பலவகையான எழுத்துரு செயலிகளை கொண்டு நம் பதிவுலக நண்பர்கள் குறும்பிட ஆரம்பித்து விட்டனர். எல்லாம் அடுத்த 15-20 நாட்களுக்கு தான் என்று எண்ணும் போது கலங்கினாலும், மேலும் சில வலை நன்பர்கள் எப்போதும் போல் குறும்படித்து கொண்டிருப்பார்கள். பிறகு சில வாரத்தில் இயல்பு நிலை(?) திரும்பி பல சிடுசிடுக்கும் விஷயங்களை அலச தயாராய் உள்ளனர். ஏதோ சிறில் அவர்கள் புண்ணியத்தில் அடுத்த சில தினங்களுக்கு குறும்புக்கு குறைவிருக்காது என்று நம்பலாம். இப்புதிய முயற்ச்சியில் பல புதிய நட்பு மலரட்டும், பழய நட்பு பலமாகட்டும் அவரவர் உட்நட்புகள் பிறரோடு பலமாகட்டும் அவர்தம் நட்பை இணைக்கும் பாலமாகட்டும்.

அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவியரசர் ஒரு வாசகம் சொன்னார். தற்போது விஞ்ஞானம் நிலவில் காலடி வைத்து விட்டது. ஆனால் அதில் பயணிக்கும் வின்வெளி வீரன் முதலில் சர்ச்சுக்கு சென்று விட்டு தான் பிறகு வின்கலத்திற்க்கு செல்கிறான் என்றால் ஆன்மீகத்தில் எதோ ஒரு பிடிப்பு இருக்க தான் செய்கிறது. நானும் அதையே செய்கிறேன்.

ஆன்மீகத்திலும் பல குறும்புகள் உள்ளன அதை பலர் தமது சொற்பொழிவிலும், பல கட்டுரைகளிலும் கையாண்டிருப்பார்கள். திருமுருக கிருபாநந்த வாரியார் அவர்களும்,தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களும், இளசை சுந்தரம் அவர்களும், முனைவர் ஞானசம்பதம் அவர்களும் மேலும் பல அறிஞர்களும் சொல்லியிருப்பதை கேட்டு, படித்து இருப்போம். அடுத்த பதிவில் ஆன்மீக குறும்பையும், மேலும் சில குறும்பு பதிவுகளும் இவ்வாரத்தில்.

5 comments:

VSK said...

:))

சிவமுருகன் said...

நன்றி SK சார். :)

நாமக்கல் சிபி said...

நல்ல கட்டுரை!

:))

கருப்பு said...

பார்ப்பனர்கள் பெரியாரைக் கரித்துக் கொட்டுவது எந்தவகை குறும்பு?

அக்குறும்பு.

அரை பிளேடு said...

டெபனிஷன் ஆப் குறும்பு
எஃபக்ட்ஸ் ஆப் குறும்பு
டைப்ஸ் ஆப் குறும்பு
ப்ரீப் எக்ஸ்ப்ளனேஷன் ஆப் குறும்பு

ஐ அக்ரீ... ஐ அக்ரீ.. திஸ் எஸ்ஸே ஈஸ் ஆல் அபவுட்டு குறும்பு..

எக்சாம்ல குறும்புன்ற பேர்ல கட்டுர எயுதுங்கோன்னு கேட்டா ஒரு ஸ்டூடண்டு எயுதுற மாதிரி எயுதிக்கிறீங்கோ..

நானும் வாத்யார் மாறி திருத்தி பத்துக்கு ஒம்பது மார்க் குடுக்கறேன்...