Thursday, December 07, 2006

குறும்பு

கலைவாணர் என்.எஸ்.கே. குறும்பிற்க்கு பெயர் போனவர். அவர்போல் குறும்பு செய்தவர்கள் குறைவு என்று சொல்லமுடியாது. இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு சமயம் அவர் ஓட்டலில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த கால கட்டத்தில் வேண்டுதலின் பேரில் தோசைக்கு சக்கரை தருவது வாடிக்கை. ஆனால் போர் காரணமாக அன்று முதல் தோசைக்கு சக்கரை தருவதில்லை என்று என்.எஸ்.கே. சாப்பிட்ட ஓட்டல் நிர்வாகம் முடிவெடுத்து ஒரு அறிவிப்பு பலகையில் “இன்று முதல் தோசைக்கு சக்கரை கிடையாது” என்று அறிவிதிருந்தது.

இருந்தாலும் கலைவாணர் சர்வரிடம் தான் கேட்ட தோசையுடன் சக்கரை வேண்டுமென கேட்டார். அப்போது சர்வர் சற்றே ஆனவமாக போர்டை பார்க்கும் படிகேட்டுக் கொண்டார். உடனே கலைவாணர் மேலும் ஒரு தோசை ஆர்டர் செய்தார். அந்த தோசை வரும் வரை காத்திருந்து. அந்த தோசை வந்தவுடன் அதற்க்கு சக்கரை கேட்டார். மறுபடியும் அதே ஆனவத்துடன் பலகையை காட்டினார் சர்வர். அதை பார்த்து எங்கே படி என்றார் “இது வேறயா என்று முணுமுணுத்த சர்வர் படித்தார். என்ன சொன்ன “இன்று முதல் தோசைக்கு சக்கரை கிடையாது தானே”, இது முதல் தோசையல்ல இரண்டாவது தோசை என்று கேட்டார். அவ்வளவு தான் வயடைத்து போன சர்வர் சக்கரை கொடுத்து விட்டு முதல் காரியமாக பலகை வாசகத்தை “இனி மேல் தோசைக்கு சக்கரை கிடையாது” என்று மாற்றினார். அவ்வளவு தான் இதற்காகவே காத்திருந்தவர்போல் சர்வரை தன்பக்கம் அழைத்து இரண்டாவது தோசைக்கும் சக்கரை கேட்டார்.மேலும் கீழூமாக பார்த்த சர்வர் மீண்டும் பலகையை காட்ட முன் போலவே படிக்க சொன்னார். சர்வர் படித்தார். என்ன சொன்ன “இனி மேல் தோசைக்கு சக்கரை கிடையாது தானே”, மேல் தோசைக்கு தானே சக்கரை கிடையாது நான் கீழ்தோசைக்கு தான் சக்கரை கேட்கிறேன் என்று சொல்ல மீண்டும் வயடைத்து போன சர்வர் சக்கரை கொடுத்து விட்டு பலகை வாசகத்தை “தோசைக்கு சக்கரை கிடையாது” என்று மாற்றி பலகையை ஒளித்து வைத்தார். கலைவாணர் சென்ற பிறகு அதை வாயிலில் மாற்றினார்.

கலைவாணரின் இந்த வார்த்தை ஜால குறும்பும், அவரது சிரிக்கவைத்து சிந்திக்க வைக்கும் திறனும் தான் நம்முடன் இன்றும் அமரராக வைத்திருக்கிறது.

8 comments:

dondu(#11168674346665545885) said...

இந்தக் காட்சியை ஒரு படத்தில் என்.எஸ்.கே. அவர்களே நடித்து பார்த்திருக்கிறேன்.

அதே போல விநாயகப் பெருமானை சனீஸ்வரன் பிடிக்க வந்த போது அவர் தான் சற்று வேலையாக இருப்பதாகவும் "நாளை வருகிறேன்" என்று ஒரு பலகையில் எழுதி தன் முதுகில் கட்டி விட்டு போகுமாறு சனீஸ்வரனைக் கேட்க அவரும் அவ்வாறே செய்து விட்டு சென்றார்.

அடுத்த நாளைக்கு சனீஸ்வரன் வந்து நிற்க பிள்ளையார் தன் முதுகில் எழுதப்பட்டிருப்பதைப் போல சனீஸ்வரன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்க, அதில் "நாளை வருகிறேன்" என்று இருக்க சனீஸ்வரன் திகைக்கிறார். ஆக, அவரால் விநாயகரை எப்போதுமே பீடிக்க இயலவில்லை என்பது புராணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவமுருகன் !
கலைவாணர் கூத்தை மிகரசித்தேன்; சொல்லின் செல்வர்
நன்றி
யோகன் பாரிஸ்

சிவமுருகன் said...

வாங்க வாங்க ராகவன் ஐயா,

//இந்தக் காட்சியை ஒரு படத்தில் என்.எஸ்.கே. அவர்களே நடித்து பார்த்திருக்கிறேன்.//

இது அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம் என்று அவரது உதவியாளர் எழுதிய கட்டுரையில் படித்தேன்.

"பிள்ளையாருக்கு சனி பிடிச்ச கதை" என்று சொற்றொடர் உள்ளதே அதன் மூல கதையை சொல்லியுள்ளீர்கள்.

சிவமுருகன் said...

நன்றி யோகன் ஐயா.

அரை பிளேடு said...

குறும்புன்னா இது குறும்பு..
கலைவாணரோட குறும்புன்னா சும்மாவா...

ஜி said...

அருமையான குறும்பு.

கலைவாணர் என்றாலே கலைவாணர்தான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அட
நம்ம கலைவாணர் ரொம்ப
"அக் குறும்பு" புடிச்சவரா இருக்காரே! (நோட் தி கேப் பிட்வின் அக் & குறும்பு) :-)

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். இப்பத்தான் உங்க குறும்பு பதிவுகள் ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு வருகிறேன். இந்த கலைவாணரின் குறும்பு நன்றாக இருக்கிறதே. தமிழை வைத்து விளையாடுவ்து பலருக்குப் பிடித்தது.